காதலர் தினம் மட்டுமல்ல.. எல்லா தினமும் எங்களுக்கு ஸ்பெஷல் தான்.. நக்ஷத்ரா பேட்டி!
சென்னை: செய்தி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்ற தொடங்கி பின்னர் சீரியல்களில் நடித்து நடிகையாக அறிமுகமானவர் நக்ஷத்ரா.
வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ் ,ரோஜா, மின்னலே, நாயகி உள்ளிட்ட பல சீரியல் தொடர்களில் நடித்து பிரபலமானவர் நக்ஷத்ரா.
நக்ஷத்ரா சமீபத்தில் Jeep வாகனத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியின் போது ஃபில்மி பீட் யூ டியூப் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டி வைரலாகி வருகிறது.

2021ம் ஆண்டு
2021ம் ஆண்டில் வாழ்க்கையின் ஓட்டம் குறித்து பேசிய நக்ஷத்ரா, எப்போதும் போல இந்த ஆண்டும் சிறப்பாக உள்ளதாகவும், நிறைய நல் உள்ளங்களிடமிருந்து வாழ்த்துக்கள் கிடைத்ததாகவும், அதன் பாசிட்டிவிட்டியினால் சந்தோசமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

எதிர்கால கணவர்
கடந்த ஜனவரி 22ம் தேதி நக்ஷத்ரா தனது காதலர் ராகவ்வை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தினார். அதனை சார்ந்து ரசிகர்களிடமிருந்து வந்த வாழ்த்துக்களால் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும், காதலர் தினம் மட்டுமல்ல எல்லா தினமும் தங்களுக்கு ஸ்பெஷல் தான் எனவும் கூறியுள்ளார்

சமையல் பேஃவரட்
தன்னுடைய காதலருக்கு தான் செய்யும் சமையல் மிகவும்
பேஃவரட் எனவும், தான் என்ன செய்தாலும் அதற்கு மிக பெரிய ரசிகர் தன்னுடைய காதலர் தான் எனவும், குறிப்பாக திரையில் நான் நடிப்பதை மிகவும் விரும்புவார் எனவும் பேட்டியளித்துள்ளார் நக்ஷத்ரா.

எல்லா தினமும் ஸ்பெஷல்
எல்லா காதலர் தினமும் ஸ்பெஷல் தான், எல்லாருக்கும் எல்லா நாட்களும் ஸ்பெஷல் தான் எனவும், காதலரை/காதலியை சார்ந்தது மட்டும் காதலர் தினமல்ல காதலை சார்ந்தது தான் காதலர் தினம் எனவும், சுற்றி உள்ளவர்களுடன் மகிழ்ச்சியோடு கொண்டாட ரசிகர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள் கூறினார் நக்ஷத்ரா.


Click it and Unblock the Notifications











