தேசிய விருதை கோட்டை விட்ட ஆடுஜீவிதம்..பின்னணியில் இருக்கும் அரசியல் காரணம்!
சென்னை: ஆகஸ்ட் 1ந் தேதி மாலை, 2023 ஆம் ஆண்டுக்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில், ப்ளஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ஆடுஜீவிதம் விருதை பெரும் என எதிர்பார்க்கப்பட்டது. நஜீப் என்பவருடைய வாழ்வை பற்றி பென்யாமீன் எழுதிய ஆடுஜீவிதம் நாவலை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. அதில் பிருத்விராஜ், அமலா பால், ஷோபா மோகன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்திற்காக பிருத்விராஜ் உடலை வருத்தி, அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்ட நிலையில், இப்படம் தேசிய விருத்திற்கு பல்வேறு பிரிவிற்கு விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், இப்படம் ஒரு விருதைக்கூட பெறவில்லை. இதனால், படத்தின் இயக்குனர் பிளெஸ்ஸி, நடுவர் குழுத் தலைவர் அஷுதோஷ் கோவாரிகர் மீது அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அதில், 'லகான்' பட இயக்குனர் கோவாரிகர், ஆடுஜீவிதம் படம் வெளியானபோது அதை பெரிதும் பாராட்டி, 1962ல் வெளியான 'லாரன்ஸ் ஆஃப் அரேபியா' படத்துடன் ஒப்பிட்டார். நான் அதை 'ஒரு விருதாகவே உணர்ந்தேன், மேலும், அடுத்த நாள் அப்படத்தைப் பற்றி விவாதிக்க என்னை மதிய உணவிற்கு அழைத்து படத்தை பற்றி வெகுவாக பாராட்டி பேசிய இருந்தார். ஆனால், தேசிய விருது அறிவிப்பிற்குப் பிறகு, பிரத்வி ராஜ் சுகுமாரன் நடித்த அந்தப் படத்தில் தொழில்நுட்பக் குறைபாடுகள் இருப்பதாக கோவாரிகர் தெரிவித்த கருத்து என்னை பெரும் ஏமாற்றமடையச் செய்தது என பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அந்த படத்தை விரிவாகப் பாராட்டிய ஒருவர், இப்போது அதை தொழில்நுட்பக் காரணங்களால் எப்படி நிராகரிக்க முடியும்? இது இரட்டை நிலைப்பாடு போல் தெரிகிறது என்றார்.

ஆடுஜீவிதம்: அதே போல, தேசிய திரைப்பட விருதுகள் நடுவர் குழு உறுப்பினர் பிரதீப் நாயர் அளித்த பேட்டியில், நடுவர் குழுத் தலைவர் அஷுதோஷ் கோவாரிகர், கோவாவில் நடந்த திரைப்பட விழாவில் 'ஆடுஜீவிதம்' படத்தை பார்த்ததாகவும், அதன் தழுவல் மற்றும் படம் உருவாக்கிய விதம் பற்றி கவலைப்பட்டு பேசியதாகவும், படத்தில் உண்மை தன்மை இல்லை, நடிப்பு நம்பத்தகுந்த வகையில் இல்லை என்றும் கோவாரிகர் மற்றவர்களிடம் கூறினார்.இதனால், தான் ஆடுஜீவிதம் படம், தேசிய விருது பட்டியலில் இடம் பெற்ற போதும், தரம் காரணமாக அந்த படம் விருதை பெறும் வாய்ப்பை இழந்தது என்றும் பிரதீப் நாயர் ஒப்புக்கொண்டார். அதே போல, சிறந்த பின்னணிப் பாடகர், சிறந்த பாடலாசிரியர் பிரிவுகளில், சரியான ஆங்கில மொழிபெயர்ப்பு இல்லாததால், படம் விருது பெறவில்லை. இதற்கு காரணம், அரசியல் பின்னணி என சொல்லப்படுகிறது.
இதுதான் காரணம்: "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்திற்கு சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவு என பிரிவுகளில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதை கேரள முதல்வர் பினராயி விஜயன் கடுமையாக கண்டித்தார். பிரித்விராஜ், லூசிபர் படத்தின் 2 ஆம் பாகமாக எம்புரான் படத்தை இயக்கினார். இதில், குஜராத் கலவரத்தை விமர்சிக்கும் விதமாக காட்சிகள் இடம்பெற்றதற்கு இந்துத்துவ அமைப்பினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். எம்புரான் படத்தை பிரித்விராஜ் இயக்கியதால் தான் ஆடுஜீவிதம் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











