சூப்பர் ஸ்டார் கொடுத்த பணத்தை மறுத்த கவிஞர் பிறைசூடன் - ரீவைண்ட் ராஜா ஸ்பெஷல்
சென்னை: தமிழ் திரையுலகில் மிக முக்கியமான பாடலாசிரியர்களுள் ஒருவர் கவிஞர் பிறைசூடன்.
80'களில் இருந்து இதுவரை 500க்கும் மேற்பட்ட படங்களில் 1500 பாடல்களுக்கு மேல் இயற்றியுள்ளார். பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
தன்னுடைய அனுபவம் குறித்து பலதரப்பட்ட விஷயங்களை ரீவைண்ட் ராஜா நிகழ்ச்சியில் பிறைசூடன் பகிர்ந்துள்ளார்.

ஆட்டமா தேரோட்டமா
தன்னுடைய வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த பாடல் கேப்டன் பிரபாகரன் படத்தில் தான் எழுதிய ஆட்டமா தேரோட்டமா பாடல் என குறிப்பிட்டுள்ளார். கேப்டன் என்ற பெயருக்கு பின்னால் உள்ள சில பிரச்சனைகள் காரணமாக அந்த பாடலை ரேடியோவில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார்.

முக்கியமான பாடல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ராஜாதி ராஜா படத்தில் இடம்பெற்ற மீனம்மா மீனம்மா பாடல் இன்று வரையிலும் மிக பிரபலமான ஒன்று. அந்த பாடலை தான் எழுத எவ்வாறு வாய்ப்பு கிடைத்தது என்பதையும், அந்த பாடலுக்காக ரஜினி தனக்கு பரிசாக பணம் கொடுத்ததையும் அதனை தான் மறுத்ததையும் நினைவு கூர்ந்துள்ளார்.

கவிஞர் வாலி
தங்களுடைய முன்னோடிகளான முக்கிய பாடலாசிரியர்களிடம் இருந்து தங்களுக்கு கிடைத்த பாராட்டுக்கள் என்ன என்பது குறித்த கேள்விக்கு, ஆலங்குடி சோமு, புதுமை பித்தன், முத்துலிங்கம் ஆகியோரிடம் கிடைத்த பாராட்டுக்களும் மற்றும் தந்தை ஸ்தானத்தில் வாலி வாழ்த்தியதையும் தான் பெரிய அங்கீகாரமாக பார்ப்பதாக கூறியுள்ளார்.

பிடித்த கவிஞர்
இந்த தலைமுறையில் தங்களுக்கு மிகவும் பிடித்த கவிஞர் யாரென்ற கேள்விக்கு, நா. முத்துக்குமார் அந்த இடத்தை நிரப்புவார் என்று எதிர்பார்த்த வேளையில் காலம் நம்மிடம் இருந்து அவரை பறித்து கொண்டது என கூறியுள்ளார்.இன்னும் பலதரப்பட்ட விஷயங்களை இந்த பேட்டியில் ரீவைண்ட்செய்துள்ளார் கவிஞர் பிறைசூடன்


Click it and Unblock the Notifications











