twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இசைக்கும், தாய்ப்பாலுக்கும் என்ன இன்டெர்லின்க்? இசையமைப்பாளர் சாம் C.S. கூறும் ஸ்பெஷல் அப்டேட்ஸ்

    |

    சென்னை: 2010ம் ஆண்டு எனக்கு Address Proof கிடையாது, வீடு மாறிக்கொண்டே இருப்பேன். 800 ரூபாய் வாடகையில் அயனாவரத்தில் குடியிருந்தேன் என்று ராக்கெட்ரி படத்தின் இசையமைப்பாளர் C.S. சாம் தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறுகையில், மியூசிக் டைரக்டர் ஆக வேண்டும் என்று கனவில் கூட நான் நினைத்தது கிடையாது. பாடல் எழுத வேண்டும் என்று ஆசை மட்டுமே இருந்தது .

    சாம் C.S என்று எதற்காக இப்படி என் பெயரை பயன் படுத்திறேன் என்று பல சுவாரஸ்யமான விஷியங்களை குறித்து அவர் நமது பிலீம்பீட்சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

    காதலரை மணந்த சீரியல் நடிகை..அவசர அவசரமாக நடந்த திருமணம்!காதலரை மணந்த சீரியல் நடிகை..அவசர அவசரமாக நடந்த திருமணம்!

    கமர்ஷியல் படங்கள் அல்ல

    கமர்ஷியல் படங்கள் அல்ல

    கேள்வி: சாணிக்காகிதம், சுழல், ராக்கெட்ரி போன்ற படங்களின் வெற்றி குறித்து...

    பதில்: ராக்கெட்ரி, சுழல், சாணிக்காகிதம் போன்றவை கமர்ஷியல் படங்கள் மட்டும் அல்ல அதுவே முதல் காரணம் . தனிமனிதனின் பயோகிராபிக் குறித்த படம் தான் ராக்கெட்ரி. வித்யாசமான வாழ்வியலை பதிய வைக்கும் கதையுடன் கூடியது தான் சுழல் வெப்சீரியஸ், வேற மாதிரியான ஜர்னல் கொண்டது சாணிக்காகிதம். இப்படங்களில் மியூசிக் பற்றி பேசும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இப்ப இருக்கிறது என்றார் சாம். c.s

    பாடல் எழுத வேண்டும்

    பாடல் எழுத வேண்டும்

    கேள்வி: எப்படி மியூசிக் டைரக்டராக ஆக வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு உருவானது?

    பதில்: 2010ம் ஆண்டு ஐ.டி. துறையில் நான் வேலை பார்த்தேன். அப்பொழுது கடிதம் வீட்டுக்கு வருவதற்கு கூட எனக்கு சரியான Address Proof கிடையாது. வீடு மாறிக்கொண்டே இருப்பேன். 800 ரூபாய் வாடகையில் அயனாவரத்தில் குடியிருந்தேன். அப்பொழுது என்னுடைய ஒரே நோக்கம் என்னவென்றால், C.S. சாம், சென்னை என்று யாராவது கடிதம் அனுப்பினால் எனக்கு வந்து சேர வேண்டும் என்பது மட்டுமே. ஒரு லெட்டரை கொடுக்கவேண்டுமென்று மனதுடன் யாராவது கூகுளில் தேடினால் C.S. சாம், மியூசிக் டைரக்டர் என்று வருமல்லவா. அது தான் ஆசையாக இருந்தது. மியூசிக் டைரக்டர் ஆக வேண்டும் என்று கனவில் கூட நான் நினைத்தது கிடையாது. பாடல் எழுத வேண்டும் என்று ஆசை மட்டுமே இருந்தது. எதார்த்தமாக அமைந்தது மியூசிக் டைரக்டர் பணி. நான் இந்த துறைக்கு வந்த 12 வருடங்களை திரும்பி பார்க்கும்பொழுது, தன்னை எல்லோரும் கவனிக்கிறார்கள் என்பது பெரிய விஷயம். இதை தக்கவைக்க நான் எடுக்கின்ற ஓட்டம், 10 வருடம் கடந்து வந்த பாதையை விட கடினம். அதனால் தான் ஓடிக்கொண்டிருக்கிறேன்.

    இந்தியாவை விட்டு சென்றதில்லை

    இந்தியாவை விட்டு சென்றதில்லை

    கேள்வி: உங்களுடைய சொந்த ஊர்...

    பதில்: நான் கேரளா மாநிலத்தில் மூணாறில் பிறந்தேன். தமிழ் நன்றாக பேசுவேன். கேரளாவில் பெயருக்கு பின்னால், வீட்டின் பெயரை வைப்பார்கள். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் மாதிரி வர முடியுமா? என்ற எண்ணம் தோன்றியது. வருகிறமோ! இல்லையோ அவர் வைத்தது போல் நாமும் ஆங்கிலத்தில் C.S சாம் என்று வைத்து கொண்டேன். "C" என்பது அப்பாவின் பெயரான சார்லஸ்சிவன்காளை மற்றும் "S"அம்மாவின் பெயரான செபஸ்டி. இந்த இரு பெயர்களில் உள்ள C மற்றும் S தான் சாம் சி எஸ். என்னை எல்லோரும் US Return என்று கருதினார்கள். அதனால் நிறைய கிராமத்து படங்கள் என்னை விட்டு சென்றது. இன்னும் சொல்லப்போனால் நான் இந்தியாவை விட்டு எங்கும் சென்றது கிடையாது. தற்போது தான் மற்ற மொழிப்படங்களுக்கு இந்தியா முழுவதும் செல்கிறேன். எனது சொந்தஊர் கம்பம் அருகில் நாராயணதேவன்பட்டி தான். கருத்தம்மா படத்தில் வருகின்ற ஒரு கிராமம் போல் தான் எனது சொந்த ஊர் என்றார் சாம் சி.எஸ்.

