தீபாவளியும் பொங்கலும் அக்டோபர் 10 தான்.. வேட்டையன் படம் குறித்து செம அப்டேட் சொன்ன ரக்ஷன்!
சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளியில் தொகுப்பாளராக வலம் வரும் ரக்ஷன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் துல்கர் சல்மான் உடன் இணைந்து நடித்து இருந்தார். அதன்பின்னர், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படம் முழுக்க ரஜினிகாந்த் உடன் இணைந்து வரக்கூடிய கதாபாத்திரத்தில் ரக்ஷன் நடித்துள்ள நிலையில், அதுபற்றி சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்களை ரக்ஷன் வெளிப்படையாக பேசியுள்ளார்.

ஜெய்பீம் படத்தை இயக்கிய த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
தீபாவளியும் பொங்கலும்: ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு வேட்டையன் திரைப்படம் வெளியானாலும் அந்த நாள் தான் தலைவர் ரசிகர்கள் அனைவருக்கும் தீபாவளி மற்றும் பொங்கல் என படத்தில் நடித்துள்ள குக் வித் கோமாளி பிரபலம் ரக்ஷன் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
தலைவர் கூடவே ஆடிட்டேன்: முதல் முறையாக தலைவருடன் இணைந்து விமானத்தில் சென்ற போது என்னால் நம்பவே முடியவில்லை. வாழ்க்கையில் இதுவே போதும் என நினைத்தேன். விமானத்தை விட்டு இறங்கியதும் சிட்டி ரோபோவுக்கு பல சிட்டி ரோபோக்கள் வந்து அட்டாச் ஆவது போல விமான நிலையத்தில் இருந்து வெளியே வருவதற்குள் 500 பேர் சூழந்துக் கொண்டனர். ஒட்டுமொத்த விமான நிலையமும் ரஜினி சார் பின்னாடி தான் நடந்து போகுது. வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடலில் அவருடன் ஆடிய அனுபவம் வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் தலைவர் முன்னாடி ஆடிய அனுபவங்கள் ஆடி முடித்து இறங்கி வந்ததும் தலைவர் கொடுத்த ஃபிளையிங் கிஸ் என எதையுமே மறக்க முடியாது என ரக்ஷன் கூறியுள்ளார்.
சில்லி ஃபெல்லோ: சூப்பர் ஸ்டாரிடம் போய் பேச சொல்லி பலரும் சொல்லிக் கொண்டிருந்தனர். ஒருமுறை அவரை சந்தித்து எல்லாரும் உங்க கிட்ட பேச சொல்றாங்க, ஆனால், எனக்கு என்ன பேசுறதுனே தெரியல ரொம்ப பயமா இருக்கு என்றேன். அதன் பின்னர் சகஜமாக அவர் என்னுடன் பேச ஆரம்பித்தார். சில்லி ஃபெல்லோ என்றும் இப்படித்தான் எப்போமே ஆக்டிவா எனர்ஜியா இருப்பியான்னும் கேட்பார் என்றார்.
பைக் சாகசம்: தன்னுடைய பைக் சாகச வீடியோக்களை ரஜினி சாரிடம் காட்டிய போது நம்ம படத்துலயும் இதே போல பண்ணுங்க என்றார். ஆனால், கதையில் அதற்கு இடமில்லை என்றாலும் தலைவர் மனதில் இடம் கிடைத்ததே போதும் என நினைத்துக் கொண்டேன். ஒரே படத்தில் ரஜினிகாந்த் சார், அமிதாப் பச்சன் சார், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் மேடம் என பல பிரபலங்களுடன் பணியாற்றிய அனுபவமே இந்த ஜென்மத்துக்கு போதும். ஞானவேல் சார் எதுக்குமே கோபப்பட மாட்டார். படத்தை வேறலெவலில் எடுத்துள்ளார். நிச்சயம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் காத்துக் கொண்டிருக்கிறது என ரக்ஷன் வேட்டையன் படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications