கிறிஸ்தவ ஸ்கூலில் படிச்சேன்.. தர்காவில் போய் மந்திரிச்சுக்குவேன்.. நடிகர் பிரசன்னா ‘நறுக்’ பேட்டி!

சென்னை: மதத்துவேசங்கள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் பெருகி வருவதற்கு எதிராக நடிகர் பிரசன்னா பேசியுள்ள வீடியோ வெளியாகி இருக்கிறது.

Recommended Video

V-CONNECT | ACTOR PRASANNA CHAT PART-02 | தல - தளபதிக்கு வில்லனா நடிக்கணும் | FILMIBEAT TAMIL

விஷால், மிஷ்கின் சண்டைக்கு நடுவே, தனது தலை மாட்டிக் கொண்டு தவித்தது பற்றி முதல் பார்ட்டில் பிரசன்னா பேசி இருந்த நிலையில், ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு அவர் அளித்த இரண்டாம் பாக வீடியோ வைரலாகி வருகிறது.

கந்த சஷ்டி கவசம் பிரச்சனை, மதப்பிரிவினை, தல தளபதி கூட வில்லனா நடிக்கணும், தனுஷ் டைரக்‌ஷன் உள்ளிட்ட பல சுவாரஸ்யமான விசயங்களை இந்த வீடியோவில் பேசியுள்ளார்.

பிடிக்கலனா விடுங்க

பிடிக்கலனா விடுங்க

கந்த சஷ்டி கவசம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கமெண்ட் செய்து இருந்த நிலையில், இந்த பேட்டியிலும் அது தொடர்பான கேள்விக்கு பதிலளித்து இருந்தார் நடிகர் பிரசன்னா. மத நம்பிக்கை இல்லை என்றால், விடுங்க, மத நம்பிக்கை இருப்பவர்களை தொல்லை செய்வது, பகுத்தறிவே ஆகாது என பிரசன்னா பேசி உள்ளார்.

எம்மதமும் சம்மதம்

எம்மதமும் சம்மதம்

மதத்தை வைத்தும், சாதியை வைத்தும் சில அமைப்புகள், அரசியல் கட்சிகள் தான் அரசியல் ஆதாயம் தேடி வருவதாகவும், அதற்காக அப்பப்போ இது போன்ற பிரச்சனைகள் கிளம்புவதாகவும், பொது மக்கள் அனைவரும் எம்மதமும் சம்மதம் என்று தான் வாழ்ந்து வருவதாகவும் நடிகர் பிரசன்னா வெளிப்படையாக பேசி உள்ளார்.

கிறிஸ்துவ பள்ளியில்

கிறிஸ்துவ பள்ளியில்

சிறு வயது முதலே மூன்று மதத்துடனே இணைந்து வாழ்ந்து வருகிறேன். கிறிஸ்துவ பள்ளியில் படித்தேன், எல்லா ஆசிரியர்களும் கிறிஸ்துவர்கள் தான். ஆனால், ஒரு போதும் என் மதத்தை துவேசமும் செய்யவில்லை. மதம் மாறவும் வற்புறுத்தவில்லை என தனது வாழ்க்கை அனுபவத்தை கூறினார்.

தர்காவில் மந்திரிப்பாங்க

தர்காவில் மந்திரிப்பாங்க

தினமும் காலை, பள்ளி வாசலில் ஒலிக்கும் ஒலியை கேட்டுத் தான் எழுந்திருப்பேன் என இஸ்லாமிய மந்திரத்தையும் அசால்ட்டாக ஓதினார். மேலும், நான் பிரியாணி சாப்பிட மாட்டேன் என்றாலும், ரம்ஜான்னா வீட்டுக்கு பிரியாணி வரும், பிரட் அல்வாவை யாருக்கும் தராமல் நான் அப்படியே சாப்பிடுவேன். சிறு வயதில் உடல் சரியில்லை என்றால் தர்காவில் கொண்டு போய் மந்திரிப்பார்கள் என மத நல்லிணக்கம் குறித்து பேசியுள்ளார்.

தல தளபதிக்கு வில்லன்

தல தளபதிக்கு வில்லன்

திருட்டுப் பயலே 2, மாஃபியா உள்ளிட்ட படங்களில் வில்லனாக மிரட்டி வரும் நடிகர் பிரசன்னாவிடம், எந்த டாப் நடிகருக்கு வில்லனாக நடிக்க ஆசைப் படுறீங்க என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், தல அஜித் மற்றும் தளபதி விஜய்க்கு வில்லனாக நடிக்க வேண்டும், அது ஒரு தனி கெத்து என ஓப்பனாக பேசியுள்ளர். சீக்கிரமே உங்க ஆசை நிறைவேற வாழ்த்துகள் பிரசன்னா.

வேற ஒரு தனுஷ பார்ப்பீங்க

தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி படத்தில், ராஜ்கிரணுக்கு மகனாக பிரசன்னா நடித்து இருப்பார். கார்த்திக் நரேன் இயக்க உள்ள டி43 படத்தில் தனுஷுடன் இணைந்து பிரசன்னா நடிக்க உள்ளார். இந்நிலையில், தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இரண்டாவது படத்தின் கதையை தான் படித்து விட்டதாகவும், அந்த படம் வெளியானால், தமிழ் சினிமா வேறு ஒரு தனுஷை பார்க்கும் என்றும் புதிய அப்டேட்டையும் கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X