Exclusive : கை நிறைய கதைகள் இருக்கிறது.. வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் அஜித்தை இயக்குவேன்: சிவா

மீண்டும் அஜித்துடன் படம் பண்ணுவது குறித்த தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார் இயக்குநர் சிவா.

Recommended Video

பிளாக் பஸ்டர் வெற்றிக்கு ரசிகர்களுக்கு நன்றி- சிவா பேட்டி- வீடியோ

சென்னை: கைவசம் நிறைய கதைகள் இருப்பதாகவும், வாய்ப்பு கிடைத்தால் அஜித்தை மீண்டும் இயக்குவேன் என்றும் இயக்குநர் சிவா கூறியுள்ளார்.

இயக்குநர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் நடித்துள்ள படம் விஸ்வாசம். கடந்த 10ம் தேதி ரிலீசான இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் சிவா ஒன் இந்தியாவிற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், அஜித்தை இயக்கிய அனுபவங்கள் குறித்துப் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது,

பாராட்டு:

பாராட்டு:

விஸ்வாசம் படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் பார்த்தவர்கள் எல்லோரும் ஒரேவிதமாக பாராட்டுகின்றனர். இது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக விஸ்வாசம் இருக்கும். அதேசமயம் அஜித் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி மாஸான படமாகவும் இது இருக்கும்.

பாக்கியம்:

பாக்கியம்:

வீரம், வேதாளம், விவேகம் என மூன்று படங்களில் அஜித்தை இயக்கியது மிகப்பெரிய பாக்கியமாக நினைக்கிறேன். நான்காவது முறையாக அவரது படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய விஷயம். அஜித் ஒரு தங்கமான மனிதர்.

அஜித்திற்கு பிடித்த படம்:

அஜித்திற்கு பிடித்த படம்:

விஸ்வாசம் கதையை கேட்டதுமே அஜித் சம்மதம் தெரிவித்துவிட்டார். ஏற்கனவே வந்த மூன்று படங்களைவிட விஸ்வாசம் தான் தனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என அவர் கூறினார். ஏனென்றால் இது அப்பா - மகள் சென்டிமெண்ட் சம்மந்தப்பட்டது.

கற்பனைக் கதை:

கற்பனைக் கதை:

விஸ்வாசம் படத்தில் வரும் தூக்குதுரை கதாபாத்திரம் முழுக்க முழுக்க கற்பனையே. அந்த கதாபாத்திரம் மட்டுமல்ல, மற்ற கதாபாத்திரங்களும் எனது கற்பனையில் உருவானது தான். படத்தில் நிறைய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அது படத்துக்கு வலு சேர்த்திருக்கிறது. எனக்கு எல்லா வகையான படங்களும் பண்ண வேண்டும் என்பது தான் ஆசை. அதன்படி தான் படங்களை செய்து வருகிறேன்.

மீண்டும் அஜித்:

மீண்டும் அஜித்:

இப்போது வரை விஸ்வாசம் படத்தில் தான் எனது முழு கவனமும் இருந்தது. படம் ரிலீசாகிவிட்டதால், இனிமேல் தான் அடுத்தப் படம் குறித்து யோசிக்க வேண்டும். கையில் நிறைய கதைகள் வைத்திருக்கிறேன். அஜித்துடன் அடுத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்றாலும், எனக்கு ஓகே தான்" என இவ்வாறு இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X