Madha Gaja Raja OTT: வசூலை அள்ளிய மத கஜ ராஜா.. எந்த ஓடிடியிலும் வெளியாகவில்லை.. என்ன காரணம்!

சென்னை: 2013 ஆம் ஆண்டு வெளியான மத கஜ ராஜா படம் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக
12 ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து இந்த படம், பொங்கல் பாண்டிகைக்கு தியேட்டரில் வெளியாகி நல்ல வசூலை அள்ளியது. வழக்கமாக ஒரு படம் தியேட்டரில் வெளியான நான்கு வாரத்திற்கு பிறகு ஓடிடியில் வெளியாகி விடும். ஆனால், இந்த படம் வெளியாகி மூன்று மாதத்திற்கு மேலான நிலையில், தற்போது வரை, மத கஜ ராஜா படம் ஓடிடியில் வெளியாகவில்லை. அதற்கு என்ன காரணம் என்று இந்த செய்தியில் பார்க்கலாம்.

இப்படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, மயில்சாமி, மணிவண்ணன், மனோபாலா, சிட்டி பாபு ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். சிறுவயதில் இருந்தே சடோகோப்பன், விஷால், சந்தானம் ஆகியோர் நண்பர்களாக இருக்கின்றனர். இதில் விஷால் மட்டும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். சடோகோப்பன் மற்றும் சந்தானத்திற்கு திருமணமாகிவிட்டது. அந்த நிலையில் தான், பள்ளி வாத்தியாரின் மகள் திருமணத்திற்கு வரும்படி ஆசிரியர் அழைக்க, மூன்று நண்பர்களும் திருமணத்திற்கு வருகின்றனர். அப்போது, சந்தானத்திற்கும் அவரது மனைவிக்கும் ஏதோ ஒரு கருத்து வேறுபாடு இருப்பதையும், அவர்கள் விரைவில் விவாகரத்து செய்யப்போவதும் விஷாலுக்கு தெரியவருகிறது. அதே போல, சடோகோப்பன் ரமேஷ், நிதின் சத்யா இருவருமே அதிகாரம் படைத்த மீடியா தொழில் அதிபரான சோனுசூட்டால் பாதிக்கப்பட்டு கடனில் சிக்கி தவிப்பதும் விஷாலுக்கு தெரியவருகிறது. தனது நண்பர்களுக்காக விஷால், சோனு சூட்டை எதிர்க்கிறார். இதனால், விஷாலின் வாழ்க்கையில் என்னென்ன நடக்கிறது... கடைசியில் விஷால் தன் நண்பர்களை பிரச்சனையிலிருந்து மீட்டாரா.. இல்லையா... என்பது தான் மத கஜ ராஜா படத்தின் கதை.

Madha gaja raja OTT

ஓடிடி ரிலீஸ் எப்போ: மத கஜ ராஜா படத்தை பார்த்த பலர், படத்தில் கதை, லாஜிக் எல்லாம் பார்க்காமல் சும்மா ஜாலியாக வந்தோம் ஒரு படத்தை பார்த்துவிட்டு சென்றோம் என்று நினைத்தால் இந்த படம் சூப்பரான படம். படத்தை பார்த்து ஜாலியாக சிரிக்கலாம். சந்தானத்தின் காமெடி, விஷால் நடிப்பு என அனைத்தும் நன்றாக இருக்கிறது. படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் இருந்தாலும் படத்தில் சிரிப்புக்கு பஞ்சமில்லை என படம் பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடினார்கள். பொங்கல் பண்டிகைக்கு பல திரைப்படங்கள் தியேட்டரில் வெளியான போதும், மத கஜ ராஜா படம் நல்ல வசூலை அள்ளியது. இந்த திரைப்படத்தை தியேட்டரில் தவறவிட்ட ரசிகர்கள் படத்தை ஓடிடியில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஆனால், படம் வெளியாகி மூன்று மாதத்திற்கு மேலான போதும், படம் இன்னும் ஓடிடியில் வெளியாகவில்லை. மத கஜ ராஜா படம் 12 ஆண்டுகள் பழைய படம் என்பதால், ஓடிடி ரைட்ஸ் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், படம் ஓடிடியில் வெளியாவது தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டு ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூக்குத்தி அம்மன்: மத கஜ ராஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது சுந்தர் சி, மூக்குத்தி அம்மன் 2படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா,மீனா, ரெஜினா காஸ்டர், மைனா நந்தினி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், அவ்னி சினிமாக்ஸ், ரவுடி பிக்சர்ஸ் மற்றும் ஐவிஒய் என்டர்டெயின்மென்ட் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X