அந்த வசனங்களுக்கு நிறைய மிரட்டல்கள் வந்தது ...எந்த படத்திற்கு தெரியுமா ?நடிகை தீப்தி பேட்டி
சென்னை: ஒரே வட்டத்திற்குள் சிக்காமல் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பது தான் தனது ஆசை என்று வீரமே வாகை சூடும் படத்தில் நடித்த தீப்தி கூறினார்.
கைதி படத்தில் கதறி அழுது மிகவும் எமோஷனலாக ஒரு கதாபாத்திரம் செய்து அறிமுகமான தீப்தி நம்மிடம் மேலும் கூறுகையில், நான் பார்வையாளராகவும், நடிகையாகவும் இருக்க வேண்டும் என்பது தான் எப்போதும் ஆசை என்றார்.
தான் நிறைய மிரட்டல்களையும், நிறைய விமர்சனங்களையும் சந்தித்ததாகவும் இந்த வீடியோ பதிவில் கூறி உள்ளார் .

ஆபத்தான வேலை
கேள்வி: தற்போது நீங்கள் நடித்து வெளிவந்த வீரமே வாகை சூடும் படம் குறித்து?
பதில்: நான் முதன்முதலில் நடித்த கைதி படம் வித்தியாசமான கதைகளம் கொண்டது. அடுத்து நடித்த ட்ரிப்ள்ஸ் படம் ஜாலியானது. வீரமே வாகை சூடும் படம் நான் நடிக்கும் முதல் ஆக்ஷன் படம். இந்த படத்தின் க்ளைமாக்ஸ் சூட்டிங்கின்போது நான் இருந்தேன். நடிகர் விஷால் நடிக்கும்போது, ரணகளமாக இருந்தது. உண்மையில் சொல்லவென்றால் இது ரொம்ப ஆபத்தான வேலை என்றார். வீரமே வாகை சூடும் படம் ஒரு கமர்ஷியலான பொழுதுபோக்கு நிறைந்த படமாக அமைந்திருக்கிறது. நல்ல கதையம்சத்துடன் ஒரு தகவலை சொல்லும் படம். நல்ல விமர்சனங்கள் வந்து இருக்கிறது. நான் செய்த மூன்று படங்களும் ரொம்ப அருமையாக இருந்துள்ளது. நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்.

நிறைய மிரட்டல்கள்
கேள்வி: நீங்கள் நடித்த மோடி அன்ட் பீர் குறும்படம் பற்றி சொல்ல முடியுமா ?
பதில் : இந்த குறும்படம் அரசியல் நிறைந்தது. பல விதமான கருத்துக்கள் வந்தது. நிறைய மிரட்டல்களையும் சந்தித்தேன்.பொலிடிகல் சட்டையர் என்றால் அப்படி தான் இருக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்தோம் .நிறைய மிரட்டல்களையும், நிறைய விமர்சனங்களையும் இந்த படத்திற்கு பின் பல விதத்தில் வந்தது .குறிப்பாக அந்த படத்தின் வசனங்கள் இன்று வரை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
கேள்வி: நாடக அனுபவம் மற்றும் சினிமா நடிப்பு பற்றி ...
பதில்: Theatre Art என்பது வித்தியாசமானது. காமிரா முன்பு நடிப்பது என்பது வேறு. நான் ஏற்கனவே Stage Play Artist. இது தான் படங்களில் நடிப்பற்கு உறுதுணையாக இருந்தது. இன்னும் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

எண்ணங்கள் பிரதிபலிப்பு
கேள்வி: இயக்குனர் து.ப.சரவணனிடம் இருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள்?
பதில்: இயக்குனர் சரவணன் கனிவாக நடந்து கொண்டார். நாம் என்ன செய்ய நினைக்கிறோமோ அதை செய்ய முடிந்தது. அதாவது சுதந்திரம் இருந்தது. இயக்குனர் சரவணன் மட்டுமின்றி, இயக்குனர் லோகேஷ் அண்ணாவிடம் இந்த வசனத்தை நான் இப்படி சொல்லலாமா? இப்படி நடிக்கலாமா? என்று கேட்டால், ஓ.கே. பண்ணு. சரியாக வந்தால் அப்படியே வைத்துக் கொள்ளலாம் என்பார். ஒரு நடிகையாக தங்களது எண்ணங்களை பிரதிபலிக்க வாய்ப்பு கொடுத்தனர்.

வட்டத்திற்குள் சுற்றாமல்
கேள்வி: ஹாட்ஸ்டாரில் வெளிவந்த ட்ரிப்பிள்ஸ் சீரீஸ் குறித்து?
பதில்: ஜாலியான படம். இயக்குனர் சரோ அண்ணா கூறும்போது, நீ என்ன பண்ண நினைக்கிறோயே அதை செய் என்றார்.அது ஒரு ஜாலியான டீம் .
கேள்வி: உங்களுடைய அடுத்த ப்ராக்ஜ்ட் என்ன?
பதில்: நிறைய இந்தி ப்ராக்ஜ்ட் செய்து கொண்டு இருக்கிறேன். வித்தியாசமான கதையில் விதவிதமான கதாபாத்திரங்களுடன் புதுமையான படங்களில் நடிக்க வேண்டும். ஒரே வட்டத்திற்குள் சுற்றாமல் விதவிதமாக நடிப்பதற்கு கற்றுக் கொண்டிருக்கிறேன். பார்வையாளராகவும், நடிகையாகவும் இருக்கணும்.
கேள்வி: எந்த இயக்குனருடன் வேலை பார்க்க உங்களுக்கு ஆசை?
பதில்: பாகுபாடு எதுவுமில்லாமல் எல்லா இயக்குனர்களுடன் ஒவ்வொரு படத்தில் பணிபுரிய வேண்டும் என்பது எனது ஆசை.அது போல எல்லா நடிகர்களுடனும் ஒரு ரவுண்டு வரணும் என்று பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார் தீப்தி .இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனல் சென்று காணலாம்.


Click it and Unblock the Notifications











