3 வெள்ளை ஹீரோயின்கள் எதுக்கு?.. ’யூத்’ ஹீரோ கென் கருணாஸ் பண்ணது சரியா?.. இப்படி சமாளிக்கிறாரே!
சென்னை: பிப்ரவரி மாதம் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடித்த வித் லவ் திரைப்படம் வெளியாகி சுமார் 35 கோடி ரூபாய் வரை வசூல் செய்து அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. விஜய் ஆண்டனியின் மருமகன் அஜய் தீஷன் ஹீரோவாக நடித்த பூக்கி திரைப்படம் பெரிதாக ஓடவில்லை.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடித்த தாய் கிழவி திரைப்படம் 50 கோடி வசூலை ஈட்டி தியேட்டர்களை இன்னமும் உயிர்ப்புடன் வைத்துள்ளது. இந்நிலையில், இந்த மாதம் தமிழில் கொஞ்சம் ரசிகர்களுக்கு பரிட்சையமான முகங்கள் நடித்துள்ள படமாக கென் கருணாஸின் யூத் படம் தான் வெளியாக காத்திருக்கிறது.

நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் தனது தந்தையின் பெயரையும் தவிர்த்துவிட்டு வெறும் கென் என்கிற பெயருடன் இயக்கி நடித்துள்ள 'யூத்' படத்தில் ஏன் 3 வெள்ளை நடிகைகள் என்கிற கேள்வியை விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் எழுப்ப அதற்கு பதிலளித்த வீடியோ வைரலாகி வருகிறது.
மலையாள நடிகைகள் சர்ச்சை: கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள யூத் திரைப்படத்தில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமுடு அப்பாவாக நடித்துள்ளார். மேலும், சிறை படத்தில் ஹீரோயினாக அறிமுகமான மலையாள நடிகை அனிஷ்மா அனில்குமார் லீடு ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், இரட்ட படத்தின் மூலம் பிரபலமான மீனாட்சி தினேஷ் மற்றும் பிரியன்ஷி யாதவ் என 3 நடிகைகள் நடித்துள்ளனர். தமிழ்நாட்டு நடிகைகள் தன்னுடன் நடிக்க மறுத்த நிலையில், மலையாள நடிகைகளை நடிக்க வைத்தேன் என கென் கருணாஸ் முன்னதாக அளித்த பேட்டியில் பேசி சமாளித்தார்.
3 வெள்ளை நடிகைகள் ஏன்?: மாநிறமான பெண்கள், டஸ்க்கி ஸ்கின் டோன் கொண்ட பெண்களை எல்லாம் நடிக்க வைக்காமல் 3 வெள்ளை நடிகைகளை ஹீரோயின்களாக நடிக்க வைத்தது ஏன்? என்கிற கேள்வியை பரத்வாஜ் ரங்கன் எழுப்ப, அப்படியெல்லாம் நான் பார்க்கவே இல்லை. பாலுமகேந்திரா படங்களில் வரும் அனைத்து டஸ்க்கி டோன் ஹீரோயின்களும் எனக்குப் பிடிக்கும். டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்த யோக லட்சுமியும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஆனால், என் படத்துக்கு செட்டானவர்கள், எனக்கு கிடைத்த நடிகைகள் இவங்க தான். பெண்கள் கருப்போ, கலரோ அவங்க சிரிச்சாலே அழகுதான் சார். நான் நிற வேறுபாடு பார்ப்பவன் கிடையாது. பார்க்கவும் மாட்டேன் என சமாளித்து விட்டார். வரும் மார்ச் 19ம் தேதி துரந்தர் 2 படத்துடன் யூத் படமும் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











