பாக்யராஜை நீதான் பெத்தாயா? பார்த்திபன் மறைந்தால் யாரும் வரமாட்டாங்கன்னு சபித்த பிரபலம் யார்?
சென்னை: கடந்த வாரம் திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தது, ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கும் பெரும் துயரச் சம்பவமாக மாறியது. இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து பலரும் மீளாமல் உள்ளனர். அப்படி மீளாதவர்களில் ஒருவர் இயக்குநர் பார்த்திபன். இயக்குநர் பாக்யராஜிடம் உதவி இயக்குநராக இருந்து, அதன் பின்னர் இயக்குநராக அறிமுகமானவர் அவர். அண்மையில் அவர் அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்ட தகவல்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
அதாவது, பாக்யராஜின் மறைவுச் செய்தி தெரிந்தது முதல் அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது வரை, அருகில் இருந்து குடும்ப உறுப்பினரைப் போல அனைத்து பணிகளையும் பார்த்துக்கொண்டவர்களில் பார்த்திபனும் ஒருவர். இந்நிலையில், பாக்யராஜிடம் உதவி இயக்குநராக இருந்தவர்களில் ஒருவர் பார்த்திபனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் மிகவும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

சாபம்: அந்தக் குறுஞ்செய்தியில், "நீதான் பாக்யராஜை பெத்து வளர்த்து, நீயே பாக்யராஜை புதைத்துவிட்டு வந்தது மாதிரி நடந்துக்கிற. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களையும் கொஞ்சம் அனுசரிக்கணும் இல்லையா? மற்றவர்களையும் கூப்பிட்டு ஒரு வேலை சொல்லியிருக்கணும் இல்லையா? இப்படி அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை அனுசரிக்காததால்தான் நீ பொண்டாட்டி, பிள்ளை இல்லாமல் கஷ்டப்படுற. கூடிய சீக்கிரம் பாரு, நீ செத்துப்போயிடுவ. உனக்கு கூட்டமே வராது" என்று எழுதப்பட்டிருந்ததாக பார்த்திபன் கூறியுள்ளார்.
யார் அது?: இந்தக் குறுஞ்செய்தியை அவர் சாந்தனுவிடம் காட்டியதாகவும், அதை அனுப்பியவருக்கு எந்தப் பதிலும் அனுப்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். பார்த்திபனுக்கு இவ்வளவு மோசமாக சபிப்பது போல குறுஞ்செய்தி அனுப்பியது யாராக இருக்கும் என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர்.

கவனம் ஈர்த்த பார்த்திபனின் ட்ரிப்யூட்: அதேபோல், பாக்யராஜின் உடலுக்கு பலரும் மலர் மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தினர். ஆனால், **"நான் ஏதாவது வித்தியாசமாகவும், அதே நேரத்தில் மரியாதையுடனும் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தபோது, நள்ளிரவில் ஒரு ஆர்ட் டைரக்டரை தொடர்புகொண்டு ஒரு பேட்ஜ் தயாரிக்கச் சொன்னேன். அதில் 'அன்புடன் உங்கள் கே. பாக்யராஜ்' என்று அவரது கையொப்பத்தின் நகலுடன் ஒரு அட்டையை உருவாக்கினோம். அந்த அட்டையை அவரது உடலின் மீது வைத்தேன்.
இறுதிச் சடங்கின் போது சாந்தனு, பாக்யராஜ் சாரின் உடலில் கற்பூரம் வைத்து தீபம் ஏற்றியபோதும், அதன் அருகில் அந்த அட்டை இருந்தது. பாக்யராஜ் சாரின் உடல் தகனம் செய்ய நெருப்புக்குள் எடுத்துச் செல்லப்பட்டபோதும் அந்த அட்டை அவருடனேயே இருந்தது"** என்று பார்த்திபன் கண்ணீருடன் உணர்ச்சிவசப்பட்டு கலாட்டா சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். பார்த்திபனின் இந்தப் பேட்டி தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications