விஜய் மார்க்கெட்டை இழந்து அரசியலுக்கு வரல..பணம் சம்பாதிப்பது நோக்கம் இல்ல..ஒய்.ஜி.மகேந்திரன் பேட்டி!
சென்னை: நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஒய் ஜி மகேந்திரன், இந்தியா ஒரு ஜனநாயக நாடு. மக்களுக்கு உண்மையான சேவை செய்யும் நோக்கத்தோடு இருக்கும் யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். விஜய் சினிமாவுல மார்க்கெட் போனபிறகு, அரசியலுக்கு வரல. நல்லா சம்பாதிச்சிட்டிருக்கும்போதே, வந்திருக்காருன்னா அவருக்கு அரசியல்ல பணம் சம்பாதிக்கணும்ங்கிற நோக்கம் இல்லன்னு தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி இருக்கிறார். அந்தக் கட்சி 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுமென்றும் அறிவித்திருக்கும் நடிகர் விஜய், அரசியல் என்பது எனக்கு இன்னொரு தொழில் அல்ல. அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. எனவே ஏற்கனவே நான் ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன் என்று கூறியிருக்கிறார்.

நடிகர் அரசியல் வருகை: இந்நிலையில் இதுகுறித்து தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ஒய் ஜி மகேந்திரன், இன்னைக்கு தமிழ்நாட்டில், மிகப்பெரிய பேசு பொருளாக இருப்பது தம்பி விஜய் அரசியலுக்கு வரலாமா, கூடாதா என்பது தான். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. மக்களுக்கு உண்மையான சேவை செய்யும் நோக்கத்தோடு இருக்கும் யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து சாதித்தவர்களில் தமிழ்நாடு இந்தியாவுக்கு முன்மாதிரி, நிறைய பேர் அரசியலுக்கு வந்து ஜெயிச்சும் காட்டியிருக்காங்க. அறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என அனைவரும் சினிமாவில் இருந்து வந்தவர்கள் தான்.
பணம் சம்பாதிப்பது நோக்கம் இல்ல: இந்தத் தலைவர்கள் போலவே, சேவை செய்யும் நோக்கத்தோடதான் நடிகர் விஜய் இப்போ அரசியலுக்கு வந்திருக்கிறார். அவரோட அறிக்கையில் அதை தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார். அதனால, விஜய் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்று வாழ்த்துகிறேன். ஏன் என்றால், விஜய் தமிழ் சினிமாவுல உச்ச நடிகராக இருக்கிறார், அதுவும், அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கிறார். அவர் ஒன்றும், சினிமாவுல மார்க்கெட் இழந்த பிறகு அரசியலுக்கு வரல. நல்லா சம்பாதிச்சிட்டிருக்கும்போதே கட்சியை தொடங்கி இருக்கிறார். அவருக்கு அரசியல்ல பணம் சம்பாதிக்கணும் என்கிற எண்ணம் இல்லன்னு என்பது இதன்மூலமே நன்றகா தெரியுது. இதை நான் பெரிய விஷயமா பார்க்குறேன்.
ரொம் நல்ல விஷயம்: அதுமட்டுமில்லாம, அரசியல் வந்ததும் சினிமாவை முழுமையா விட்டுடுவேன் என்று சொல்லிருக்கார். இது ரொம்ப நல்ல விஷயம். சினிமாவுல இருந்து அரசியலுக்கு வர்றவங்க எம்.ஜி.ஆரை ஃபாலோ பண்ணணும். அரசியலுக்கு வந்ததும் எம்.ஜி.ஆர் சினிமாவை விட்டுட்டார். ஜெயலலிதா மேடமும் விட்டுட்டாங்க. விஜய்யும் இவங்க பாணியில முழுமையா அரசியல்ல ஈடுபடுவேன்னு சொல்லியிருக்கிறது நல்ல அறிகுறி உயர்ந்த குறிக்கோள் என்று நடிகர் ஒய் ஜி மகேந்திரன் விஜய் அரசியல் வருகை குறித்து பேசி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











