கனா காணும் காலங்கள் சீசன் 2வில் ரியல் ஜோடியாக மாறப்போவது யார்? சுவாரஸ்ய தகவல்கள்!

சென்னை: ப்ரணிகா தான் அதிகமாக Bun வாங்குவார் என்றும், தீபிகாவுக்கு தான் ஸ்கூல் யூனிபார்ம் பொருத்தமாக இருக்கும் என்று கனா காணும் காலங்கள் சீசனில் நடிக்கும் அரவிந்த் செய்ஜூ கூறினார்.

கனா காணும் காலங்கள் சீசன் 2வில் அழுகை மட்டுமல்லால், Love, Fun போன்றவையும் சமமாக கொடுக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்தனர்.

விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பான கனா காணும் காலங்கள் நிகழ்ச்சியின் அடுத்த சீசன், அதாவது கனா காணும் காலங்கள் 2, விஜய் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த இரண்டாவது சீசனில் நடித்துள்ள அரவிந்த் செய்ஜூ, ப்ரணிகா, ஆசிக், தீபிகா ஆகியோர் நமது பிலீம்பீட் வினோத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

ப்ரணிகா ஆப்சென்ட்

ப்ரணிகா ஆப்சென்ட்

கேள்வி: கலகலப்பான கனா காணும் காலங்கள் சீசன் 2ல் உங்களில் யார் அதிகமாக Bun வாங்கியது?

பதில்: ப்ரணிகா தான். ப்ரணிகா வீட்டிலிருந்து எல்லாம் சமைத்து எடுத்து வந்து விடுவார். ஷூட்டிங்கின் போது பேசி பேசி எல்லோரும் ரொம்ப களைத்து விடுவார்கள். நாங்கள் கொண்டு வரும் உணவுகளை பகிர்ந்து சாப்பிடுவோம். நாங்கள் எல்லோரும் ஜாலியாக பேசிக்கொண்டிருக்கும்போது, அடிக்கடி Bun வாங்குவதும் ப்ரணிகா தான். நாங்கள் எல்லோரும் ஒரு தடவை ப்ரணிகா ஆப்சென்ட் ஆன அன்று, இயக்குனர் உள்பட சினிமாவிற்கு சென்றோம். வகுப்பை மட்டம் போட்டு சினிமாவுக்கு செல்லும் மாணவர்கள் மாதிரி நாங்கல்ல. ஷூட்டிங்கை முடித்து விட்டு ஜாலியாக செல்லுவோம் என்றனர்.

தீபிகா குழந்தை மாதிரி

தீபிகா குழந்தை மாதிரி

கேள்வி: உங்களில் யாருக்கு ஸ்கூல் யூனிபார்ம் ரொம்ப பொருத்தமாக இருந்தது?

பதில்: பொதுவாக எல்லோரும் தீபிகாவ பெரிய பொண்ணு என்பார்கள். ஆனால் அவர்கள் மனதளவில் ரொம்ப குழந்தை மாதிரி. அதே மாதிரி தான் ஸ்கூல் யூனிபார்ம் தீபிகாவுக்கு தான் அழகாக இருக்கும்.

ப்ரணிகா வீட்டில் அழுகை தான்

ப்ரணிகா வீட்டில் அழுகை தான்

கேள்வி: விஜய்டிவியை பொறுத்தவரை ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாக வடிவமைப்பார்கள். இந்த சீசனில் யார் அதிகமாக அழுதுள்ளீர்கள்?

பதில்: இது குறித்து அரவிந்த செய்ஜூ கூறுகையில், நான் ரொம்பவே அழுது இருக்கிறேன். தீபிகா அழுவதையும் நான் பார்த்திருக்கிறேன். ப்ரணிகா வீட்டில் எல்லாம் அழுகை தான். இந்த சீசனில் அழுகை மட்டுமல்லால், காதல் போன்றவையும் சமமாக கொடுக்கப்பட்டிருக்கும் என்றார்.

ரொமான்ஸ்க்கு ஏங்குவது யார்?

ரொமான்ஸ்க்கு ஏங்குவது யார்?

கேள்வி: ஒரு வகுப்பறை என்றால் ஒரு மடசாம்பிராணி போன்ற மாணவர் இருப்பார். இந்த சீசனில் அந்த மடசாம்பிராணி யார்?

பதில்: சத்யநாராயணன் தான் மடசாம்பிராணி. அடாவடிவத்தனம் செய்வதும் அவன் தான். அரவிந்த செய்ஜூ ரொம்ப அமைதியாக இருப்பேன். செல்லமுத்து என்ற கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடிய ஏகன் ரொமான்ஸ்க்கு சுற்றி சுற்றி வருவான். அவனது துரதிஷ்டம் அவனுக்கு இந்த சீசனில் ஜோடி கிடையாது. இருந்தபோதிலும் அவனே ஒரு ஜோடியை உருவாக்கியிருக்கிறேன். வரும் நாட்களில் அதுவும் ஒளிபரப்பாகும் என்றனர்.

