காசுக்காக இல்லை, நான் பிக் பாஸ் வீட்டிற்கு போனதற்கு காரணமே வேறு: அபிராமி

By Siva

Recommended Video

Abhirami Emotional Video : மனமுடைந்த அபிராமியின் வீடியோ

சென்னை: தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் அபிராமி.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி தான் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்தார். படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ள மகிழ்ச்சியில் உள்ளார் அவர்.

இந்நிலையில் அவர் பேட்டி ஒன்றில் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி கூறியிருப்பதாவது,

பிக் பாஸ் 3

பிக் பாஸ் 3

நேர்கொண்ட பார்வை படம் ரிலீஸான போது நான் படக்குழுவுடன் இல்லை. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைத்து வீடுகளுக்கும் எளிதில் செல்லலாம் என்று தெரியும். நான் டைட்டிலை வெல்லவோ, பணப் பரிசு பெறவோ பிக் பாஸ் வீட்டிற்கு செல்லவில்லை. மக்கள் மனதை வெல்லவே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.

முகென் ராவ்

முகென் ராவ்

நான் முதலில் கவின் மீது ஈர்ப்பு உள்ளது என்று கூறிவிட்டு பின்னர் முகென் ராவுடன் நெருக்கமானதை பார்த்து ஏகப்பட்ட பேர் திட்டியுள்ளனர். நம் மனதில் தோன்றுவதை வெளிப்படுத்துவதில் தவறு இல்லை. முகெனுடனான என் நடப்பு ஸ்பெஷலானது. நான் முகெனை மிஸ் பண்ணுகிறேன். அவரும் என்னை மிஸ் பண்ணுவார் என்று எனக்கு தெரியும்.

வனிதா அக்கா

வனிதா அக்கா

நான் முகெனின் பெர்ஃபாமன்ஸுக்கு தடையாக இல்லை என்பதை முகென் மட்டும் தான் சொல்ல முடியும். வனிதா அக்கா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தபோது தான் வெளியே எங்களை பற்றி என்ன பேசுகிறார்கள் என்பது தெரிய வந்தது. அது பெரிய விவாதமானது. பின்னர் முகெனே விளக்கம் அளித்தார்.

நட்பு

நட்பு

முகென் ராவுடனான சண்டைக்கு பிறகு என்னுடன் பேச வேண்டாம் என்று பிற ஆண் போட்டியாளர்கள் அவரிடம் கூறினார்கள். அது நட்புக்காக அப்படி செய்தார்கள் என்று நினைக்கிறேன். நான் அவர்களின் அக்கறையை மதித்து முகெனிடம் இருந்து தள்ளியே இருந்தேன். மற்றவர்கள் எங்களை பற்றி பேசுவதை விரும்பாததால் நாங்கள் அவ்வளவாக பேசவில்லை.

ஷெரின்

ஷெரின்

சாக்ஷி, ஷெரின், லாஸ்லியா ஆகியோருடன் நேரம் செலவிட்டது பிடித்திருந்தது. சாக்ஷியும், ஷெரினும் அழகிய தேவதைகள், என் தோழிகள். எனக்கும், சாக்ஷிக்கும் இடையே நிறைய சண்டை வந்தாலும் அதை பேசித் தீர்த்துவிடுவோம். ஷெரின் எனக்கு ரொம்ப ஸ்பெஷலானவர். அவர் டைட்டிலை வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். லாஸ்லியா என் சகோதரி போன்றவர். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

அஜித்

அஜித்

வினோத், அஜித் சாருடன் சேர்ந்து படம் பண்ண கொடுத்து வைத்துள்ளேன். நேர்கொண்ட பார்வை படத்திற்காக நான் ஆடிஷன், லுக் டெஸ்ட்டிற்கு சென்ற பிறகு யாருமே என்னை தொடர்பு கொள்ளவில்லை. படப்பிடிப்பு துவங்க 2 நாட்கள் இருந்தபோது போன் செய்து நீங்கள் தான் நடிக்கிறீர்கள் என்றார்கள். வினோத் சாருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்றார் அபிராமி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X