யார் அடுத்த விஜயசாந்தி? ... இரை வெப் தொடர் பற்றி அபிஷேக் மற்றும் ஸ்ரீஜா ஸ்பெஷல் பேட்டி
சென்னை: குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதை நிறுத்த வேண்டும் என்று நடிகர் அபிஷேக் தெரிவித்துள்ளார். திரைப்படங்களில் வசனம் பேசாமல் நடிப்பது மிகவும் சிரமம் என்றும் தெரிவித்தார்.
திரைப்பட துறையில் பல பெண் அசோசியேட் இயக்குனர்கள் குழந்தை பருவத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்கள் என்று இறை படத்தின் இயக்குனர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
குழந்தையாக இருந்த போது பாலியல் துன்புறுத்தலுக்கு தான் ஆளானதாக இறை படத்தில் நடித்த நடிகை ஸ்ரீஜாவும் தெரிவித்தார். மூத்த நடிகர்கள் சரத்குமார், நிழல்கள் ரவி ஆகியோர் நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் ஆஹா ஒடிடி தளத்தில் வெளியான இறை திரைபடத்தில் நடிகர் அபிஷேக் சங்கர், நடிகை ஸ்ரீஜா ஆகியோர் பிலிம்பீட் வினோத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியைப் பற்றி இங்கு பார்க்கலாம் .

ரசிகர்கள் அழைத்து
கேள்வி: இறை படத்திற்கு மக்களிடம் எப்படி வரவேற்பு இருக்கிறது?
பதில்: இது குறித்து நடிகை ஸ்ரீஜா கூறுகையில், படத்திற்கு வரவேற்பு நன்றாக உள்ளது. என்னுடைய நடிப்பு பாராட்டும் விதமாக உள்ளதாக தெரிவித்தனர். உண்மையாகவே நீங்கள் போலீஸ் அதிகாரியாக இருக்கிறீர்கள் என்று பலரும் தெரிவித்தது சந்தோஷமாக உள்ளது.
நடிகர் அபிஷேக் சங்கர் கூறுகையில், நல்ல கதையை மக்களுக்கு கூறியுள்ளோம். இந்த கதையை மக்களை சென்றடைய சிறிது காலங்கள் ஆகும். எனது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என்னை அழைத்து திரைப்படம் நன்றாக வந்துள்ளதாக தெரிவித்தது சந்தோஷமாக உள்ளது என்றார்.

பயங்கர கோபம்
கேள்வி: இறைபடத்தில் அபிஷேக் சங்கர் நடிப்பு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ஸ்ரீஜா?
பதில்: நடிகர் அபிஷேக் சங்கரின் கேரக்டரை பார்த்து பயங்கர கோபம் ஆனேன். இறை படத்தில் அபிஷேக் சங்கரை தவிர வேறு யாரும் இந்த கேரக்டரை செய்திருக்க முடியாது. இந்த கேரடக்ருக்கு இவர் தான் பொருத்தமானவர். சும்மா சுற்றிக் கொண்டு இருந்த என்னை இந்த படத்தில் நடிக்க வைத்தது இவர் தான்.

அப்படியே திரையில் காட்ட முடியாது
கேள்வி: நடிகர் அபிஷேக் சங்கர் நீங்கள் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் குறித்து கூற விரும்புவது...
பதில்: குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் என்பது தொடுவது மட்டுமல்ல, பார்க்கின்ற பார்வையும் தவறாக இருக்கும்பட்சத்தில் அதுவும் பாலியல் துன்புறுத்தல் தான். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலோனர் அங்கிள் போன்றவர்கள் தான். நிறைய பேர் இது தொடர்பாக டாக்குமெண்ட்ரி பிலிம் எடுத்துள்ளார்கள். குட் டச், பேட் டச் தொடர்பாக பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் குறித்து பலரும் பேசுகின்றனர். குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் நடைபெறுவதை அப்படியே திரையில் காட்ட முடியாது. இது போன்ற கதையை படமாக்கும் பொழுது கவனமாக கையாள வேண்டும். கத்தியில் நடப்பது போன்றதாகும். இதையெல்லாம் மனதில் வைத்து தான், இயக்குனர் ராஜேஷ் இத்திரைக்கதையை திறம்பட கையாண்டுள்ளார். குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதை நிறுத்த வேண்டும். நாம் பேசிக்கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் கூட 6 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்பது வருத்தப்படவேண்டிய விஷயம் என்றார்.

