அய்யோ.. விஜய் என்னைப் பார்த்து.. நான் ஷாக்காயிட்டேன்.. மெய் சிலிர்க்கும் ரம்யா!

சென்னை : விஜே ரம்யா மாஸ்டரில் விஜய்யுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். விஜய் இவரைப் பார்த்து மேடம்னு கூப்பிட்டுட்டாராம்.. சொல்லிச் சொல்லி புல்லரிக்கிறார் ரம்யா.

Recommended Video

Master Audio Launch Special Update | Leela Palace | Thalapathy Vijay Speech

தொகுப்பாளர் மற்றும் நடிகை ரம்யா தற்போது மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் தளபதி விஜயின் பல படங்களின் இசை வெளியீட்டு விழாக்களை தொகுத்து வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழாக்களை தொகுத்து வழங்கி விட்டு தற்போது விஜயுடனே நடித்து வருவதால் ரம்யாவை பலதரப்பினரும் வாழ்த்தி வருகின்றனர்.

 இசை வெளியீடு

இசை வெளியீடு

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 15 என்று படக்குழுவால் கூறப்பட்டிருக்கிறது. இந்த இசை வெளியீட்டு விழாவை ரம்யாவே தொகுத்து வழங்கவும் வாய்ப்புகள் இருக்கிறது என்று பலரும் கூறி வருகிறார்கள். இந்த இசை வெளியீட்டு விழா நேரலையாக சன் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாக உள்ளது முக்கிய விஷயமாக பார்க்க படுகிறது.

 விஜய் நடிப்பு

விஜய் நடிப்பு

தற்போது மாஸ்டர் பட விளம்பரத்திற்காக பல நேர்காணல்களை சந்தித்து வருகிறார் ரம்யா. விஜய் ஆயிரக்கணக்கான மக்களின் முன்பு எந்த ஒரு தலைக்கனமும் இன்றி இயல்பாக நடிக்கிறார். அவர் இவ்வளவு உயர்ந்தும் அவர் இயல்பாகவே நடந்து கொள்கிறார் என்று ரம்யா கூறியுள்ளார். மேலும் மாஸ்டர் படத்தில் முதல் நாள் படப்பிடிப்பிலே விஜய் என்னை பார்த்ததும் கட்டி பிடித்து வாங்க மேடம் என்று கூறியதாக ரம்யா மகிழ்ச்சியுடன் கூறினார்.

 மேடம் என்றார்

மேடம் என்றார்

மேலும் விஜய் மறுமுறையும் என்னை மேடம் என்று அழைத்தார் என்று ரம்யா ஆச்சரியத்துடன் பகிர்ந்தார். மேலும் மாஸ்டர் படம் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் நேரங்களில் டிடி படத்தில் நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வந்தது, ஆனால் அதற்கு பின்னர் விஜே ரம்யா நடிப்பதாக சில தகவல்கள் வெளியாகின. இதற்கு பதிலளித்துள்ள ரம்யா அப்படி டிடி என் கதாபாத்திரத்தில் நடித்தால் என்ன ஆகிவிட போகிறது.

 வதந்தி பரப்புவது தப்புங்க

வதந்தி பரப்புவது தப்புங்க

பிடித்த நடிகருக்காக மற்ற நடிகரின் படங்களில் வதந்தி பரப்புவது மிக தவறான விசயம் என்று ரம்யா கூறியுள்ளார். மேலும் பல ரசிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ள ரம்யா படவெளியீடுகளின் போது ரசிகர்கள் என்ற பெயரில் தவறான செயல்களையும் பல அத்துமீறல் செயல்களையும் பலர் செய்து வருகிறார்கள். இந்த அக்கறையை தயவு செய்து படிப்பிலும் குடும்பத்திலும் காட்டுங்கள் என்று அழுத்தமாக கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X