என்னோட எத்தனை படம் ஃப்ளாப் ஆச்சு.. லால் சலாம் தோல்விக்கு நான் காரணமில்லை.. விஷ்ணு விஷால் ஓபன் டாக்!

சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் விரைவில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தொடந்து உங்கள் படங்கள் தோல்வியை தழுவி வருவதாக சொல்கிறார்களே, அதற்கு உங்களின் பதில் என்ன? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு விஷ்ணு விஷால் டென்ஷன் ஆகிவிட்டார்.

என்னோட எத்தனை படங்கள் ஃப்ளாப் ஆச்சுன்னு சொல்லுங்க என்று கேட்ட அவர், கடைசியா வெளியான என்னோட லால் சலாம் மற்றும் ஆர்யான் படங்கள் தான் ரொம்பவே அடிவாங்கியது என்றார்.

Vishnu Vishal breaks his silence on Lal Salaam and his Aaryan Movies Not Works Well

மேலும், லால் சலாம் படத்தின் ரிசல்ட் எல்லாம் தன்னுடைய கையில் இல்லை என்றும் அந்த படத்தில் எடுக்கப்பட்ட பல காட்சிகளே திரைக்கு வரவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியது பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில்: தனுஷை வைத்து '3' படத்தையும் கெளதம் கார்த்திக்கை வைத்து 'வை ராஜா வை' உள்ளிட்ட படங்களை இயக்கியும் வெற்றி பெறாத நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக இயக்குவதையே விட்டு இருந்தார். ஆனால், தனுஷ் உடன் விவாகரத்து ஏற்பட்ட நிலையில், மீண்டும் இயக்குநராக முடிவெடுத்த அவர் விஷ்ணு விஷால், விக்ராந்தை வைத்து எடுத்த படம் தான் லால் சலாம். தனது அப்பா ரஜினிகாந்தை கேமியோ ரோலில் நடிக்க வைத்த நிலையிலும், அந்த படம் படுதோல்வியை சந்தித்தது.

2 படங்கள் தான் தோல்வி: 2009ம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானாவர் தான் விஷ்ணு விஷால். குள்ளநரிக் கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். ராட்சசன் படத்துக்குப் பிறகு அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது கட்டா குஸ்தி திரைப்படம் தான். அந்த படத்தைத் தொடர்ந்து அவர் நடித்த லால் சலாம் மற்றும் ஆரியன் படங்கள் தோல்வியை தழுவிய நிலையில், கடைசியாக தனக்கு 2 படங்கள் மட்டுமே பின்னடைவை ஏற்படுத்தியது என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார்.

லால் சலாம் தோல்வி என் கையில் இல்லை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் தோல்வி அடைந்ததற்கு தான் காரணமில்லை என்றும் அந்த படத்தின் முடிவு தனது கைகளில் இல்லை என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும், அவர் நடித்த பல காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை என்கிற குற்றச்சாட்டுகளையும் முன் வைத்துள்ளார்.

ஆரியன் கிளைமேக்ஸ் சர்ச்சை: கடைசியாக பிரவீன் கே இயக்கத்தில் விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த ஆரியன் திரைப்படமும் கிளைமேக்ஸ் சர்ச்சை காரணமாக ரசிகர்களுக்குப் பிடிக்காமல் போய் விட்டது என்றும் மலையாள படங்களின் தாக்கம் காரணமாக அப்படியொரு வித்தியாசமான கதையில் நடித்த நிலையில், அது ஒர்க்கவுட் ஆகவில்லை என்றுக் கூறியுள்ளார். வரும் ஜூலை 3ம் தேதி கட்டா குஸ்தி 2 திரைப்படம் மீண்டும் விஷ்ணு விஷாலுக்கு கம்பேக் வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X