6 மணிக்கு மேல.. முதலமைச்சர் விஜய்யின் ஸ்ட்ரிக்ட்டான ரூல்ஸ்க்கு காரணம் இதுதான்.. இயக்குநர் பளிச்

சென்னை: முதலமைச்சர் விஜய் குறித்து நமது அனைவருக்கும் நன்கு தெரிந்தது அவரது படங்கள் தான். ஒரு நிமிடம் ஒன்றரை நிமிடம் என கொஞ்சம் கூட ரெஸ்ட் இல்லாமல் நடனம் ஆடுவார், சண்டைக் காட்சிகளில் தத்ரூபமாக நடிப்பார், ஆக்‌ஷன் சொன்னால் புயலாக இருப்பார், அதுவே கட் சொல்லிவிட்டால் மிகவும் பவ்யமாக இருப்பார் என்று அவருடன் நடித்த சக நடிகர்கள் நடிகைகள் சொல்லிக் கேள்விப்பட்டுள்ளோம். இப்படி இருக்கும்போது, அவரது அரசியல் வருகைக்குப் பின்னர், பலரும் அவர் மீது விமர்சனம் வைத்தது, 6 மணிக்கு மேல் அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொள்வது இல்லை என்பதுதான்.

இந்நிலையில் இது குறித்து இயக்குநர் பேரரசு தனது அண்மைக்கால பேட்டியில் தெரிவித்துள்ள தகவல்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, " விஜய் ஒரு படத்திற்கு கால்ஷீட் கொடுக்கும் போது மொத்தம் மூன்று கண்டிஷன்ஸ் போடுவார். முதலாவது ஞாயிற்றுக்கிழமை படப்பிடிப்பு இருக்கக் கூடாது. இரண்டாவது மாலை 6 மணிக்கு மேல் படப்பிடிப்பு இருக்கக் கூடாது.

Why CM Vijay Avoids Work After 6 PM Director Perarasu Reveals the Real Reason

இரவு நேர ஷூட்டிங்: ஒருவேளை இரவு நேரக் காட்சிகளைப் படமாக்க வேண்டும் என்றால், மறுநாள் காலையில் படப்பிடிப்பு இருக்கக் கூடாது. அதேபோல் தனது பிறந்த நாளில் படப்பிடிப்பு இருக்கக் கூடாது என்று மூன்று கண்டிஷன்ஸ் போடுவார். இதில் அவரது 6 மணிக்கு மேல் படப்பிடிப்பு கூடாது என்பதற்கு மிகவும் முக்கியமான காரணம், அவர் தனது உடல் நலத்தின் மீது எடுத்துக் கொள்ளும் கவனம் தானே தவிர மற்ற எதுவும் இல்லை. அதேபோல் அவரது பிறந்த நாளில் படப்பிடிப்பு கூடாது என்பதற்கு காரணம், அந்த நாளில் அவர் தனது ரசிகர்களைச் சந்திப்பார் என்பதுதான்.

இரண்டு படங்களிலும்: எனது திருப்பாச்சி மற்றும் சிவகாசி என இரண்டு படங்களிலும் தொடர்ந்து ஐந்து நாட்கள் எல்லாம் இரவில் படப்பிடிப்பு நடத்தி உள்ளோம். அதில் அவர் சொன்னபடி நடித்துக் கொடுத்துவிட்டார். ஆனால் மறுநாள் காலையில் அவருக்கு நாங்கள் காட்சி வைக்க மாட்டோம் என்று இயக்குநர் பேரரசு அண்மையில் குமுதம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X