twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினிகாந்த் பாராட்டிய "ரைட்டர்" படத்தின் இயக்குனர்... பிராங்கிளின் ஜேக்கப் பிரத்தியேக பேட்டி

    |

    சென்னை: பா ரஞ்சித் தயாரிப்பில், சமுத்திரக்கனி நடிப்பில், பிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்த ரைட்டர் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.ரஜினிகாந்த் இந்த படத்தை பார்த்து விட்டு ஒட்டு மொத்த குழுவையும் மிகவும் பாராட்டினார் என்பது அனைவரும் அறிந்ததே .

    காவல்துறையை அதன் அதிகாரத்தை அதிகாரத்திற்குள் இருக்கும் பல பிரச்சனைகளையும் மிக அழகாக கண்முன்னே கொண்டு வந்து கொடுத்துள்ளார் இயக்குனர் பிராங்களின்

    பா ரஞ்சித்திடம் உதவியாளராக இருந்த பிராங்க்ளின், தான் பெற்ற அனுவங்களை ரைட்டர் படத்தின் மூலமாகவும், ரைட்டர் பட அனுபவங்களை நம்மிடமும் பகிர்கிறார்

    பிக் பாஸ் சீசன் 5 : சூட்கேஸ் பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேறும் போட்டியாளர் யார் ?பிக் பாஸ் சீசன் 5 : சூட்கேஸ் பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேறும் போட்டியாளர் யார் ?

    ரைட்டரின் ரைட்டர்

    ரைட்டரின் ரைட்டர்

    கேள்வி : இன்னொரு ரைட்டரும் ரைட்டரில் இருக்காராமே

    பதில் : இந்த படத்தோட மேஜர் கதைய முடிச்சிட்டு, சில குறிப்பிட்ட போர்ஷன் ஒர்க் பண்றதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டேன். திரும்ப திரும்ப அத ரீ ஒர்க் பண்ணிட்டு இருந்தேன். எனக்கு அது நிறைவாவே இல்ல. ஒரு கட்டத்துல நிப்பாட்டிட்டு எங்க சார் கிட்ட ஐடியா கேட்டப்பதான் சொன்னாரு, சந்தோஷ் கூட ஒர்க் குடுத்து பாரு. புடிச்சிருந்தா சேர்ந்து பண்ணுங்கன்னாரு. நானும் ரைட்டர் கிட்ட குடுத்தேன். நல்லாருக்கே.. இதுக்குமேல என்ன வேணும்ன்னு கேட்டார். எனக்கு எந்த இடத்துல நிறைவு இல்லயோ அத சொன்னேன். அதுலயே 12 வர்ஷன் ரீரைட் பண்ணி, ஒரு ஃபைனல் எடுத்தோம். இன்னைக்கு மட்டும் என்னைக்குமே எனக்கு மாரல் சப்போர்ட்டா ரஞ்சித் சார் இருந்தார்..என்னோட சரியான ஒரு வேலை செஞ்சா மக்கள் அங்கீரிப்பாங்கன்னு நம்பிக்கை இருக்கு,. சரியான நேர்த்தியோட பண்ணிருக்கோம்.

    நிறைய வெரைட்டி உண்டு

    நிறைய வெரைட்டி உண்டு

    கேள்வி : படத்துல பேசப்படற வழக்குத்தமிழ் ரொம்ப வித்யாசமா அழகா இருக்கே?

    பதில் : தஞ்சாவூர் வட்டார மொழிகளுக்கே ரொம்ப வித்யாசம் இருக்கும். சிவகங்கைல இருந்து பட்டுக்கோட்டை, மன்னார் குடி பக்கத்துல இருக்க தஞ்சாவூர் மொழிக்கும், காவிரி பாயும் நிலப்பரப்பரப்பான, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மாயவரம் பகுதி மொழிக்கும் வித்யாசமா இருக்கும். நானும் தஞ்சாவூர்காரன், அப்பாவும் தஞ்சாவூர்தான் பூர்வீகம்ங்கிறப்ப அது ஊறிப்போச்சு. அப்பா 1943 ல பிறந்தவர். அவர் பேசக்கூடிய மொழி சில பல ஜெனரேஷனுக்கு முன்னடி உள்ள வட்டார வழக்கு. அத யூஸ் பண்ணிருந்தேன். அது நல்லாருக்குன்னு எல்லாருமே சொல்றாங்க. ரொம்ப சந்தோஷம்,

    இந்த தலைப்புதான் வேணும்

    இந்த தலைப்புதான் வேணும்

    கேள்வி : ரைட்டர்ன்னு தான் பேர் வைக்கனும்ன்னு எப்ப தோனுச்சு?

    பதில் : கால்சட்டை போட்ட போலீஸ்ல இருந்து குல்லா போட்டு இருக்க போலீஸ் வரைக்கும், இப்ப உள்ள விதவிதமான போலீஸ் வரைக்கும், தமிழ் சினிமாவுல வித்யாசமா காட்டிருக்காங்க. கொஞ்சம் மிகைப்படுத்தியும் காட்டிருக்காங்க. ஆனா நான் இருக்கறத இருக்கறபடி இயல்பா காட்டனும்ன்னு நெனச்சேன். அதனால இந்த படத்தோட கதை, திரைக்கதை எழுதும்போதே எதை நோக்கி போகும்ன்னு தெளிவா இருந்தேன். அதனால ஆரம்பத்துல இருந்தே ரைட்டர்-ன்னு தான் பேரு வைக்கனும்ன்னு உறுதியா இருந்தேன். அதுவே செயல்படுத்தியாச்சு.

    உண்மைய மக்களிடத்துல குடுக்க...

    உண்மைய மக்களிடத்துல குடுக்க...

    கேள்வி : இதுக்கு முன்னாடி பட ரிசர்ச்காக ( ஆய்வு ) போலீஸ் ஸ்டேஷன் ல்லாம் போயிருக்கீங்களா?

    பதில் : எங்க தெருவுலயே ஒரு காவலர் இருக்காரு. சராசரி ஆளா இருப்பாரு. அவர் வீட்டுக்கு ஒரு குழம்பு குடுக்கனும்ன்னா நான் போயி குடுத்துட்டு வந்துருக்கேன். அவர் யூனிபார்ம் போடும் போதுதான் நான் அவர காவலரா பாக்குறேன். குழந்தைல இருந்தே நான் அவர பாத்துகிட்டு வரேன். இது ஒரு எதார்த்தமான வாழ்வியல். வேலைல இப்படி இருப்பாங்க.. சாதாரண நேரத்துல எப்படி இருப்பாங்கன்ற ஒரு எதார்த்தமான உண்மைய மக்களிடத்துல குடுக்கனும்ன்னு நெனச்சேன். அதான் குடுத்துருக்கேன்.

    என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். இன்னமும் பல சுவாரஸ்யமான கேள்விகள் மற்றும் பதில்கள் இந்த விடீயோ பேட்டியில் முழுமையாக காணலாம் . முழு விடியோவை காண பில்மி பீட் தமிழ் யூட்யூப் சேனல் சென்று பார்க்கலாம். .

    English summary
    Writer Movie Director Franklin Jacob Exclusive Interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X