நான் 'லவ் யூ' சொன்னதும் அனிஷா ஓகே சொல்லவில்லை: விஷால்

By Siva

Recommended Video

அர்ஜுன் ரெட்டி பட நடிகையை மணக்கும் விஷால்- வீடியோ

சென்னை: அனிஷாவும், விஷாலும் எங்கு சந்தித்து காதல் ஏற்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.

நடிகர் விஷால் ஹைதராபாத்தை சேர்ந்த அனிஷா ரெட்டியை திருமணம் செய்ய உள்ளார். இந்த மாத இறுதியில் ஹைதராபாத்தில் அவர்களின் நிச்சயதார்த்தம் நடக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அனிஷாவுடன் காதல் ஏற்பட்டது குறித்து விஷால் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

அயோக்யா

அயோக்யா

நான் நடித்து வரும் அயோக்யா படத்தின் ஷூட்டிங் விசாகப்பட்டினத்தில் நடந்தது. அப்பொழுது என்னை சந்திக்க சிலர் வந்தார்கள். அதில் அனிஷாவும் ஒருவர். பெண்கள் சேர்ந்து மைக்கேல் என்ற ஆங்கில படத்தை தயாரிப்பதாகவும், அதில் அனிஷா ஹீரோயினாக நடிப்பதாகவும், அபூர்வா இயக்குகிறார் என்றும் என்னிடம் கூறினார்கள்.

வெளியீடு

வெளியீடு

விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் அந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் என்பதை தெரிந்து கொண்டேன். கதையும் விவசாயத்தை மையமாக கொண்டுள்ளது. இதனால் அவர்களின் படத்தை நான் வெளியிடுகிறேன் என்று வாக்குறுதி அளித்தேன். அந்த சந்திப்பில் தான் அனிஷா எனக்கு பழக்கமானார்.

கடவுள்

கடவுள்

அனிஷாவை பார்த்ததுமே பிடித்துவிட்டது. அவரை கடவுள் எனக்காக அனுப்பி வைத்துள்ளது போன்று உணர்ந்தேன். முதலில் நட்பாக பழகினோம். பின்னர் அந்த நட்பு காதலானது. நான் தான் காதலை முதலில் வெளிப்படுத்தினேன். நான் காதலை சொன்னவுடன் அனிஷா சம்மதம் தெரிவிக்கவில்லை. சில நாட்கள் கழித்தே ஓகே சொன்னார்.

நடிப்பு

நடிப்பு

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்க அனிஷாவுக்கு தடை விதிக்க மாட்டேன். நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகே திருமணம் என்றேன். அது வரை காத்திருக்கிறேன் என்றார் அனிஷா என விஷால் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X