கல்யாணம் பண்ணுங்க லைஃப் நல்லா இருக்கும்.. விஜே பலோமாவின் செம ஜாலி பேட்டி!
சென்னை: எஸ்.எஸ். மியூசிக் பார்த்த 90ஸ் கிட்ஸ்களுக்கு கனவுக்கன்னியாக தெரிந்த விஜே பலோமாவின் செம ஜாலியான பேட்டி வெளியாகி வைரலாகி வருகிறது.
நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி அசத்தும் திறமை கொண்ட சென்னை பொண்ணு பலோமா, திருமணத்திற்கு பிறகு திடீரென எங்கே காணாமல் போய்விட்டார் என்று ஏங்கிய அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இந்த பேட்டி தற்போது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட் வி கனெக்டில் வெளியாகி இருக்கிறது.

திருமணம் செய்து கொண்டாலே பிரபலங்களின் வாழ்க்கை அவ்வளவு தான் என பலரும் கேலி கிண்டல் செய்வது போல, அவ்வளவு மோசமானது அல்ல திருமண வாழ்க்கை என்றும், கல்யாணம் பண்ணுங்க லைஃப் நல்லா இருக்கும் என செம மோட்டிவாக இந்த சாட்டில் பேசியுள்ளார் விஜே பலோமா.
மேலும், துபாயில் நடந்த 2.0 நிகழ்ச்சியில், ரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர். ரஹ்மான், அக்ஷய் குமார் மற்றும் எமி ஜாக்சனுடன் தான் எப்படி கலந்துரையாடினேன் என்பது குறித்தும் சுவாரஸ்யமாக பேசியுள்ளார்.
விரைவில் யூடியூப் தளம் அல்லது பிரபல மீடியாவில் தன்னை பார்க்கலாம் என்றும், அது தொடர்பான முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருவதையும் ஷேர் செய்துள்ள பலோமாவின் முழு பேட்டியையும் காண வீடியோவை க்ளிக் செய்யுங்க..


Click it and Unblock the Notifications











