த்ரிஷாவிற்கு பாடும் போது அசிங்கமா இல்லையா? திரௌபதி 2 பாடல் சர்ச்சை.. சின்மயியை விளாசிய மதுவந்தி!

சென்னை: 'திரௌபதி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து திரௌபதி படத்தின் 2வது பாகத்தை மோகன் ஜி இயக்கி உள்ளார். இந்த படத்தில் "எம்கோனே" என்ற பாடலை பாடிய சின்மயி, இது மோகன் ஜியின் படம் என தெரிந்து இருந்தால், நான் பாடலை பாடி இருக்கவே மாட்டேன் என்று கூறியிருந்தார். இது பேசுபொருளாள நிலையில், இதுகுறித்து ஓய்ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி அடுத்தடுத்த கேள்வியால் சின்மயியை விளாசி உள்ளார்.

பெரும் சர்ச்சையை கிளப்பிய திரௌபதி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது, மோகன் ஜி, திரௌபதி 2 படத்தை எடுத்துள்ளார். இப்படம்,14 ஆம் நூற்றாண்டு பின்னணியில் உருவாகும்,ஹொய்சால அரசர்களின் இரத்தக்கறை படிந்த ஆட்சி, தமிழ்நாட்டின் முகலாய படையெடுப்பால் உண்டான கொந்தளிப்பு ஆகிய கதைகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தை, ரக்ஷனா இந்து, ரிச்சர்ட் ரிஷி, நட்டி நட்ராஜ், ஒய்.ஜி.மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராஜ் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கௌரங், திவி, தேவயானி ஷர்மா மற்றும் அருணோதயன் ஆகியோரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

draupathi 2 Mohan G Singer Chinmayi 2
Photo Credit:

திரௌபதி 2: ஜிப்ரான் இசையில்,"எம்கோனே" என்ற இப்பாடல் பாடிய சின்மயி, எம்கோனே பாடலுக்காக எனது மனமார்ந்த மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். இது மோகன் ஜியின் படம் என்று தெரிந்திருந்தால் நான் ஒருபோதும் இந்த பாடலை பாடி இருக்க மாட்டேன், ஏனென்றால். சித்தாந்தங்கள் என்னுடையவற்றுக்கு முற்றிலும் முரணாக உள்ளது என பதிவிட்டு இருந்தார். இதுகுறித்து கேள்வி எழுப்பிய மோகன் ஜி, இந்த சித்தாந்தத்தில் இருப்பவரின் படத்துக்கு பாடமாட்டேன் என்று சின்மயி எங்கேயாவது கூறியிருந்தால் கண்டிப்பாக, நான் இந்த படத்தில் அவரை பட அழைத்து இருக்க மாட்டேன். இந்த விஷயத்தில் எனக்கு ஒரு தெளிவு வேண்டும்,எதற்காக வருத்தம் தெரிவித்தீர்கள். உங்களுக்கு இப்படியொரு அழுத்தம் கொடுத்தவர்கள் ஏன் கொடுத்தார்கள் என்பதை விளக்கி ஓர் அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டு இருந்தார்.

மதுவந்தி: இப்படி திரௌபதி பாடல் விவகாரம் சர்ச்சையை கிளப்பி இருக்கும் நிலையில், ஒய்ஜி மகேந்திரனின் மகளும் நடிகையுமான மதுவந்தி தனது யூடியூப் சேனலில் இந்த விவாகரம் குறித்து பேசி உள்ளார். அதில், நம் தொழில் என்பது வேறு, நம்முடைய சித்தாந்தம் என்பது வேறு, நடிப்பதற்கு விட்டால் தொழிலையும் சித்தாந்தத்தையும் ஒன்றாக பார்க்கக்கூடாது. அதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக இருந்தவர் கலைஞர் கருணாநிதி, கலைஞர் தொலைக்காட்சியில் அவர் ராமானுஜர் என்ற ஒரு தொடரை எழுதியிருந்தார். அவருக்கும், அவருடைய கொள்கைக்கும் சித்தாந்தத்திற்கும் ராமானுஜத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருந்ததா? ஆனால், அவர் எழுத்தாளர் என்கிற முறையில் கதையை எழுதினார்.

உங்க சிந்தாந்தம் என்ன?: ஆனால், அண்மையில் பாடகி சின்மயி அவர்கள் திரௌபதி 2 படத்தில், தான் பாடிய பாடலுக்கு மன்னிப்பு கேட்டு ட்வீட் போட்டு இருந்தார். உண்மையில் சின்மயின் ஐடியாலஜி என்ன என்பதை சின்மயி தெளிவுபடுத்த வேண்டும். எப்பொழுதுமே கொள்கைகளுடன் தான் பாடல்களை நீங்கள் பாடி இருக்கிறீர்களா? அப்படி என்றால், அண்மையில் நீங்கள் முத்தமழை என்ற பாடலை பாடி இருக்கிறீர்கள். முத்தமழை என்ற பாடலை படத்தில் எந்த கதாபாத்திரம் பாடியது என்றால், ஹீரோவின் வப்பாட்டி பாடுவது போல படத்தில் காட்சி இடம் பெற்று இருக்கும்.

பெண்களை பாதுகாக்க வேண்டும், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தட்டி கேட்கும் ஐடியாலஜியை கொண்ட நீங்கள், இந்த திரைப்படத்தில் ஏன் முழுக்க முழுக்க ஆண்களால் வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்காக பாடினீங்க, அப்படி என்றால், நீங்கள் அந்த ஐடியாலஜியை ஆதரித்தீர்களா? என்பதை சின்மயி தெளிவுப்படுத்த வேண்டும். நம் கொள்கை என்பது வேறு, சினிமா என்பது வேறு என மதுவந்தி அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X