சஞ்சய் தத்துக்கு சலுகை காட்டக் கூடாது.. இனி அவருடன் நடிக்கவும் மாட்டேன்!- நானா படேகர் அதிரடி

By Shankar

Why should Sanjay Dutt be spared, asks Nana Patekar
மும்பை: 1993- மும்பை வெடிகுண்டு வழக்கில் சந்தேகத்துக்கிடமின்றி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, 5 ஆண்டு தண்டனையும் பெற்றுள்ள சஞ்சய் தத்துக்கு ஆதரவாக பாலிவுட்டே குரல் கொடுத்துள்ள நிலையில், இதோ துணிச்சலான ஒரு எதிர்ப்புக் குரல்!

அவர் இயல்பான நடிப்புக்குச் சொந்தக்காரரும் பத்ம விருது பெற்றவருமான நானா படேகர்.

ஆரம்பத்தில் தீர்ப்பை ஏற்று சிறைக்குச் செல்வதாகக் கூறிய சஞ்சய் தத், பின்னர் அவகாசம் கேட்டுப் பெற்றதும், இப்போது தண்டனையையே ரத்து செய்யக் கோருவதும் நானா படேகர் போன்றவர்களை கொதிப்படைய வைத்துள்ளது.

இதுகுறித்து நானா படேகர் கூறுகையில், "சஞ்சய் தத் செய்தது மிகப் பெரிய குற்றம். அது நீதிமன்றத்தில் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பிறகு ஏன் அவருக்கு கருணை காட்ட வேண்டும்? அவருக்கு மட்டும் என்ன சிறப்புச் சலுகை வேண்டியிருக்கிறது? கண்டிப்பாக ஜெயில் தண்டனையை சஞ்சய் தத் அனுபவித்தே தீர வேண்டும்.

சஞ்சய் தத்துடன் இனி எக்காலத்திலும் இணைந்து பணியாற்றவே மாட்டேன். அவர் படங்களை இனி பார்க்கக் கூட மாட்டேன். ஒரு இந்தியப் பிரஜையாக சஞ்சய் தத்துக்கு நான் தரும் தண்டனை இது. இதனால் அவர் திருந்துவாரா மாட்டாரா என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை," என்று கூறியுள்ளார்.

பாலிவுட்டையே அதிர வைத்துள்ளது நானாவின் இந்த அதிரடி பேட்டி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X