மோகமுள் கேரக்டரை விட
கேள்வி: நடிகர் அபிஷேக் சங்கர் இறைபடத்தில் உங்கள் கதாபாத்திரம் குறித்து...
பதில்: நான் எம்.எல்.ஏ., கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த கதாபாத்திரத்தை அடித்து துவைத்தனர். இதனால் உடலளவிலும் பாதிக்கப்பட்டேன். மனதளவிலும் பாதிப்படைந்தேன். நான் டப்பிங் செய்யும்போது, இயக்குனர் கூறுகையில் 3வது நாள், 4வது நாள் வலியை உணர்ந்து அதற்கேற்ப டப்பிங் செய்யுங்கள் என்றார். இந்த கதாபாத்திரம் ரொம்ப வித்தியாசமானது. மோகமுள் படத்தில் செய்த கேரக்டரை விட ரொம்ப கஷ்டமானது. இந்த படத்தில் ஒரு இடத்தில் மட்டுமே குழந்தையை டச் பண்ணுவேன். வேறு எந்த இடத்திலும் இது போன்ற காட்சிகள் இடம்பெறாது. ஆனால் என்னுடைய கேரக்டர் எல்லோரையும் வெறுக்கும்படி செய்தது. இதனால் நான் வெற்றியடைந்துள்ளேன் என்றார்.

10க்கு 9 பேர்
கேள்வி: நடிகை ஸ்ரீஜா நீங்கள் குழந்தை பருவத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளீர்களா?
பதில்: நான் மட்டுமல்ல. இங்குள்ள பெண்கள் 10க்கு 9 பேர் குழந்தை பருவத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பார்கள். இதை மனதில் வைத்து தான் இந்த கதாபாத்திரத்தை ஏற்று என்னால் திறம்பட செய்ய முடிந்தது.

மிஷ்கின் எடுத்திருந்தால்
கேள்வி: இயக்குனர் ராஜேஷ் குறித்து, அபிஷேக் சங்கர் நீங்கள் கூற விரும்புவது
பதில்: நமது சினிமாத்துறையில் பல பெண்கள், பல பெண் அசோசியேட் இயக்குனர்கள் ஏதாவது ஒரு காலக்கட்டத்தில், ஏதாவது ஒரு விதத்தில் குழந்தை பருவத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருந்திருப்பார்கள். அதன் வெளிப்பாடே இந்த திரைக்கதை என்று இயக்குனர் ராஜேஷ் கூறினார். மேலும் இந்த திரைக்கதையை ரொம்ப எதார்த்தமாக கையாண்டுயிருப்பார். இந்த கதையை வெற்றிமாறன், மிஷ்கின் எடுத்திருந்தால் எப்படியிருக்குமோ, அதை விட பிரமாதமாக செய்திருக்கிறார் இயக்குனர் ராஜேஷ். இத்திரைபடத்தில் டயலாக் இல்லாமல் என்னை மட்டுமின்றி பலரை நடிக்க வைத்திருப்பார். வசனம் பேசாமல் நடிப்பது ரொம்ப கஷ்டம். அவ்வாறு நடித்ததன் காரணமாக இன்று வெற்றியடைந்துள்ளோம்.
அடுத்த விஜயசாந்தியாக
இந்த வெற்றிக்கு இயக்குனர் பெற்ற வெற்றியாகும். அது மட்டும் இல்லாமல் இப்போதைய தமிழ் சினிமாவில் அடுத்த நடிகை விஜயசாந்தியாக, நடிகை ஸ்ரீஜா இருப்பார் என்றார் சிரித்தபடி அபிஷேக் சங்கர். அதற்கு முக்கிய காரணம் அந்த காஸ்ட்யூம்ஸ் மற்றும் கதாபாத்திரத்தின் தன்மை என்பதை இரண்டு பேரும் இந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டனர் .இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/5ap9SZuLG90 இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத் மற்றும் நடிகர் அபிஷேக் சங்கர் , நடிகை ஸ்ரீஜா இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.


Click it and Unblock the Notifications











