அதை மட்டும் சொல்ல துணிஞ்சுட்டா.. பெண்கள் பயமே இல்லாம வேலை பார்க்கலாம்.. தியா மேனன் பேட்டி!

சென்னை: காஸ்டிங் கவுச் குறித்த கேள்வி உள்பட பல கேள்விகளுக்கு விஜே தியா மேனன் தடாலடியாக பதில் அளித்துள்ள வீடியோ தமிழ் பிலிமி பீட் யூடியூபில் வெளியாகி இருக்கிறது.

சன் மியூசிக் சேனலில் பிரபல விஜேவாக வலம் வந்த தியா மேனன், கிரேஸி கண்மணி, கால் மேல காசு உள்ளிட்ட பல ஷோக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

VJ Diya Menon’s special V Connect Chat!

வி கனெக்டின் லேட்டஸ்ட் எபிசோடில் பங்கேற்று சர்வ சாதாரணமாக தனது வாழ்க்கை குறித்தும், கடந்து வந்த பாதைகள் குறித்தும், நடிகையாக போவது குறித்தும் பல சுவாரஸ்யங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

அதன் இரண்டு பாகங்கள் நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சர்கார் படத்தின் ஆடியோ லாஞ்சை தொகுத்து வழங்கிய போது, நடிகர் விஜய்யை நீண்ட நேரம் அருகே பார்க்கும் வாய்ப்பு கிடைத்த சந்தோஷத்தையும் இந்த சாட்டில் பகிர்ந்து கொண்டார்.

தமிழ் மற்றும் மலையாள தொலைக்காட்சிகளில் விஜேவாக அசத்தி வரும் தியா மேனனுக்கு, வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் அனுபவம் ஏதும் ஏற்பட்டதா? என்ற கேள்விக்கு இல்லை என்றும், பெண்கள் 'NO' என்பதை அந்த விஷயத்தில் உரக்க சொல்ல ஒரு போதும் தயங்கக் கூடாது.

அப்படி சொல்லத் தொடங்கி விட்டால், நம்மிடம் யாரும் அது போன்ற பார்வையில் கூட நெருங்க மாட்டார்கள் என்றும் பணிபுரியும் பெண்கள் முக்கியமாக இந்த பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும், என்றும், நீங்கள் காட்டும் தயக்கம் தான் இது போன்ற கெட்ட எண்ணம் பிடித்தவர்களை சமூகத்தில் உருவாக்குகிறது என்றும் சரவெடியாக பேசியுள்ள இரண்டு பாகங்களையும் கண்டு மகிழுங்கள்!

More from Filmibeat

Read more about: interview பேட்டி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X