கவுதம் மேனனை பற்றி ரஜினியிடம் போட்டுக் கொடுத்த 'அந்த நல்லவர்' யார்?
Recommended Video

சென்னை: துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்த ரஜினியின் மனதை யாரோ ஒரு நல்லவர் மாற்றிவிட்டதாக இயக்குனர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.
கவுதம் மேனன் விக்ரமை வைத்து எடுத்து வரும் படம் துருவ நட்சத்திரம். படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படம் குறித்து சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார் கவுதம் மேனன்.
துருவ நட்சத்திரம் குறித்து கவுதம் மேனன் கூறியிருப்பதாவது,

படம்
துருவ நட்சத்திரம் கதையை ரஜினி சாரிடம் முதலில் கூறினேன். அவருக்கு கதை மிகவும் பிடித்து நடிப்பதாக என்னிடம் காலையில் தெரிவித்தார். அந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பதாக இருந்தது.

மறுப்பு
காலையில் சந்தோஷமாக நடிக்கிறேன் என்று கூறிய ரஜினி மாலையில் முடியாது என்று கூறிவிட்டார். கவுதம் மேனன் படத்தில் நடிக்காதீர்கள் என்று சினிமா துறையை சேர்ந்த நல்லவர் அவரிடம் தெரிவித்து மனதை மாற்றிவிட்டார்.

கபாலி
ரஜினி என் படத்தில் நடிக்க மறுத்த பிறகு பா. ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். நான் விக்ரமிடம் கதை சொல்ல அவருக்கு பிடித்துப் போய் நடிகக் சம்மதித்தார் என்றார் கவுதம்.

பிரச்சனை
துருவ நட்சத்திரம் படம் சூர்யாவை வைத்து எடுக்க வேண்டியது. ஆனால் சூர்யாவுக்கும், கவுதம் மேனனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் அது நடக்காமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











