Vignesh Shivan: எல்லாத்துக்கும் காரணம் தனுஷ் தான்.. தப்பு யார் மேல? மனசில் இருந்ததை கொட்டிய விக்னேஷ் சிவன்

சென்னை: தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகர்களின் ஒருவர் தனுஷ். இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என சகலகலா வல்லவனாக கலக்கி வருகிறார். இவரால் தமிழ் சினிமாவில் அடையாளம் காட்டப்பட்ட பலரும் வெற்றியாளர்களாக கலக்கி வருகிறார்கள். அதில் ஒருவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். ஆனால் இயக்குநர் விக்னேஷ் சிவன் உடன் அவரது மனைவி நயன்தாரா மற்றும் தனுஷ் இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனையால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் அளவுக்கு எதிரெதிர் துருவங்களாக நிற்கின்றனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது எல் ஐ கே படத்தில் புரமோஷனுகாக அளித்த பேட்டி ஒன்றை தனுசு குறித்து மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அவர் அளித்த பேட்டியில், "எனது வாழ்க்கையில் தனுஷ் சார் என்றால் எனது அப்பா தான் நினைவுக்கு வருவார். எனது அப்பாவின் நினைவு நாளும் தனுஷின் பிறந்த நாளும் ஒரே நாள். நான் இன்றைக்கு எனது வாழ்க்கையில் இப்படி இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் தனுஷ் சார் தான். வேலையில்லா பட்டதாரி படத்தின் படப்பிடிப்பின் போது சுமார் இரண்டரை ஆண்டுகள் நான் அவருடன் மிகவும் நெருக்கமாக இருந்தேன்.

அவர் சாப்பிட்டால் தான் சாப்பிடுவேன், அப்பொழுது இருந்த டீம் நாங்கள் அப்படி இருந்தோம். அவருடனான எனது உறவு பிரிந்ததற்கு நான் உண்மையிலேயே வெட்கப்படுகிறேன். பல நாட்கள் நான் யோசித்து இருக்கிறேன், எப்படி இந்த உறவை நான் தக்க வைக்காமல் போனேன், எங்கு தவறு நடந்தது என்றெல்லாம் நான் யோசித்து இருக்கிறேன்.

Where Did It Go Wrong Vignesh Shivan Opens Up About Fallout with Dhanush

வருத்தம்: ஆனால், இருவருக்கிடையில் ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்பட்டு அதன் மூலம் அவர்கள் பிரிந்து இருக்கிறார்கள் என்றால் அந்தப் பிரச்சினையை பேசி தீர்த்துவிட முடியும். ஆனால், இருவருக்கும் இடையில் எந்த பிரச்சனையுமே இல்லாமல் அவர்கள் பிரிந்து விட்டார்கள் எனும் பொழுது அந்த இடைவெளியை எப்படி நிரப்புவது என்று எனக்கு இதுவரை தெரியவில்லை. ஆனால் அவர் இல்லாமல் எனது வாழ்க்கை இன்றைக்கு இந்த அளவுக்கு இல்லை. அவர் போன்ற ஒரு நல்ல உறவை இழந்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன், வெட்கப்படுகிறேன்" என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஆச்சரியம்: விக்னேஷ் சிவனின் இந்த கூற்று பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தனுஷ் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தில் இயக்குநராக விக்னேஷ் சிவன் பணியாற்றினார். அந்த படத்தில் நடிகையாக நடித்த நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இதில் இவர்களுக்கு இடையில் எங்கு பிரச்சனை ஏற்பட்டது என்பது பலருக்கும் ஆச்சரியமாகவும் இன்னும் குழப்பமாகவும் இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X