Don't Miss!
- Sports
யாரு சாமி இது?? தகர்ந்து போன பிரைன் லாராவின் 19 ஆண்டு பெருமை.. காரணம் ஜஸ்பிரித் பும்ரா!!
- News
மக்களே உஷார்! தமிழகத்தில் திக் திக் கிளப்பும் கொரோனா.. பாதிப்பு 2,500 ஐ தாண்டிருச்சாம்
- Automobiles
டாடாவிற்கு பக்கத்துல கூட யாரும் வர முடியாது! மாருதிலாம் சீன்லயே இல்ல! விஷயத்தை கேக்கும்போதே ஆச்சரியமா இருக்கு!
- Finance
நீங்களும் வேண்டாம்.. உங்க பிஸ்னஸ்-ம் வேண்டாம்.. தெறித்து ஓடிய சீன நிறுவனம்..!
- Lifestyle
இந்த வயசுக்கு மேல ஆண்களுக்கு இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு ரொம்ப அதிகமாம்.. ஜாக்கிரதை!
- Technology
Samsung: கொஞ்ச காசு இப்போ கட்டுங்க, மிச்சம் 12 மாசம் கழிச்சு கொடுங்க.. ஸ்மார்ட்TV மீது சலுகை!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
உண்மையான லக்கிமேன் யார் தெரியுமா ? ... 777சார்லி நடிகை சங்கீதா ஸ்ரீங்கேரி சிறப்பு பேட்டி
சென்னை: தனக்கு பிடித்த நடிகை நயன்தாரா என்று 777 சார்லி பட நடிகை சங்கீதா ஸ்ரீங்கேரி தெரிவித்துள்ளார்.
"ஹரஹர மஹாதேவ்" படத்தில் பார்வதி தேவியாக நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இவர், தற்போது 777 சார்லி படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை சங்கீதா ஸ்ரீங்கேரி , நமது பிலீம்பீட்க்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.
நான்
நீண்ட
முடி
வளர்த்ததால்
சந்தேகப்பட்டார்
கார்த்தி..
நடிகர்
சூர்யா!

மெருகேறியுள்ள நடிப்புத்திறமை
கேள்வி: 777 சார்லி படத்தின் நடித்த அனுபவம் எப்படியிருந்தது?
பதில்: என்னுடைய முதல் படம் ஏ+. பின்னர் ஹரஹர மஹாதேவ் படத்தில் பார்வதிதேவியாக நடித்தேன். நான்கு வருட இடைவெளிக்கு பிறகு நான் நடிக்கும் படம் 777 சார்லி. இந்த படம் மிகவும் அற்புதமான படம். இம்மாதிரியான திரைப்படம் இனி அமையுமா என்பது தெரியவில்லை. மேலும் இந்த படத்தில் பணிபுரிந்த அனைவரும் உணர்வு பூர்வமாக பழகினோம். இந்த படத்தின் பணிபுரியும் காலம் சீக்கிரம் முடியக்கூடாது என்று விரும்பினேன். ஆனால் படம் இப்போது வெளிவந்து விட்டது. என்னுடைய நடிப்பு திறமையை இந்த படம் மூலமாக ரசிகர்கள் தெரிந்து கொள்வார்கள். நான் சினிமாத்துறைக்கு வந்து நான்கு வருடங்களில் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டுள்ளேன். எனது நடிப்புத்திறமை மெருகேறி உள்ளது என்றார்.

தனிக்கவனம்
கேள்வி: உங்களை அழகாக காட்டியுள்ள கேமராமேன் யார்?
பதில்: 777 சார்லி படத்தில் உள்ள கேமரா மேன் அர்விந்த் என்னை அழகாக காட்டியுள்ளதாக நான் நினைக்கிறேன். இந்த படத்தில் அனைவரது கதாபாத்திரத்திற்கும் தனி கவனம் செலுத்தியுள்ளனர். இந்த படத்தில் மேக்கப், ஆடைகள், அணிகலன்கள் என ஒவ்வொன்றுக்கும் அக்கறை எடுத்துள்ளனர்.
கேள்வி: உங்க ஸ்டைலிஸ்ட் ஜோபினா பற்றி நீங்கள் கூற விரும்புவது?
பதில்: ஜோபினா என்னுடைய காலேஜ்மெட். அப்பொழுது அவர்கள் டிசைனிங் படித்து கொண்டிருந்தார். நான் மாடலிங் செய்து கொண்டிருந்தேன். அவர்கள் கைவண்ணத்தில் தான் நான் ரொம்ப அழகாக ஸ்டைலாக இருக்கிறேன். என்னுடைய புகழ் அனைத்தும் ஜோபினாவுக்கு தான் சேரும் என்று சிரித்த படி பதில் அளித்தார் ஸ்ரீங்கேரி.

நயன்தாரா மற்றும் தனுஷ்
கேள்வி: உங்களுக்கு பிடித்த நடிகர், நடிகை யார்?
பதில்:எனக்கு பிடித்த நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. பிடித்த நடிகர் தனுஷ். நடிகர் தனுஷ் ஒரு அமேசிங் நடிகர். ஆடம்பரம் இல்லாத நடிகர். அவருடன் ஒரு திரைப்படத்தில் நடிப்பது தான் எனது ஆசை. .அவர் நடித்த ராஞ்சனா படம் மிக மிக பிடிக்கும் . மேலும் கூறுகையில் தனுஷ் இப்ப எப்படி இருக்கிறாரோ அது போலே எப்போதும் ,எல்லா நேரமும் எளிமையாக இருக்க வேண்டும் என்று நான் மிகவும் ஆசை படுகிறேன் என்று மிகவும் பூரிப்புடன் தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் .

லக்கிமேன் என்றும் புனித்ராஜ்குமார்
கேள்வி: மறைந்த நடிகர் புனித்ராஜ்குமார் குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: ஓ மை கடவுளே படத்தின் கன்னட ரீமேக்கான "லக்கிமேன்" படத்தில் நடித்துள்ளேன். விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் மறைந்த நடிகர் புனித்ராஜ்குமார் நடித்துள்ளார். அனு கேரக்டரை நான் செய்திருக்கிறேன். படத்தில் லக்கிமேன் என்று புனித்ராஜ்குமாரை அழைப்பார்கள். ஆனால் உண்மையில் புனித்ராஜ்குமாருடன் நான் நடித்தது தான் லக்கி, டார்லிங் கிருஷ்ணாவுடன் நடிப்பது இன்னொரு சந்தோஷம்..லக்கிமேன் என்று அந்த கதாபாத்திரத்திற்கு பெயர் வைத்ததே புனித் அவர்கள் தான். மக்கள் மனசில் நீங்கா இடம் பிடித்த ரியல் லக்கி மேன் அவர் தான் என்றார் ஸ்ரீங்கேரி. மேலும் மாரிகோல்டு படத்தில் நடித்து கொண்டிருக்கிறேன் என்று பதிவு செய்தார் . இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/QfgT4laAuEU இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். 777 சார்லி பட கதாநாயகி சங்கீதா ஸ்ரீங்கேரி இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.