twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிவாஜி கணேசன் மறைந்த நாள்... நடந்தது என்ன ! ஜெயந்தி கண்ணப்பன் பேட்டி

    |

    சென்னை: சிவாஜி கணேசன் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே . விழுப்புரம் சின்னையா பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர்.

    Recommended Video

    அந்த வசனம் - Shivaji அய்யாவிற்கு தொண்டையில் ரத்தம் கசிந்தது | Rewind Raja Ep-48 | Filmibeat Tamil

    இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.சிவாஜி கணேசன், சின்னையா மற்றும் ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். சக்ஸஸ் என்று இவர் பேசிய முதல் வார்த்தை , முதல் வசனம் இன்று வரை சக்சஸ் தான் .

    Valimai Motion Poster: எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. இன்று மாலை 6 மணிக்கே தல ’வலிமை’யா வராரு! Valimai Motion Poster: எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. இன்று மாலை 6 மணிக்கே தல ’வலிமை’யா வராரு!

    சிவாஜியின் மனைவி பெயர் கமலா, மகன்கள் ராம்குமார் மற்றும் பிரபு, மகள்கள் சாந்தி மற்றும் தேன்மொழி. சிவாஜி திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். இவருக்கு பின்னர் இவரது குடும்பத்தில் பலரும் நடிகர்களாக மாறினார். அடுத்த அடுத்த தலைமுறைகள் தாண்டி இப்போது விக்ரம் பிரபு வரை நடித்து வருகிறார்

    தமிழ் உச்சரிப்பு

    "சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" என்ற ஒரு நாடகத்தில் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அதன் பிறகு பெயரே நிலைத்தது.
    நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும்.சிம்மக்குரலோன் என்று பலரும் இவரை செல்லமாக அழைப்பது வழக்கம் .

    ரீவைண்ட் ராஜா நிகழ்ச்சி

    ரீவைண்ட் ராஜா நிகழ்ச்சி

    அப்படி பட்ட சிவாஜியின் வாழ்க்கை வரலாறு மிகவும் ஸ்வாரஸ்யமானது . அவர் இறந்த இந்த தினம் இன்று வரை ஒரு பெரும்சோகத்தை கடந்து தான் தமிழ் சினிமா பேசி வருகிறது . அவர் இறந்த அன்று என்ன நடந்தது யாரெல்லாம் வந்தார்கள் , எவ்வளவு துயரம் என்று ஜெயந்தி கண்ணப்பன் நமது ரீவைண்ட் ராஜா நிகழ்ச்சியில் நிறைய பகிர்ந்து உள்ளார்

    ரீவைண்ட் ராஜா நிகழ்ச்சி

    ரீவைண்ட் ராஜா நிகழ்ச்சி

    அப்படி பட்ட சிவாஜியின் வாழ்க்கை வரலாறு மிகவும் ஸ்வாரஸ்யமானது . அவர் இறந்த இந்த தினம் இன்று வரை ஒரு பெரும்சோகத்தை கடந்து தான் தமிழ் சினிமா பேசி வருகிறது . அவர் இறந்த அன்று என்ன நடந்தது யாரெல்லாம் வந்தார்கள் , எவ்வளவு துயரம் என்று ஜெயந்தி கண்ணப்பன் நமது ரீவைண்ட் ராஜா நிகழ்ச்சியில் நிறைய பகிர்ந்து உள்ளார்

    கட்டபொம்மன் வசனங்கள்

    கட்டபொம்மன் வசனங்கள்

    சிவாஜி நடித்த மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற காவியங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன் போன்ற வீரர்களின் உன்னதமான பாத்திரங்களை ஏற்றுத் செய்தார். பாசமலர், வசந்த மாளிகை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.வீரபாண்டிய கட்டபொம்மன் வசனங்கள் பேசிய போது என்னவெல்லாம் நடந்தது என்று இந்த வீடியோவில் ஜெயந்தி கண்ணப்பன் குறிப்பிட்டு உள்ளார் .

    74-வது வயதில்

    74-வது வயதில்

    சென்னை மெரினா கடற்கரை சாலையில் சிவாஜி கணேசன் சிலை 21 ஜூலை 2011 அன்று அமைக்கப்பட்டது.இன்று 2021 ஜூலை 21 இதே நாளில் அவரது மகன் ராம்குமார் ,பேரன் துஷ்யந்த் ராம்குமார், தர்ஷன் ராம்குமார் மற்றும் குடுபத்தினர் அடையாரில் உள்ள சிவாஜி மணி மண்டபத்தில் இன்று காலை 11 மணிக்கு மரியாதை செலுத்தி வந்தனர் . தென்னிந்திய திரைப்படத் துறையில், சிறந்த நடிகராக விளங்கிய சிவாஜி கணேசன் இருதய பிரச்சினைக் காரணமாக, சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஜூலை 21, 2001-ம் ஆண்டு தனது 74-வது வயதில் மரணமடைந்தார். அவருடைய சொந்த பந்தங்கள் சினிமா நண்பர்கள் , அரசியல் தலைவர்கள் , ரசிகர்கள் எப்படி எல்லாம் வேதனை பட்டார்கள் என்று இந்த பேட்டியில் நிறைய குறிப்பு உள்ளது .

    English summary
    Jayanthi Kannappan has explained What happened in the last date of Nadigar Thilagam Shivaji Ganesan's death.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X