'என் முந்தைய காதல் அனுபவத்துல அதைக் கத்துக்கிட்டேன்...' ராணா ரணகளம்

By

சென்னை: காதலில் எதையும் கட்டாயப்படுத்தினால் அது தோல்வியில்தான் முடியும் என்று நடிகர் ராணா தெரிவித்தார்.

தமிழில், அஜித்தின் ஆரம்பம், பெங்களூர் நாட்கள் உட்பட சில படங்களில் நடித்திருக்கும் ராணா, பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம், இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார்.

what is Rana Daggubati learnig from his past relationships?

இந்தி படங்களிலும் நடித்துவரும் இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான, எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

நீங்க சினிமாவுக்கு 17 வருஷம் ஆயிடுச்சே...

நிஜ வாழ்க்கை ரொம்ப போரடிச்சதால, நடிப்பை தொழிலா தேர்ந்தெடுத்தேன். நிஜத்துல செய்ய முடியாததை, சினிமாவுல செய்ய முடியும்ங்கற நம்பிக்கை. சிக்கலான கேரக்டர்கள்ல நடிக்கறது எனக்குப் பிடிக்கும்.

what is Rana Daggubati learnig from his past relationships?

ஒரு கேரக்டரை எப்படி தேர்ந்தெடுக்கறீங்க?

எந்த கேரக்டரையும் இப்படி இருக்கணும்னு முடிவு பண்ணி தேர்ந்தெடுக்கறதில்லை. அப்படி பண்ணிட்டீங்கன்னா, நல்ல கேரக்டர்களே வராது. அதனால முன் முடிவு எதையும் பண்ணிக்கிறதில்லை. வரும் கதைகளை கேட்கிறேன். அதுல டச் பண்ணின கேரக்டர்களை தேர்ந்தெடுக்கிறேன்.

நீங்க சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவங்க...

எங்க குடும்பத்துல சினிமாவைத் தவிர வேற விஷயங்களைப் பத்தி விவாதிச்சதே இல்லை. எங்க பொழுதுபோக்கே விதவிதமான படங்களை பார்க்கிறதுதான். நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போதிருந்தே இது நடக்குது. எட்டாம் வகுப்பு படிக்கும்போதே எடிட்டிங் கத்துக் கிட்டேன். பிளஸ் டூ படிக்கும்போது, வீட்டு பக்கத்துலயே ரெக்கார்டிங் ஸ்டூடியோ வந்தது. அப்ப ரெக்கார்டிங் கத்துக்கிட்டேன்.

what is Rana Daggubati learnig from his past relationships?

இந்தி படங்கள்லயும் நடிக்கிறீங்க?

அங்க, என்னை போல தென்னிந்திய நடிகர்களை 'சவுத் வாலா'ன்னு சொல்றதுதான் எரிச்சலா இருக்கு. கேமரா முன்னால வந்துட்டா கதைதான் முக்கியம். கூட ஏராளமான நடிகர்களும் இருக்காங்க. ஆனா, நாம பாலிவுட், கோலிவுட், டோலிவுட்டுனு பிரிச்சு வச்சிருக்கோம். நம்மகிட்ட பல்வேறு மொழிகள் இருக்கு. எல்லாரும் ஒன்னு சேர்ந்து நம்ம பலத்தை சர்வதேச ரசிகர்களுக்கு காண்பிக்கறதுதான் நோக்கமா இருக்கணும். அதை பாகுபலி பண்ணியிருக்கு.

காதலுக்கு நேரம் இருக்கா?

உண்மையிலயே நேரமில்லை. காதல்ங்கறது அதுவா தேடிக் கண்டுபிடிக்கணும்னு நினைக்கிறேன். நானா எதுவும் பிக்ஸ் பண்ணிக்கலை. அதை அதன் போக்குல விட்டுடறேன். நீங்க ஏதாவது நடக்கணும்னு கட்டாயப்படுத்தினா, அது எப்பவும் தோல்வியிலதான் முடியும். இது என் முந்தைய காதல் அனுபவத்துல கத்துக்கிட்டது.

ராணா, நடிகை த்ரிஷாவை காதலித்து வந்ததார் என்றும் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர் என்றும் கூறப்பட்டது, பழைய கதை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X