    நடிகர் ராஜ்கிரணின் எமோஷன்

    நடிகர் ராஜ்கிரணின் எமோஷன்

    கேள்வி:: வியட்நாம் படத்திற்கு இசையமைத்து எப்படி?

    பதில்: வியட்நாம் மக்களுக்காக ஒரு படத்தை பீட்டர் ஹெயின் இயக்கி இருந்தார் . அந்த படத்தின் இசைக்கு என்னை அணுகியபோது, கம்போடியா, வியட்நாம் என்று தான் கேள்விபட்டிருக்கிறேன். வியட்நாமி என்ற மொழி இருப்பது எனக்கு தெரியாது என்றேன். அவர் இந்தபடமானது சைனீஸ் மொழியிலும் கூடுதலாக வெளிவருகிறது என்றார். படத்தில் நடிகர் ராஜ்கிரண் குழந்தையுடன் உருகும் எமோசன் காட்சிகள் போன்று தான் அதிகம் இருக்கும். நாணும் முயற்சி செய்தேன். அந்த படம் அங்கு மிகப்பெரிய ஹிட்டானது எங்கள் அதிர்ஷ்டம் + முயற்சி என்றார் சாம் CS. அதை தொடர்ந்து சுழல் வெப்சீரியசை பார்த்து விட்டு சம்பந்தமில்லாத மொழிகளில் என்னை அழைத்தார்கள். இந்த சுழல் வெப்சீரியஸ் 32 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டது. பாடல்கள் அனைத்தும் தமிழில் மட்டும் தான் இருக்கும். அமெரிக்கா மற்றும் ரஷ்யா மக்கள் இந்த படத்தை பார்க்கும்பொழுது, நமது கலாசாரத்தை விஷூவலாக காட்டி விட்டோம். அவர்களை இந்த படத்துடன் கனெக்ட் செய்வதற்கு ஒரே வழி இசை மட்டுமே. அதற்காக அவர்களுக்கு பிடித்த Western Orchestra இசையை பயன்படுத்தியுள்ளேன். இசையை பொறுத்தவரை பீட் தான் முக்கியம் என்றார்.

    மயான கொல்லை காட்சி

    மயான கொல்லை காட்சி

    கேள்வி: நீங்கள் யாரை ரோல் மாடலாக எடுத்து கொண்டீர்கள்?

    பதில்: என்னை பொறுத்தவரை மியூசிக் டைரக்டர் என்பவர் இளையராஜா கையை அசைப்பதும், அவரை தொடர்ந்து 50 பேர் வயலின் வாசிப்பது என்பதை எனது மனதில் ஆழமாக நிறுத்தி விட்டேன். அதனால் நாம் கீபோர்டில் தனியாக வாசித்தால் நம்மை எவ்வாறு மியூசிக் டைரக்டர் என நம்புவார்கள் என்று கருதினேன். இளையராஜா அவர்கள் தான் பலருக்கும் ரோல் மாடல்.எனக்கும் அப்படியே, அதனால் எல்லா படங்களில் Live Record செய்து இசையமைப்பேன். முதலில் அம்புலி 3டி படத்தில் 10 பேர் கொண்டு வயலின் Live Record எடுத்து இசையமைத்தேன். மேலும் சுழலுக்காக மயான கொல்லை காட்சிகளை இயக்குநர் புஷ்கர் காயத்ரி ஒரிஜினலாக ஷூட் செய்து கொண்டு வந்தார்கள். அதை பார்க்கும்பொழுது அகோரமாக இருந்தது. அவ்வாறு கொண்டு வந்த காட்சிகளை வைத்து தான் சுழலில் மயானகாட்சிகளுக்கு Live Record செய்து match செய்தேன். இதில் இடம் பெற்ற கூத்து காட்சியும் அவ்வாறு செய்யப்பட்டது.

    சிறப்பு பேட்டி

    Live Record செய்து இசையமைப்பது என்பது தாய்ப்பால் போன்றதாகும். கீ போர்டில் வாசிப்பது என்பது பாக்கெட் பால் போன்றதாகும். தாய்ப்பாலின் சுவை நல்ல இருக்கிறதா? இல்லையா என்று கூறுவதற்கு நமக்கு அருகதை கிடையாது. அது போல் தான் Live Record இசை. பல் தேய்க்காமல் நாம் வெளியே வந்தால் என்ன மாதிரி உணருவோமோ, அதே உணர்வு தான் Live Record இல்லாமல் வரும் இசை என்றார் சாம் CS.இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/IHR7h5FCM7E இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம் ராக்கெட்ரி படத்தின் இசையமைப்பாளர் C.S. சாம் இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளார். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.

    English summary
    What is the Interlink between music and motherfeed, Says Music Director Sam C.S
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X