SK சார் ஆபிசில் நான் ஆபிஸ் பாய்.. நடிக்க வாய்ப்பு கொடுத்ததே அவர் தான்.. நெகிழ்ந்த யூத் பட நடிகர்!

சென்னை: நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் இயக்கி, நடித்துள்ள திரைப்படம் யூத். அந்த படம் மார்ச் 19ந் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வசூலை அள்ள வருகிறது. இந்த படத்தை தனுஷ், சூர்யா, சிம்பு உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். கென் கருணாஸ், அனிஷ்மா அனில்குமார், தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலர் நடித்துள்ள யூத் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

நடிகர் சரத்: இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சரத் அளித்திருக்கும் பேட்டியில், இந்த கதாபாத்திரம் எனக்கு இவ்வளவு பெயரை பெற்றத்தரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. பல படத்தில் நான் மேடையில் பேச வரும் போதே அனைவரும் கைதட்டி , விசில் அடித்து வரவேற்கின்றனர். அதைப் பார்ப்பதற்கே எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. நான்,சிவகார்த்திகேயன் சார் மூலமாகத்தான் சினிமாவுக்கு வந்தேன். அவர் தான் என்னை முதல் முதலில் 'டான்' படத்துல நடிக்க வச்சாரு. நான் முதல்ல எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் ஆபீஸ்ல ஆபீஸ் பாயாகத்தான் வேலை பார்த்துட்டு இருந்தேன்.

Sivakarthikeyan Youth

நான் ஆபீஸ் பாய்: என்னைப் பத்தி அங்க இருக்கிறவங்க எஸ்.கே. சார்கிட்டச் சொல்லியிருக்காங்க. அப்படி ஒரு நாள் ஆபீஸ்ல சுத்திட்டு இருக்கும்போது, எஸ்.கே. சார் சிபி சக்ரவர்த்தி சார்கிட்ட என்னை அறிமுகப்படுத்தினாரு. நான் ஒரு கேரக்டருக்குச் சரியாக இருப்பேன்னு சொல்லி என்னை நடிக்க வச்சாங்க. 'கனா' படத்துல தமிழரசன் பச்சமுத்து அண்ணா உதவி இயக்குநராக வேலை பார்த்திருந்தார். பிறகு அவர் என்னைப் பத்திக் கேள்விப்பட்டு 'லப்பர் பந்து' படத்துல என்னை நடிக்க வச்சாரு.

அவர் தான் காரணம்: நடிப்புன்னு ஆசையோட சினிமாவுக்கு வரல. ஆனா, 'டான்'ல நடிச்சதுக்குப் பிறகு எனக்கு நடிப்பு மீது ஆர்வம் வந்துடுச்சு. 'டான்' படம் முடிச்சப் பிறகே வாய்ப்புகள் தேட ஆரம்பிச்சுட்டேன். எஸ்.கே. புரொடக்ஷன்ல இப்போ நான் வேலைல இல்லைன்னாலும், நான் அந்த ஆபீஸ்லதான் தங்கியிருக்கேன். சாப்பாடு, வீடுன்னு வெளியே போனா நிறைய செலவாகும்னு என்னை அங்கேயே தங்கச் சொல்லிட்டாங்க. இப்போவும் அங்கதான் தங்கியிருக்கேன். அங்கு இருந்து தான் போட்டிக்கு வந்திருக்கேன். வரும்போதுகூட, எஸ்.கே. சார் 'யூத்' படத்துக்கு வாழ்த்துச் சொல்லி, 'இனிமேல் உனக்கு நல்ல கேரக்டர்ஸ் வரும்'னு சொன்னாறு என்றார்.

தங்கமான மனசு: சரத்தின் இந்த பேட்டியை ப்ளூ சட்டைமாறன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, தயாரிப்பு மட்டுமல்ல தன்னால் முடிஞ்சதை திறமையானவர்களுக்கு தொடர்ந்து சப்போர்ட்டா குடுத்துட்டு வர்றார் சிவகார்த்திகேயன். அந்த மனசு தான் சார் அவரோட உயரத்துக்கு காரணம் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X