டவுட்டே வேண்டாம்.. விஜய் தான் 'CM'.. அடிச்சி சொன்ன விடிவி கணேஷ்!
சென்னை: தமிழக அரசியல் களம் தற்போது மிகவும் பரபரப்பாக இருக்கிறது. மதியம் 1 மணி நிலவரப்படி மாநிலத்தில் 56.81% வாக்குகள் பதிவாகி உள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் வரிசையில் நின்று வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்களித்து வருகின்றனர்.
நடிகர் விடிவி கணேஷ்: இந்த நிலையில், நடிகர் வாக்களித்த நடிகர் விடிவி கணேஷ், விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக்கழகத்திற்கு வாக்களித்ததாக வெளிப்படையாக கூறினார். மக்களின் வளர்ச்சிக்கும், இந்த சமூதாயத்தின் வளர்ச்சியை மேம்படுத்த விஜய் தான் தகுதியானவராக இருக்கிறார். வேறு எந்த கட்சியையும் பற்றி பேச விருப்பமில்லை. இந்த தேர்தலில் TVK தான் வெற்றி பெறும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். அவர் தான் முதலமைச்சர் ஆவார் அதில் எந்தவுதமான சந்தேகமும் இல்லை. இந்த ஆண்டு நிச்சயமாக மாற்றத்திற்கான ஆண்டு. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்கும். அதில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது.

விஜய் தான் சிஎம்: தேர்தல் முடிவுக்காக மே 4ந் தேதி வரை அனைவரும் பொருமையாக காத்திருங்கள், இறுதி தருணத்தில் கூட சில மாற்றங்கள் இருக்கலாம், ஆனால், வெற்றி எங்களுடையதே" என்று கூறியுள்ளார். அதே நேரத்தில், இளைஞர்கள் முன் வந்து வாக்களிக்க வேண்டும். இதில் தான் உங்களின் எதிர்காலம் இருக்கிறது. இளைஞர்கள் வீட்டில் உட்காராமல் வாக்களிக்க வர வேண்டும். உங்கள் ஓட்டு உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. அடுத்த தலைமுறைக்காக உங்கள் கடமையை செய்யுங்கள் என்று என்று நடிகர் விடிவி கணேஷ் செய்தியாளர்களிடம் பேசினார். நடிகர் விடிவி கணேஷ், டிவிகேவிற்கு வாக்களித்தேன் என்று சொன்னது சமூக வலை தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications