Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
40 வயசுக்கு அப்புறமா அரசியலுக்கு வருவேன்... சோனா 'பரபரப்பு'த் தகவல்!
சென்னை: பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும். எனக்கும் அரசியல் ஆர்வம் இருக்கிறது. நாற்பது வயதுக்கு மேல் அரசியலுக்கு வருவேன் என்று நடிகை சோனா கூறியுள்ளார்.
தன்னுடைய அரசியல் ஆர்வம் பற்றி அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
லோக்சபா தேர்தல் பரபரப்பு இப்போதே ஆரம்பமாகி விட்டது. பெண்களை பொருத்தவரை இந்த தேர்தல் முக்கியமான நேரத்தில் வருகிறது.
இந்தியா, ஆணாதிக்கம் மிகுந்த நாடு. இங்கே பெண்கள் இன்னும் பின்தங்கியே இருக்கிறார்கள். அதனால் தான் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நிறைய நடைபெறுகின்றன.
டெல்லி மாணவி பலாத்கார சம்பவம், சென்னை பெண் என்ஜினியர் பலாத்காரம் செய்து கொலை போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
60 பலாத்காரங்கள்
கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 60-க்கும் மேற்பட்ட பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன. அரசியல்வாதிகள் இதுபற்றி பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஒரு முடிவு எடுக்கவில்லை.
அரபு நாடு போல தண்டனை
அரபு நாடுகளை போன்ற கடுமையான தண்டனைகள் நிறைவேற்றப்பட்டால், இதுபோன்ற வன்கொடுமைகள் இங்கேயும் நடைபெறாது.
அரசியலில் பெண்கள்
அதற்கு ஆண்களுக்கு இணையாக, பெண்கள் அதிக அளவில் அரசியலுக்கு வரவேண்டும். பெண்களின் முன்னேற்றத்துக்கு எந்த கட்சி முக்கியத்துவம் கொடுக்கிறதோ, அந்த கட்சிக்கு பெண்கள் வாக்களிக்க வேண்டும்.
நானும் வருவேன்
எனக்கு அரசியலில் ஆர்வம் இருக்கிறது. நிச்சயமாக அரசியலுக்கு வந்து பெண்களுக்கு சேவை செய்வேன். ஆனால் அதற்கு இன்னும் சில வருடங்கள் போக வேண்டும். 40 வயதுக்கு மேல் நான் அரசியலுக்கு வருவேன். பெண்கள் முன்னேற்றத்துக்கு பாடுபடுவேன் என்று சோனா கூறினார்.
அதிமுகவில் சோனா?
கடந்த சில தினங்களுக்கு அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவின் பிறந்தநாளை வெகு விமரிசையாக கேக் வெட்டி கொண்டாடினார் சோனா. அப்போதே அவர் அதிமுகவில் இணையலாம் என்று கூறப்பட்டது. இப்போது அரசியலில் ஈடுபடப்போவதாக கூறியுள்ளார் சோனா.