நடிகர் விஜய் படிக்க வெச்ச அந்த மாணவி... இப்ப என்ன பன்றாங்க தெரியுமா ? எஸ்.ஏ.சி ஸ்பெஷல் பேட்டி
சென்னை: அந்த காலக்கட்டங்களில் நடிகர் விஜய் நல்ல விஷயங்களை செய்தார், இன்றும் அதையே செய்து வருகிறார் என்று இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்தார்.
Recommended Video
சமீப காலங்களில் நடிகர் விஜய்க்கும், அவரது தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் மனக்கசப்பு இருந்து வருகிறது என்று பலரும் ஒரு பக்கம் சொல்லி வருகின்றனர்.
நடிகர் விஜய் பெயரை பயன்படுத்தி விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியை தொடங்கியதால். ரசிகர்கள் குழப்பத்தில் இருப்பதாக கூறப்பட்டது.

ஒரு சில இடங்களில்
நடிகர் விஜய் இது குறித்து கூறுகையில், எனக்கும் இந்த இயக்கத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்று தெரிவித்தார். ஆனால் சமீபத்தில் நடந்த முடிந்த தேர்தல்களில் ஒரு சில இடங்களில் இந்த இயக்கம் சார்பாக போட்டியிட்டவர்கள் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் விஜயின் தந்தையும், மிகப்பெரிய இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நமது பிலீமிபீட்டுக்கு அளித்த சிறப்பு பேட்டியைப் பற்றி இங்கு பார்க்கலாம் .

ரூ.25 ஆயிரம்
25 வருடங்களுக்கு முன்பு எனக்கு ஒரு கடிதம் வந்தது. +2 முடித்த மாணவி ஒருவர் படிப்பதற்கு பணம் இல்லாமல் சிரமப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. உடனடியாக நடிகர் விஜய்யின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். அந்த காலக்கட்டத்தில் நடிகர் விஜய் மறுபேச்சு எதுவும் பேச மாட்டார் . உடனடியாக நாம் பணம் உதவி செய்து அந்த மாணவியை படிக்க வைக்கலாம் என்றார். அந்த மாணவியை அழைத்து என்ன படிக்க விருப்பம் என்றேன். அந்த மாணவிக்கு இன்ஜினியரிங் படிக்க விருப்பம் என்றார்.உதவி செய்தோம். அந்த மாணவியும் நன்றாக படித்துக் கொண்டிருக்கும்போது, 3வது வருடம் டைட்டில் பார்க் அலுவலகத்தில் ரூ.25 ஆயிரம் சம்பளத்தில் வேலை கிடைத்தது. இது மிகப்பெரிய சந்தோஷத்தை எனக்கு ஏற்படுத்தியது என்றார்.

ஒட்டுமொத்த குடும்பத்துக்கும்
பல ஆண்டுகள் கழித்து மிகவும் மகிழ்ச்சிகரமான ஒரு பெண்ணாக, வெற்றி பெற்ற ஒரு பெண்ணாக ஒரு சூழ்நிலையில் பார்க்கும்போது மிகப்பெரிய சந்தோஷம் ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல் தன்னுடைய திருமணத்திற்காக எங்களை அணுகி , உடனிருந்து நடத்தி வைக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். குழந்தை பிறந்தவுடன் பெயர் வைக்கப்படவேண்டும் என்று மிகவும் அன்பாக கட்டளையிட்டார்கள். ஒரு நல்ல குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த பெண்ணை இன்று நினைத்தாலும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது . அந்தக் கல்வி அந்த ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் இன்றுவரை மிகப்பெரிய உதவியாக இருக்கிறது என்று எண்ணும் போது என்றும் என்றென்றும் மனதில் மகிழ்ச்சியான தருணங்களாக இவை இருக்கிறது.
இன்னும் நிறைய விஷயங்கள்
இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் ( https://youtu.be/bB_2vKNkxHc ),மற்றும் https://youtu.be/5e19gWVr_Hs இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத் மற்றும் இயக்குனர் சந்திரசேகர் இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.


Click it and Unblock the Notifications











