நாஞ்சில் விஜயன் ஆபாச போட்டோவை காட்டி மிரட்டினார்.. என்னை தொடலனு குழந்தை மேல சத்தியம் பண்ணு.. வைஷு!
சென்னை: நடிகர் நாஞ்சில் விஜயன் ஆபாச போட்டோவை காட்டி, அதை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டுகிறார். நாஞ்சில் விஜயனால் தான் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறேன், மிகுந்த மன வேதனையில் இருக்கிறேன் தொடர்ந்து இதே போல அவர் என் பெயரை கெடுத்து வந்தால், என் வாழ்க்கையை தானே முடித்துக்கொள்வேன் என்று நடிகை வைஷு பேட்டியில் கண்ணீருடன் பேசி உள்ளார்.
நடிகர் நாஞ்சில் விஜயன், தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக திருநங்கை விஜே வைஷு கமிஷ்னர் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் புகார் அளித்திருந்தார். இதையடுத்து அந்த புகாரை வைஷு திரும்ப பெற்றுக்கொண்ட நிலையில், சில தினங்களுக்கு முன் மீண்டும் நாஞ்சில் விஜயனுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, நீங்க விஜய்க்கு சப்போர்ட் பண்றீங்க. ஆனால் என்னுடைய மனதை மட்டும் புரிந்து கொள்ளாமல் புறக்கணிக்கிறீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

நாஞ்சில் வெளியிட்ட ஆதாரம்: இதையடுத்து, நாஞ்சில் விஜயன், நேற்று வைஷுவின் மாஸ்டர் பிளான் என்று ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில், நான் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளிக்க சென்ற போது வழக்கறிஞர் பிரபு தான். நீயும் ஒரு நடிகை, அவரும் ஒரு நடிகராக இருப்பதால் காதலித்து ஏமாற்றி விட்டார், சேர்த்து வையுங்கள் என சொன்னால், கமிஷ்னர் அலுவலகத்தில் வழக்கை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இதனால் என்னை ஏமாற்றினான், எனக்கு பணம் தர வேண்டும் என சொல்லு என்றார். அவரின் கேட்டுத்தான் நான் தான் புகார் அளித்தேன் என பேசி இருக்கிறார். அந்த வீடியோவை வெளியிட்ட நாஞ்சில் விஜயன், இப்பொழுது புரிகிறதா இவளுடைய சுயரூபம் என்னவென்று தான் புகழடைய வேண்டும் என்பதற்காக மற்றவர் குடும்பத்தை பற்றி கூட கவலைப்படாமல் கேடு விளைவிப்பவள் என பதிவிட்டு இருந்தார்.
மிரட்டினார்: இதையடுத்து தற்போது,Galatta Voice, விஜே வைஷு அளித்திருக்கும் பேட்டியில், நாஞ்சில் விஜயன் மீது நான் புகார் கொடுத்த பிறகு இருவரும் பேசாமல் இருந்தோம். கடந்த ஜனவரி 6ஆம் தேதி ஹோட்டல் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் என்னை சந்தித்தார். அப்போது என் காலில் விழுந்து எனக்கு என்னை மன்னித்துவிடு என கெஞ்சினார். மீண்டும் இருவரும் நண்பர்களாக இருக்கலாம் என்றார். அதை நம்பித்தான் நான் பல விஷயத்தை அவரிடம் சொன்னேன். 3 நாட்களுக்கு முன்பு வரை நான் அவரிடம் பேசிக்கொண்டு தான் இருந்தேன். ஆனால், அவர் நான் பேசியதை ரெக்கார்ட் செய்து வெளியிடுவார் என்று நினைக்கவே இல்லை.
பெண்களை வைத்து தவறான தொழில்: அவர் எனக்கு தெரியாமல் நானும் அவருக்கும் ஓட்டலில் இருக்கும் போது சில போட்டோக்களை எடுத்து வைத்து இருக்கிறார். அந்த போட்டோக்களை எல்லாம் வெளியிடுவேன் என மிரட்டுகிறார். நல்லவன் போல அவர் நடிக்கிறார், இதற்கு முன் அவன் பெண்களை வைத்து தவறான தொழில் செய்து வந்தான். அவர்களின் போட்டோக்களையும் அவன் வைத்து இருக்கிறான். பல பார்ட்டிக்கு நாஞ்சில் விஜயன் என்னை அழைத்து சென்று இருக்கிறார். அதற்கு காரணம், என்னை பார்த்து பல ஆண்கள் வருவார்கள் என்பதற்காக என்னை அழைத்து செல்வார். இப்போது என்னை சகோதரி என்று சொல்கிறாரா, என்னை தொடவில்லை என்று குழந்தை மீது சத்தியம் செய்யட்டும், நடந்த அனைத்துக்கும் நான் தான் காரணம் என்று விலகி சென்றுவிடுகிறேன். ஆனால், அவன் நல்லவனே இல்லை, தொடர்ந்து நாஞ்சில் விஜயன் இதுபோல செய்து வந்தால் நான் உயிரோடு இருக்கவே மாட்டேன் என்று அந்த பேட்டியில் வைஷு பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