சினிமாத்துறைக்கு யார் தகுதியானவர்கள்?

சினிமாத்துறைக்கு யார் தகுதியானவர்கள்?

கேள்வி: இந்த சீசனில் நடிப்பவர்களில் சினிமாத்துறைக்கு செல்ல தகுதியானவர்கள் யார்?

பதில்: ப்ரணிகா: என்னை பொறுத்தவரை அரவிந்த் செய்ஜூ, தேஜா, ராஜா ஆகிய மூவரும். தேஜா, அரவிந்த செய்ஜூவின் நடிப்பை நான் பார்த்திருக்கிறேன். ராஜாவை பொறுத்தவரை நடிப்பு மட்டுமின்றி நல்ல டான்ஸரும் கூட. அவர் ஒரு சீனில் நடிக்கும்போது எங்களை மறந்து நாங்கள் அழுதுவிட்டோம் என்றார்.

தீபிகா: ப்ரணிகா கூறியது போல் மூன்று பேரும் திறமையானவர்கள். இவர் மட்டுமின்றி இன்னொரு நபரை நான் சொல்ல ஆசைப்படுகிறேன். ராஜூ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் விஸ்வமித்ரன். என்னுடைய கண்களுக்கு மட்டும் அவர் தனியாக தெரிகிறார். ரொம்ப சின்சியராகவும், வித்தியாசமாக நடிக்கக்கூடியவர்.

ஆசிக்: இந்த சீசனில் நடிக்கும் அனைவரும் திறமையானவர்கள் தான். அனைவரும் சினிமாத்துறையில் சென்று வெற்றி பெற வேண்டும் என்பது எனது ஆசை. மவுரிஸ் எல்லா கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்யக்கூடியவர். குறிப்பாக வில்லனாகவும், நடிகராகவும், காமெடியனாகவும் நடிக்கக்கூடியவர். கல்யாணியும் சிறந்த நடிகையாக வலம் வருவார் என்றார்.

செல்ஃபி பட்டம் யாருக்கு?

செல்ஃபி பட்டம் யாருக்கு?

கேள்வி: அதிகமாக செல்பி எடுக்கக்கூடியவர் யார்?

பதில்: அந்த பட்டத்தை நாங்கள் அனைவரும் ஒருமனதாக ப்ரணிகாவுக்கு வழங்குகிறோம் என்றனர். தீபிகா, ப்ரணிகா ஆகியோர் தனது போட்டோக்களை போடுவது அழகாக இருக்கும். எல்லோரும் கனா காணும் காலங்கள் வந்ததற்கு பிறகு செலிபிரிட்டி ஆவார்கள். ஆனால் இவர்கள் இரண்டு பேரும் செலிபிரிட்டி ஆன பிறகு கனா காணும் காலங்கள் நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர் என்றார் அரவிந்த் செய்ஜூ.

சினிமாட்டிக் கூடன் கூடிய ரியாலிட்டி

கேள்வி: தற்போது இருக்கக்கூடிய ஸ்கூல்ஸ் ரியாலிட்டி இந்த சீசனில் எந்த அளவுக்கு கனெக்ட் ஆகி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்.

பதில்: கொஞ்சம் சினிமாட்டிக் உடன் கூடிய ரியாலிட்டி தான் இந்த சீசனில் இருக்கும். சினிமாட்டிக்கு இருந்தால் தான் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் என்பதற்காக கொஞ்சம் சேர்த்திருக்கிறோம். அதிகளவில் ரியாலிட்டி இருக்கும். இந்த சீசனில் மாணவர்கள் கவுதம் குரூப், கலை குரூப் என்று வகையாக பிரிந்துள்ளனர்.

கலை குரூப்பில் அரவிந்த செய்ஜூ, தேஜா, ஏகன், விஸ்வா, மவுரிஸ், தீபிகா, ப்ரீத்திகா ஆகியோரும், கவுதம் குரூப்பில் ராஜா, ஆசிக், ப்ரணிகா, தீபிகா, அக்ஷதா, கல்யாணி, பர்வேஷ், கீர்த்தன், பிரகதீஷ், டீச்சராக சங்கீதாவும், டி.எஸ்.கே, ராஜ்மோகன், பாரத் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ரியல் ஜோடி யார்?

கேள்வி: இந்த சீசனில் ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறுபவர்கள் யார்?

பதில்: இப்பொழுது ஷூட்டிங் போய் கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் அந்த மாதிரி எதுவும் நடைபெறவில்லை. நல்ல நண்பர்களாகவும், குடும்ப உறுப்பினர்களாக பழகி கொண்டிருக்கிறோம் என்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X