பிக் பாஸ் புகழ் அபிராமியை சப்புன்னு அறைந்த நடிகை

By Siva

Recommended Video

Abhirami Emotional Video : மனமுடைந்த அபிராமியின் வீடியோ

சென்னை: நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் அபிராமியை ஓங்கி அறைந்திருக்கிறார்.

அபிராமி பிக் பாஸ் 3 வீட்டில் இருந்தபோது அவர் ஃபமிதா பானுவாக நடித்திருந்த நேர்கொண்ட பார்வை படம் ரிலீஸானது. அந்த படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. படத்தில் ஒரு காட்சியில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் அபிராமியை ஓங்கி அறைவது போன்று இருந்தது.

அந்த காட்சி மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் பற்றி அபிராமி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

நேர்கொண்ட பார்வை

நேர்கொண்ட பார்வை

படம் ரிலீஸானபோது ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட படக்குழுவுடன் இல்லாமல் போனது வருத்தமாக உள்ளது. ஆனால் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளேன். அந்த படத்தில் நடித்தபோது நான், ஷ்ரத்தா, ஆண்ட்ரியா ஆகியோர் நெருக்கமான தோழிகள் ஆகிவிட்டோம்.

அறை

அறை

கேமராவை ஆஃப் செய்துவிட்டால் நாங்கள் செம ஜாலியாக அரட்டை அடிப்போம். ஆனால் கேமராவுக்கு முன்பு வந்துவிட்டால் ஆளே மாறிவிடுவோம். அந்த படத்தில் நடித்த ஒவ்வொரு நாளையும் மறக்கவே முடியாது. ஷ்ரத்தா என்னை அறைவது போன்ற காட்சியில் நிஜமாகவே அடித்தார். அவர் என்னை நிஜமாக அறைந்தார்.

படம்

படம்

படத்திற்காக நாங்கள் நிஜமாகவே அழுதோம். அதை எல்லாம் பெரிய திரையில் பார்த்தபோது அறை வாங்கியது, அழுதது ஒர்த் என்று புரிந்தது. நான் ஷ்ரத்தா, ஆண்ட்ரியா ஆகியோரை மிஸ் பண்ணுகிறேன். நான் பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து வெளியே வந்த உடன் எனக்கு ஷ்ரத்தா மெசேஜ் அனுப்பினார். சென்னைக்கு வரும்போது என்னை சந்திப்பதாக கூறினார் என்றார் அபிராமி.

ஹிட்

ஹிட்

அபிராமி பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது அவரை பற்றி ஷ்ரத்தாவிடம் கேட்டதற்கு அபி ரொம்ப ஸ்வீட்டானவர் என்று தெரிவித்தார். தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்காததால் அது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது என்று ஷ்ரத்தா மேலும் தெரிவித்தார். நேர்கொண்ட பார்வை ரீமேக் தானே என்று பலரும் நினைத்த நிலையில் மக்கள் அதற்கு அமோக வரவேற்பு கொடுத்து பெரிய அளவில் வெற்றி பெறச் செய்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X