பெரம்பூரில் களமிறங்கும் விஜய்? காரணம் என்ன? திவ்யா சத்யராஜ் போட்டியா?அந்தணன் சொல்லும் தகவல்!

சென்னை: தமிழகத்தில் சட்டப்பேரவை ஏப்ரல் 23ந் தேதி நடைபெற இருக்கும் நிலையில், தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்டன. சென்னை பெரம்பூர் தொகுதியில், விஜய் போட்டியிடப்போவதாக தகவல் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கும் நிலையில், இதுகுறித்து வலைப்பேச்சு அந்தணன் பேசி உள்ளார்.

அதில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் ஸ்டார் தொகுதிகளில் யார் யார் நிற்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்து இருக்கிறது. சென்னையில் இருக்கும் பெரம்பூர் தொகுதி இப்போது நட்சத்திர தொகுதியாக மாறி இருக்கிறது. அதற்கு காரணம் இந்த தொகுதியில் விஜய் நிற்கப்போவதாக வெளியான தகவல் தான்.

தவெக தலைவர் விஜய்: விஜய் வளசரவாக்கத்தில் நிற்க போகிறார், திருச்சியில் நிற்கப் போகிறார் என பலவிதமான தகவல்கள் பரவி வந்த நேரத்தில் திடீரென பெரம்பூர் தொகுதி முக்கியத்துவம் பெற்றதற்கு காரணம் என்னவென்றால், அங்குதான் ஏசி தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டு இருப்பதால், அந்த தொகுதியில் விஜய் நிற்கப் போகிறார் என்கிற தகவல் பரவி வருகிறது.

Vijay Perambur Divya Sathyaraj
Photo Credit:

காரணம் என்ன?: அதையும் தாண்டி விஜய் அந்த தொகுதிகள் நிற்பதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், அந்த தொகுதியில் தான் அதிகப்படியான விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள். அது எப்படி அவ்வளவு உறுதியாக சொல்ல முடியும் என்று கேட்டால், விஜய் தவெக கட்சியை ஆரம்பித்த பிறகு, உறுப்பினர் சேர்க்கைக்கான பணி ஆன்லைனில் தொடங்கப்பட்டது. அதில் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 45 ஆயிரம் பேர் இணைந்தது பெரம்பூர் தொகுதியில் தான். இதனால்தான் அந்த தொகுதியில் விஜய் ரசிகக்ரள் அதிகம் என்பதால், அந்த தொகுதியை விஜய் தேர்வு செய்து இருப்பதாக உறுதியான தகவல் பரவி வருகிறது.

திவ்யா சத்யாராஜ்: இப்படி நட்சத்திர தொகுதியாக மாறி இருக்கும் அந்த தொகுதியில் எதிர் கட்சிகள் எந்த பலமான போட்டியாளரை களமிறங்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கும் நிலையில், பிரதான எதிர்கட்சியான திமுக அந்த தொகுதியில் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜை களமிறங்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. விஜய்க்கு எதிராக வெற்றி பெறும் வேட்பாளராக திவ்யா சத்யராஜ் திமுக நிறுத்தலாமா? அவருக்கு எதிரான போட்டியிட தகுதியானவரா திவ்யா சத்யராஜ் என்கிற பலவிதமான கேள்விகள் எழுந்துள்ளன. எது எப்படியோ, நட்சத்திர தொகுதி என்பதால் அந்த தொகுதியில் திவ்யா சத்யராஜிக்கு ஆதரவாக சத்யராஜ் பிரச்சாரம் செய்வார், விஜய், முதல்வர் ஸ்டாலின், உதயநிதி என அனைவரும் அந்த தொகுதியில் பிரச்சாரம் செய்வார்கள் என அந்தணன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X