நான் ஏன் இத்தனை ஆண்டுகளாக அமைதியாக இருந்தேன் தெரியுமா?: ஸ்ரீ ரெட்டி
Recommended Video

சென்னை: தான் இத்தனை ஆண்டுகளாக அமைதியாக இருந்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.
திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து வரும் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி சென்னை வந்ததில் இருந்து பேட்டிகள் கொடுப்பதில் படுபிசியாக உள்ளார்.
இந்நிலையில் அவர் ஒன்இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

அமைதி
இந்த விஷயங்கள் நடந்து பல ஆண்டுகள் கழித்து பேசியுள்ளேன். பொறுமையாக இருந்தது தான் நான் செய்த தவறு. எனக்கு வாய்ப்பு கிடைக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்து வருடங்கள் ஓடிவிட்டன. அதனால் தான் இத்தனை ஆண்டுகளாக அமைதியாக இருந்தேன். தற்போது என் பொறுமையை இழந்துவிட்டேன்.

ஆண்கள்
பெண்களின் கற்போடு விளையாடுபவர்களை வெளிச்சம் போட்டு காட்ட விரும்புகிறேன். நான் பொறுமையை இழந்துவிட்டால் சுனாமி போன்றவள். யாராலும் சமாளிக்க முடியாது. பின்விளைவுகள் மோசமாக இருக்கும். பொறுத்தது போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

இயக்குனர்கள்
சினிமா துறையில் பெரிய ஆளாகத் துடிக்கும் நபர்களை தேடிப் பிடித்து படுக்கத் தான் இயக்குனர்கள் விரும்புகிறார்கள். அவர்களுக்கு ஃபன் தான் முக்கியம். படுக்கைக்கு செல்பவர்கள் வெளியே சொல்ல மாட்டார்கள் என்ற தைரியத்தில் தான் இப்படி செய்து கொண்டிருக்கிறார்கள்.

திறமை
இத்தனை ஆண்டுகளாக படுக்கையில் என் திறமையை காட்டினேன். தற்போது என் திறமையை சென்னையில் காட்டுவேன். என்னிடம் பணம் இல்லை. அதனால் யாராவது இலவசமாக என் வழக்கை நடத்த தயார் என்றால் நான் ரெடி. பாலியல் தொல்லை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முதலில் விரும்புகிறேன் என்றார் ஸ்ரீ ரெட்டி.


Click it and Unblock the Notifications











