For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நடிகர் பிரசாந்திற்கு சமீபத்தில் பிடித்த படம் இது தானாம்... யார் ஹீரோ தெரியுமா ?

  |

  சென்னை: என்னுடைய வளர்ச்சிக்கு காரணம், என்னுடைய ரசிகர்கள் தான் என்று நடிகர் பிரசாந்த் கூறினார்.

  Recommended Video

  Andhagan | Prashanth | என் ரசிகர்கள்தான் எனக்கு எல்லாமே | Filmibeat Tamil

  பிரசாந்த் நடித்த பல படங்கள் தமிழ் ரசிகர்களால் என்றும் மறக்க முடியாத பல நல்ல படங்களாக இன்று வரை நிறைய பாராட்டுகளை பெற்று வருகிறது என்பது தான் பெருமையான தருணம் .

  நடிகை சிம்ரன் தான் எனது முதல் எதிரி என்றும் அவர் கொடுத்த பேட்டியில் தெரிவித்தார். சென்னையில் ஜோஸ் ஆலுக்காஸ் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகர் பிரசாந்த் நமது பிலீம்பீட் வினோத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு பார்க்கலாம்

  தட்டிக் கொடுத்து வேலை வாங்கினார்... இந்த மூவர் கூட்டணி சொல்றத கேளுங்க! தட்டிக் கொடுத்து வேலை வாங்கினார்... இந்த மூவர் கூட்டணி சொல்றத கேளுங்க!

   கலைப்புலி தாணு

  கலைப்புலி தாணு

  கேள்வி: அந்தகன் படம் ரீமேக் படமா?

  பதில்: அந்தகன் படம் ரீமேக் மாதிரி என்று சொல்வதை விட இது முழுமையான தமிழ்படம். இப்படமானது விரைவில் தியேட்டரில் வெளியாக உள்ளது. அந்தகன் திரைப்படத்தின் ப்ரமோஷன் வேலை நடைபெற்று கொண்டிருக்கிறது. போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலை முழுவதும் நடைபெற்று விட்டது. இப்படத்தை கலைப்புலி தாணு வெளியிடுகிறார். படத்தின் ஆடியோவை சோனி மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது. அந்தகன் படத்தின் ஆடியோ முதல் டிராக் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

  எனது வில்லி நடிகை சிம்ரன் தான்

  எனது வில்லி நடிகை சிம்ரன் தான்

  கேள்வி: படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் யார்?

  பதில்: அந்தகன் திரைப்படத்தில் சிம்ரன் வில்லி கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளாரா? என்று பலரும் கேட்கின்றனர் . இப்போது அந்த சஸ்பென்ஸ் விஷயத்தை பேசுவதை விட . அவர் ஏற்கனவே என்னுடன் ஆறு படங்களில் நடித்துள்ளார் என்பதை பெருமையாக சொல்வேன் . அவைகள் அனைத்தும் வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. அவர் நடிகை மட்டுமல்ல, என்னுடைய நண்பரும் கூட. மேலும் இப்படத்தில் ப்ரியா ஆனந்த், கார்த்திக், யோகிபாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, வனிதா என திரைப்பட்டாளமே நடித்துள்ளார்கள். இது குறித்து எனது அப்பா கூறும்பொழுது, ஒவ்வொரு கதாபாத்திரமும் நன்றாக நடித்துள்ளனர். ஒவ்வொரு காட்சியும் நன்றாக வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

  மண்ணும், பொண்ணும் முக்கியம்

  மண்ணும், பொண்ணும் முக்கியம்

  கேள்வி: உங்களுக்கு தங்கத்தின் மீது ஈடுபாடு அதிகமா?

  பதில்: நமது கலாசாரத்தில் தங்கம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நமது முன்னோர்கள் கூறியது போல் மண்ணும், பொண்ணும் இரண்டும் முக்கியம். அதாவது நிலத்திலோ அல்லது தங்கத்திலோ முதலீடு செய்ய வேண்டும். எனக்கு தங்கத்தில் மீது ஈடுபாடு கிடையாது. ஆனால் முதலீடு செய்வேன். நமக்கு இது எதிர்காலத்தில் கஷ்டம் வரும்பொழுது பெரிதும் பயன்படும்.

  வெற்றி வாகை சூட

  வெற்றி வாகை சூட

  கேள்வி: தற்போது வெளிவந்த படங்களில் உங்களை கவர்ந்த படம் எது?

  பதில்: அந்த காலக்கட்டத்தில் தான் படங்கள் தயாரிப்பது சிரமம். ஆனால் இப்போது யாரும் வேண்டுமானாலும் படம் பண்ணலாம். நல்ல கதை இருந்தால், மொபைல் போனை கொண்டு படம் பண்ணலாம். அந்தளவுக்கு டெக்னாலஜி வளர்ந்துள்ளது. நல்லதொரு தளம் கிடைத்துள்ன . இதை ஒவ்வொருவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வளரும் இளம் இயக்குனர்களும் வெற்றி வாகை சூட வேண்டும். அனைத்து படங்களும் வெற்றியடைய வேண்டும். அவ்வாறு வெற்றியடையும் பட்சத்தில் திரைத்துறையில் உள்ள அனைவரின் குடும்பமும் நன்றாக இருக்கும். தற்போது வெளிவந்த விஷ்ணு விஷால் நடித்த எப்.ஐ.ஆர் படம் மிகவும் பிடித்து இருந்தது. இன்னமும் நிறைய படங்கள் உள்ளன.நல்ல கதை உள்ள அனைத்து படங்களும் அருமையாக உள்ளன என்றார்.

  வரப்பிரசாதம்

  என்னுடைய இந்த வளர்ச்சிக்கு காரணம் எனது ரசிகர்கள் தான். கடவுள் எனக்கு கொடுத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் இவர்கள் தான். ரசிகர்கள் தான் எனக்கு எல்லாமே என்றார்.இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/M57SdC0Wb3Y இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத் மற்றும் நடிகர் பிரசாந்த் இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள் .

  English summary
  Who is the Actor in Prashanth’s Favourite Movie Latest
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X