twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காடன் இரண்டாம் பாகம் எடுக்க வாய்ப்புள்ளதா!? பிரபு சாலமன் சிறப்பு பேட்டி

    |

    சென்னை: இயக்குநர் பிரபு சாலமன்.. தொடரி படத்துக்குப் பிறகு.. 5 வருடம் கழித்து காடன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

    காடன் திரைப்படத்தின் போது கிடைத்த பல அனுபவங்களை இந்த க்ளோஸ் கால் நிகழ்ச்சி பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

    இயக்க வாய்ப்புள்ளது

    இயக்க வாய்ப்புள்ளது

    காடன் படத்தின் 2ம் பாகம் எடுக்கும் வகையில் தான் படத்தை முடித்துள்ளதாகவும், யானைகளுக்கு கால்ஷீட் வாங்கி, அதற்காக 3 மணி நேரம் மேக்கப் செய்வது உட்பட நிறைய பணிகள் இருப்பதால் தற்போதைக்கு காடன் 2ம் பாகம் எடுக்கப்போவதில்லை. ஆனால் பின்னால் எடுக்க வாய்ப்புள்ளதாக பேட்டியளித்துள்ளார் பிரபு சாலமன்.

    கும்கி மற்றும் காடன்

    கும்கி மற்றும் காடன்

    மைனா திரைப்படத்திற்கு பிறகு கதைகள் சார்ந்த சில பரிந்துரைகள் வந்தாலும் குழந்தைகளை கவரும் வகையில் படம் எடுக்க வேண்டும் என்பதே தனது விருப்பமாக இருந்ததாகவும், அதனால் தான் கும்கி படம் எடுத்தேன் அதனுடைய பரிச்சயம் காரணமாகவே மேலும் சில விஷயங்களுடன் காடன் படத்தை இயக்கியதாகவும் பேட்டியளித்துள்ளார் பிரபு சாலமன்.

    ஊக்கம் அளிக்கிறது

    ஊக்கம் அளிக்கிறது

    படத்தின் விமர்சனங்கள் குறித்து பேசிய பிரபு சாலமன், படத்தின் ட்ரைலர் வெளியான போதிலிருந்து ரசிகர்கள் நல்ல ஆதரவையே கொடுத்து வருகின்றனர் எனவும், உண்மையை உரக்க சொன்னதால் ரசிகர்களிடம் ஒரு மரியாதை கிடைக்கிறது, அது தன்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது எனவும் பேட்டியளித்துள்ளார் பிரபு சாலமன்.

    இறைவனின் படைப்பு

    இறைவனின் படைப்பு

    யானைகள் துன்புறுத்தப்படுவது குறித்து பேசிய பிரபு சாலமன், மக்கள் இதனை வெறும் செய்தியாக பார்த்துவிட்டு கடந்து விடுவதாக சுட்டிக்காட்டியுள்ளார். யானை இறைவனின் படைப்பு எனவும், யானைகளின்றி காடுகள் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும் யானைகளின் வாழ்வாதாரம் குறித்தும் இந்த பேட்டியில் பேசியுள்ளார் பிரபு சாலமன்.

    English summary
    Director Prabhu Solomon has given a re entry with Kaadan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X