»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை எனறு வி.சேகர் எந்த நோக்கத்தில் பெயர் வைத்தாரோ தெரியாது. பல கோடிகளைக் கொட்டி படம் எடுப்பவர்கள்மத்தியில், சின்ன பட்ஜெட்டில் படம் எடுத்து கோடிகளை சம்பாதிக்க வைக்கிறார் என்பதை சுட்டிக் காட்டுகிறார்கள், வினியோகஸ்தர்கள்.

இவருடைய முந்தைய படங்கள், விரலுக்கேத்த வீக்கம் வரை,அவரது படங்கள் படம் வாங்கிய வினியோகஸ்தர்களையும், தயாரிப்பாளர்களையும்கோடீஸ்வரர்களாக்கியவை.

அதனால் தானோ என்னவோ, இவரைத் தேடி தயாரிப்பாளர்கள் கூட்டம் வந்த வண்ணமாக உள்ளது. இது பற்றி அவரிடம் கேட்டோம்.

ஏற்கனவே நான் சொன்ன கருத்துத்தான் - அதாவது கூட்டுக்குடும்பம், நடுத்தர வர்க்கத்திற்கு அவசியம். அதை இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக,இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் சொல்லி இருக்கிறேன்.

மாமூலாக எனது படங்களில் நடிக்கும் நடிகைகளோடு, ரோஜாவும் முதன் முறையாக எங்களுடன் பணி புரிந்திருக்கிறார் என்றார்.

Read more about: cinema, medium budget movies, vshekar
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil