கணவன் மனைவி பிரிய என்ன காரணம் ? பரத் வாணி போஜன் சொன்ன உண்மை தகவல்

சென்னை: நடிகர் பரத், நடிகை வாணிபோஜன் இருவரும் நடிக்க இருக்கும் புது படம் B50 என்று இப்போதைக்கு தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது.

Recommended Video

Bharath50 | Vani Bhojan | Bharath | வானி போஜனுக்கு கல்யாணம் எப்போ ? | Filmibeat Tamil

"B50" நடிகர் பரத்தின் ஐம்பதாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. வாணி போஜனுடன் ஏற்கனவே ஒரு படம் நடித்து இருந்தாலும் இன்னும் அந்த படம் வெளி வராத நிலையில் இந்த புது படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது .

திரைப்படத்தின் பூஜையில் பிலிம்பீட் வினோத்துக்கு நடிகர் பரத், நடிகை வாணிபோஜன் அளித்த சிறப்பு பேட்டியை இங்கு நாம் பார்க்கலாம் .

புரிந்து கொள்ளுதல்

புரிந்து கொள்ளுதல்

கேள்வி: நடிகர் பரத், நீங்கள் நடிக்கும் பி50 திரைப்படம் குறித்து...

பதில்: சந்தோஷமான தருணம். எல்லா நடிகருக்கும் ஒரே இடத்தில் பாராட்டு கிடைக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கும், அது போல இந்த பி50 படமும். எனது 50 வது படத்திற்கு இந்த கதை அமைந்தது ரொம்ப சந்தோஷம். எனது மனச்சாட்சிக்கு கதை பிடித்திருந்தால் மட்டும் தான் நடிப்பேன். எனக்கு பிடித்திருக்கும் கதை மற்றவர்களுக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் இந்த கதை ரசிகர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் பிடிக்கும் என்பது எனது நம்பிக்கை. இந்த படத்தின் கதை கணவன், மனைவியை மையப்படுத்தி உருவாகியுள்ளது. திரையில் பார்க்கும்பொழுது கணவன், மனைவி இருவரும் தங்களை புரிந்து கொள்ளும் விதமாக அமையும் என்றார்.

"க" வரிசையில் தலைப்பு

கேள்வி: உங்களது வெற்றிப்படங்கள் எல்லாம் "க" வரிசை அமைந்துள்ளது. இந்த படமும் "க" வரிசையில் அமையுமா?

பரத் பதில்: நீங்கள் கூறுவது சரி தான். காதல், கண்டேன் காதல், காளிதாஸ் போன்ற வெற்றிப்படங்கள் எல்லாம் "க" வரிசையில் அமைந்தது தான். நான் தயாரிப்பாளரிடம் இது குறித்து தெரிவித்து, கண்டிப்பாக "க" வரிசையில் படத்தின் தலைப்பு வருவதற்கு சிபாரிசு செய்கிறேன் என்றார்.

சேட்டையின் உச்சகட்டம்

சேட்டையின் உச்சகட்டம்

கேள்வி: பரத் உங்கள் வீட்டு குட்டீஸ் எப்படியிருக்காங்க?

பதில்: அவர்களுக்கு 3.5 வயது ஆகிறது. சேட்டையின் உச்ச கட்ட வயது 3.5 வயது முதல் 5 வயது வரை. வீட்டை சுற்றி சுற்றி விளையாடுகிறார்கள். அவர்கள் பள்ளிக்கு சென்றால் எனக்கு கொஞ்சம் நிம்மதி கிடைக்கும் என்றார்.

காதல் படம் பிடிக்கும்

காதல் படம் பிடிக்கும்

கேள்வி: வாணிபோஜன், பரத் பற்றி நீங்கள் கூற விரும்புவது?அவருடைய எந்த படம் ரொம்ப பிடிக்கும் ?

பதில்: நடிகர் பரத் மிகப்பெரிய டான்ஸர். அவர் நடித்த "காதல்" படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடன் எனக்கு இது இரண்டாவது படம். ஆக்சிஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் நானும், பரத்தும் நடித்த முதல் படம் ஒன்று உள்ளது. அது கணவன், மனைவி சம்பந்தப்பட்ட கதை தான். ஆனால் இப்போது நாங்கள் இருவரும் நடிக்க இருக்கும் பி50 கதை, ஏற்கனவே நடித்த படத்தின் கதையை தாண்டி வித்தியாசமாக இருக்கும். இந்த படத்தில் டான்ஸ் என்று எதுவும் கிடையாது. நான் படத்தில் அங்கும், இங்கும் நடந்து கொண்டிருப்பேன் என்றார். பரத் பி49 படம் குறித்து கூறுகையில், வாணிபோஜன் மற்றும் நான் நடித்த முந்தய படம் ஏப்ரல் மாதம் கடைசியில் ரிலீசாகும் என்றார்.

பரஸ்பர மரியாதை

பரஸ்பர மரியாதை

கேள்வி: சிறந்த கணவன் & மனைவியாக திகழ நீங்கள் கூற விரும்பும் அறிவுரை என்ன?

பதில்: திருமணம் முடிந்த முதல் 5 வருடங்களில் கணவன், மனைவி இருவரும் பரஸ்பர மரியாதையை எதிர்பார்ப்பதில்லை. அதற்கு அடுத்து வரக்கூடிய 5 வருடங்களில் தான் கணவன், மனைவி இருவரும் பரஸ்பர மரியாதையை எதிர்பார்க்கின்றனர். இது கிடைக்காதபோது தான் பிரச்னை ஆரம்பமாகிறது. இதிலிருந்து விவாகாரத்து போன்ற பல விஷயங்கள் நடைபெறுகின்றன.

முதல் 5 ஆண்டுகள்

முதல் 5 ஆண்டுகள்

ஒரு காலக்கட்டத்தில் கணவன், மனைவி இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டும். கணவன், மனைவி இருவரும் ஒரு காலக்கட்டத்தில் தேவையானதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றதை ஒரு காதில் வாங்கி மற்றொரு காதில் விட்டு விட்டால் பிரச்னையை தவிர்க்கலாம். இதை நான் கூற காரணம் என்னுடைய அனுபவம் தான் என்றார். கணவன், மனைவி இருவரம் பரஸ்பர மரியாதையை சரியாக கொடுக்காமல்,திருமணமான முதல் 5 ஆண்டுகள் புரிதல் இல்லாமல் இருப்பது தான் விவாகரத்து ஏற்பட காரணமாகிறது என்று நடிகர் பரத் தெரிவித்தார்.

சந்தோஷமாக இருக்கிறேன்

கேள்வி: வாணிபோஜன் நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள்?

பதில்: எனக்கும், அதுக்கும் சம்பந்தம் இல்லை. அது வேண்டாம். நான் சந்தோஷமாக இருக்கிறேன். இப்படியே இருந்து விட்டு போகிறேன் என்று சிரித்தபடியே பதில் கூறினார்.அது மட்டும் அல்லாமல் கணவன், மனைவி இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டும், அண்டர்ஸ்டாண்டிங் தான் மிக முக்கியம் என்று தன் கருத்தை பதிவு செய்தார் . இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/7PxPO_w_egE இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத் மற்றும் நடிகர் பரத், நடிகை வாணிபோஜன் இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X