" பக்கம் நீயும் இல்லை" வைரலாகும் பாடல்.. விவேக் - மெர்வின் க்ளோஸ் கால் நிகழ்ச்சியில் பேட்டி!
சென்னை: இசையமைப்பாளர்கள் விவேக் & மெர்வின் இசையில் "என் பக்கம் நீயும் இல்லை" என்னும் ஆல்பம் பாடல் வைரலாகி வருகிறது.
பாடலை அனிருத், கார்த்தி, விஜய் சேதுபதி ஆகியோர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்
அது குறித்தும் இன்னும் பல கேள்விகளுக்கும் விவேக் & மெர்வின் க்ளோஸ் கால் நிகழ்ச்சியில் பதில் கூறியுள்ளனர்.

பிரிந்து இருப்பவர்களுக்காக
இந்த COVID ல் வந்த ஐடியா தான் "என் பக்கம் நீயும் இல்லை" பாடல் எனவும், இந்த கொரோனா தொற்றால் ஒன்று சேர முடியாமல் தவித்து பிரிந்து இருக்கும் எல்லாருக்காகவும் இந்த பாடலை ரிலீஸ் செய்ததாகவும் பேட்டியில் கூறியுள்ளார் விவேக்.

கு கார்த்தி வரிகளில்
கொரோனா தொற்று காலத்தில் ரிலீஸ் தேதியை முடிவு செய்யாமல் 2 மாதங்கள் ப்ளான் செய்து, சூழ்நிலைகளுக்கு ஏற்ற வரிகளுக்காக கு கார்த்தியை அழைத்து வரிகளை பெற்று பின்னர் பாடலின் படப்பிடிப்பை முடித்தோம் என பேட்டியில் கூறியுள்ளார் மெர்வின்.

பணியாற்றிய அனுபவங்கள்
லாக் டவுன் என்பதால் தங்களுடைய நண்பர்களான சித்தார்த் ( பா ரஞ்சித் உடன் துணை இயக்குனராக பணியாற்றியவர்), சந்தான கிருஷ்ணன் ( கபீர் சிங் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்) ஆகியோருடன் சேர்ந்து பணியாற்றிய அனுபவத்தை கூறியுள்ளார் விவேக்.

சுவாரசியமான கேள்விகள்
"என் பக்கம் நீயும் இல்லை" போன்ற பாடல்களை மென்மையான இசையில் தந்த விவேக் & மெர்வின் அதற்கான வரிகள் தந்த பாடலாசிரியர்களுக்கு இந்த பேட்டியின் மூலம் நன்றியை பதிவு செய்துள்ளனர். இது போன்ற இன்னும் பல சுவாரசியமான கேள்விகளுக்கு பதில் கூறியுள்ளனர். மிஸ் பண்ணாமல் இந்த பேட்டியை கண்டு களியுங்கள்.


Click it and Unblock the Notifications











