ஜெனரேட்டர் ஆஃப்.. விஜே சித்துக்கு நடந்த அவமானம்.. டயங்கரம் ஸ்பாட்டில் நடந்த கொடுமை.. பிரபலம் பேட்டி
சென்னை: யூடியூபில் தங்களின் அசாத்திய டைமிங் காமெடியால் லட்சக்கணக்கான ரசிகர்களைச் சம்பாதித்தவர் விஜே சித்து. யூடியூப் உலகை ஆட்டிப்படைத்த அவர், தற்போது வெள்ளித்திரையில் 'டயங்கரம்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும், கதாநாயகனாகவும் அறிமுகமாகி திரையுலகில் ஒரு புதிய பரிமாணத்தைத் தொடங்கினார்.
வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்தத் திரைப்படத்தில் நட்டி , காளி வெங்கட், இளவரசு, சத்யா, ஹர்ஷத்கான், கதிர் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகின்றனர். சித்து குமார் இசையமைக்கும் இந்தத் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது 'டயங்கரம்' படப்பிடிப்பு பணிகள் திடீரென பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விடிய விடிய பிளான்: இது குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பாலாஜி பிரபு, படப்பிடிப்பு தளத்தில் விஜே சித்துவுக்கு நடந்த நள்ளிரவு அநீதியை அக்குவேறு ஆணிவேறாக உடைத்து பேசி இருக்கிறார். இது இப்போது மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்ததற்கு முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது.10, 15 நாட்களுக்கு முன்பு, இயக்குனர் சித்து இரவில் எடுக்க வேண்டிய ஒரு முக்கியமான காட்சியைப் படமாக்கத் திட்டமிட்டுள்ளார். மாலை 6:00 மணியிலிருந்து மறுநாள் காலை 6:00 மணி வரையில் முழு இரவும் இந்த ஷூட்டிங் நடக்கும் என எக்ஸிக்யூட்டிவ் ப்ரொடியூசரிடம் சொல்லியிருக்கிறார். ஆனால், சீன் பேப்பரை வாங்கி படித்துப் பார்த்த எக்ஸிக்யூட்டிவ் ப்ரொடிசர், இந்தக் காட்சியை மாலை 6 மணியிலிருந்து நள்ளிரவு 2 மணிக்குள் முடித்து விடுங்கள். அதற்கு மேல் தாண்டினால் அது இரண்டு நாள் கால்ஷீட்டாக மாறிவிடும் சொல்லி இருக்கிறார்.
ஜெனரேட்டரை ஆஃப்: அதற்கு சித்து, இது படத்திற்கு மிகவும் முக்கியமான சீன் சார், அவசரப்படாமல் நிறுத்தி நிதானமாக எடுத்தால்தான் சரியாக வரும் என சொல்லி இருக்கிறார். ஆனால், அந்த எக்ஸிக்யூட்டிவ் ப்ரொடியூசர் முடியவே முடியாது என ஒற்றைக்காலில் நின்றதால், வேறு வழியின்றி பதற்றத்துடனேயே படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் சித்து. ஆனால், நினைத்தது போலவே குறிப்பிட்ட நேரத்திற்குள் காட்சியைப் படமாக்கி முடிக்க முடியாமல் போனதால், நள்ளிரவு 2 மணி ஆனதும் ஸ்பாட்டுக்கு வந் எக்ஸிக்யூட்டிவ் ப்ரொடியூசர், டைம் ஆகிவிட்டது இதற்கு மேல் படப்பிடிப்பை நடத்தக்கூடாது, பேக்கப் என கத்தியுள்ளார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த சித்து,ப்ளீஸ்... காலை வரை கொஞ்சம் டைம் கொடுங்க, இந்த ஒரே ஒரு சீனை மட்டும் முடிச்சிடுறேன் என சித்து தயாரிப்பு தரப்பிடம் கெஞ்சியுள்ளார். ஆனால், அதையெல்லாம் காதில் வாங்காத அவர் இரக்கமே இல்லாமல் ஸ்பாட்டில் ஓடிக்கொண்டிருந்த ஜெனரேட்டரையே அதிரடியாக ஆஃப் செய்து இருக்கிறார். நள்ளிரவில் ஒட்டுமொத்த படக்குழுவினரின் முன்னிலையிலும் விஜே சித்து அசிங்கப்பட்டு, மிகுந்த மனவேதனைக்கு ஆளாகியுள்ளார் என பாலாஜி பிரபு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications