ஒரு பாட்டி துப்பாக்கியுடன் சூர்யாவை ஓட ஓட விரட்டியது உங்களுக்கு தெரியுமா?

By Siva

சென்னை: சில்லுன்னு ஒரு காதல் படப்பிடிப்பின்போது பாட்டி ஒருவர் துப்பாக்கியுடன் சூர்யா, பூமிகாவை துரத்தியுள்ளார்.

விஜய்யின் பத்ரி படம் மூலம் கோலிவுட் வந்தவர் பூமிகா. ரோஜா கூட்டம், சில்லுன்னு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தவர். தற்போது நயன்தாராவின் கொலையுதிர் காலம் படத்தில் நடித்துள்ளார்.

மேலும் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா நடித்து வரும் கண்ணை நம்பாதே படத்தில் பூமிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சூர்யா

சூர்யா

பூமிகா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் சில்லுன்னு ஒரு காதல் படத்தில் நடித்தபோது நடந்த பயங்கர சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். பாடல் காட்சி ஒன்றை படமாக்க படக்குழுவினர் ஒன்று கூடியுள்ளனர். ஒரு வீட்டிற்கு முன்பு சவுண்டு சிஸ்டத்தை வைத்து சத்தமாக பாடலை போட்டுள்ளனர். சூர்யா, பூமிகா ஆகியோர் அங்கு நின்று கொண்டிருந்தபோது அந்த வீட்டின் கதவு திடீர் என்று திறந்துள்ளது.

துப்பாக்கி

துப்பாக்கி

கதவை திறந்து கொண்டு பாட்டி ஒருவர் கையில் துப்பாக்கியுடன் வெளியே வந்து எவன்டா அவன் என் வீட்டிற்கு முன்பு சத்தமாக பாட்டு போடுவது என்று திட்டியுள்ளார். பாட்டியின் கையில் துப்பாக்கியை பார்த்த சூர்யா, பூமிகா உள்ளிட்டோர் கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். பாட்டியோ அவர்களை விடாமல் துரத்திக் கொண்டு சென்றுள்ளார்.

பூமிகா

பூமிகா

முறையான அனுமதி பெறவில்லை என்று கூறியுள்ளார் அந்த பாட்டி. அதனால் தான் பாட்டி கோபப்பட்டு துப்பாக்கியை காட்டி படக்குழுவினரை ஓட ஓட விரட்டியுள்ளார். இந்த சுவாரஸ்யமான சம்பவத்தை ஒரு நாளும் மறக்கவே முடியாது என்று பூமிகா தெரிவித்துள்ளார்.

குழந்தை

குழந்தை

பூமிகா திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ஹீரோக்களுக்கு அக்கா, அண்ணி ஆகிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார். அப்படி அக்கா, அண்ணியாக நடிக்க வெட்கப்படவில்லை என்கிறார் பூமிகா. தோனி படத்தில் கூல் கேப்டனுக்கு அக்காவாக நடித்தது தனி அனுபவம் என்று அவர் தெரிவித்துள்ளார். அது போன்ற வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாக கருதுகிறார் பூமிகா. தனக்கு திருமணம், குழந்தை என்றானபோதும் தான் ஒருபோதும் நடிப்பில் இருந்து பிரேக் எடுக்கவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X