கட்டிலுக்கு கீழ சத்தம் கேட்கும்.. பேய் கூட கான்வர்சேஷன்.. 'யாரடி நீ மோகினி' யமுனாவின் கோஸ்ட் டாக்!
சென்னை: செந்தூரப்பூவே, யாரடி நீ மோகினி, அபியும் நானும் உள்ளிட்ட சூப்பரான சீரியல்களில் நடித்து வரும் சின்னத்திரை நடிகை யமுனாவின் கோஸ்ட் டாக் பேட்டி வைரலாகி வருகிறது.
யாரடி நீ மோகினி சீரியலில் பேயாக நடித்து மிரட்டிய யமுனா, போதும் டா சாமி இனிமே பேய் வேஷமே வேண்டாம் என தனக்கு வரும் ஏகப்பட்ட பட வாய்ப்புகளையும் மறுத்து வருவதாக கலகலப்பாக பேசி உள்ளார்.

ரிஸ்க் எடுக்கிறது எல்லாம் தனக்கு ரஸ்க் சாப்பிடுவது போல என்கிற ரேஞ்சில், யாரடி நீ மோகினி சீரியலில் பேயாக நடித்த போது, அந்தரத்தில் எல்லாம் ரோப் கட்டித் தொங்கவிட்டு பயம்ன்னா என்னன்னே தெரியாம ஆகிடுச்சு என சர்வ சாதரணமாக பேசுகிறார்.
உங்களுக்கு பேய் மேல நம்பிக்கை இருக்கா? பேயின்னு ஒண்ணு இருக்கா? இல்லையா? என சந்திரமுகி பட வடிவேலு பாணியில் கேட்ட கேள்விக்கு, அவர் உடனே சூப்பர் ஸ்டார் சரவணனை போல, பேய் கூட கான்வர்சேஷன் எல்லாம் பண்ண கதையை சொல்லி பீதியை கிளப்புகிறார்.
நல்லா தூங்கிட்டு இருக்கும் போது, தனது கட்டிலுக்கு அடியில் தட்டும் சத்தம் கேட்கும், யாருமே இருக்க மாட்டாங்க, யாராச்சும் இருக்கீங்களா? யாராவது என்னை பேயின்னு நினைச்சிட்டு என் கூட பேச வந்தீங்கன்னா கனவுல வாங்க எனவும் இன்விடேஷன் கொடுத்து, சில உறவுக்கார பேய்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அனுபவங்களையும் அசால்ட்டாக பகிர்ந்து கொண்ட கோஸ்ட் டாக் பேட்டியை மிஸ் பண்ணாம பாருங்க!


Click it and Unblock the Notifications











