பேட்டியில் டிரஸ் மாத்த சொன்ன நடிகை நயன்தாராவா? மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிவிட்ட டிடி.. புது பஞ்சாயத்து!

சென்னை: தமிழ் தொலைக்காட்சிகளில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள தொகுப்பாளினி என்றால் அது டிடி என்கிற திவ்யதர்ஷினியைச் சொல்லலாம். தனது குழந்தை பருவத்தில் இருந்தே தொகுப்பாளினியாக இருந்து வரும் டிடி இப்போது தொலைக்காட்சிகளில் இருந்து விலகி, படங்களில் நடித்து வருகிறார். மேலும் சுதந்திரமான, வெற்றிகரமான ஒரு பெண் ஆளுமையாகவும் தன்னை தகவமைத்து வருகிறார். இவர் அண்மையில் கலந்து கொண்ட விருது வழங்கும் நிகழ்ச்சியில், அளித்த பேட்டி, மிகவும் அறிவார்ந்ததாக இருந்தது. இது திவ்யதர்ஷினி என்ற பெண் தன்னை எப்படி ஆளாக்கியுள்ளார் என்பதற்கு ஒரு துளி சான்று போல அமைந்தது.

அந்த பேட்டியில் நடிகை நயன்தாரா குறித்து அவர் பேசியது, இதற்கு முன்னர் இருந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருந்தது. அதாவது ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்னர், டிடி அளித்திருந்த பேட்டியில், நான் ஒருமுறை ஒரு நடிகையை பேட்டி எடுத்தேன். அப்போது நானும் அவரும் ஒரே மாதிரியான நிற ஒற்றுமை மற்றும் வடிவ ஒற்றுமை கொண்ட ஆடையை அணிந்திருந்தோம். உடனே அந்த நடிகை என்னை உடையை மாற்ற முடியுமா என்று கேட்டார். ஆனால், நானோ மாற்று ஆடை எதுவும் இல்லை என்று கூறிவிட்டேன் என்று கூறியிருந்தார்.

VJ DD Dhivyadharshini Put Full Stop To Controversy With Actress Nayanthara

டிடி பேட்டி: டிடி இவ்வாறு கூறியதும், பலரும் அவரது பழைய பேட்டிகள், இன்ஸ்டாகிராம் போஸ்ட்களை தேடிப்பார்த்து, டிடி-யிடம் இவ்வாறு கூறியது, நடிகை நயன்தாரா தான் என்று கூறினார்கள். டிடியின் பேச்சு மற்றும் அவரும் நயனும் இருந்த புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு பலரும் இது தொடர்பாக கிசுகிசுக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் டிடி சமீபத்தில் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் பேசும்போது, நயன் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஆனால் , தற்போது புதிய சர்ச்சையும் அத்துடன் உருவாகியுள்ளது.

நயன்தாரா: அதாவது அந்த பேட்டியில் அவர் பேசும்போது, " நான் இதற்கு முன்னர் அளித்த பேட்டியில் சொன்ன தகவலை வைத்து பலரும் நயன்தாரா மேடமை கடுமையாக விமர்சிக்கிறார்கள். என்னை தவறாக விமர்சிக்கும்போது, ஒரு கட்டத்தில் கடந்துவிடலாம். ஆனால் நான் சொன்னதை வைத்து சம்மந்தமே இல்லாமல் நயன்தாராவை விமர்சிக்கும் போது கஷ்டமாக இருக்கிறது. என்னை அப்படி சொன்னது நயன்தாரா கிடையாது.

VJ DD Dhivyadharshini Put Full Stop To Controversy With Actress Nayanthara

புது பஞ்சாயத்து: இதை சர்ச்சை எழுந்ததும் சொல்லியிருப்பேன். ஆனால் நயன் சொல்லி தான் நான் சொல்கிறேன் என திருத்து பேசியிருப்பார்கள். இதனால் மேலும் நயனுக்கு கெட்ட பெயர் வந்துவிடும் என்பதால் அமைதியாக இருந்தேன். அதனால்தான் இப்போது சொல்கிறேன். அண்மையில் நாங்கள் இருவரும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கூட நன்றாக பேசினார். அவர் வீட்டுக்குச் சென்ற பின்னர் எனது உடை நன்றாக இருந்ததது டிடி என்று மெசேஜ் அனுப்பினார். இது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார். தன்னை உடை மாற்றச் சொன்ன நடிகை நயன் இல்லை என்று டிடி விளக்கமாக சொல்லியுள்ள நிலையில், தற்போது இணையவாசிகள், உங்களை உடை மாற்ற சொன்னது யார் டிடி என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதனால் புது பஞ்சாயத்து தொடங்கியது போல் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X