For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எல்டர் கேர்ள்-க்கு கல்யாணம் வேண்டாமா? என்ன சொல்றாங்க ஜனனி?

  |

  சென்னை : பல லட்சம் வச்சிருக்க லட்சாதிபதிய கூட நமக்கு நல்லா தெரிஞ்சிருக்காது. ஆனா மில்லியன் வ்யூஸ் கிடைச்ச ஒரு யூட்யூபர் ஒருத்தர, உலகம் முழுக்க தெரியும். ஒரு பிரலபமான யூட்யூபர், பல லட்சம் இல்ல.. பல மில்லியன் ரசிகர்களை கொண்ட ஒரு யூட்யூப் பிரபலம்.

  நானும் Chandru உம் பிரிஞ்சுட்டோம் | Youtuber Janani Exclusive Interview | Filmibeat Tamil

  வெளில எங்கயாச்சும் பார்த்தாலே.." நீங்க அந்த எல்டர் கேர்ள்"தானே என கேட்கும் அளவுக்கு பிரபலம். நரிக்கூட்டம் சேனலின் மூலம் வைரலாகி உலகளாவிய ரசிகர்களை வைத்திருக்கிறார் ஜனனி. இவரது கணவன் மனைவி வீடியோக்கள் மிகவும் பிரபலம்.

  வயது குறைந்த துருதுரு பையன் சந்த்ருவுக்கு, அவரை விட அதிகமான வயதான ஜனனி மனைவியாக நடித்திருப்பார். அன்பும் காதலும் அக்கறையும் 90s kidsக்கே உரிய துருதுருப்பும் அத்தனை அன்யோன்யமுமாக இருவரும் மிக எதார்த்தமாக நடித்திருப்பார்கள்.

  கொரோனாவை நினைச்சா வெளிய வரவே பயமா இருக்கு… நடிகை ஜனனி !கொரோனாவை நினைச்சா வெளிய வரவே பயமா இருக்கு… நடிகை ஜனனி !

  பிரிந்துவிட்டார்கள் இருவரும்

  பிரிந்துவிட்டார்கள் இருவரும்

  தற்போது ஜனனி படங்களிலும் கமிட் ஆகிவிட்டார். அதனால் தன்னோடு ஜோடியாக நடித்த சந்த்ருவும் இவரும் பிரிந்துவிட்டார்கள். வழக்கமாக இதுவரை இருவரும் ஜோடியாக பேட்டிக்கொடுத்தனர். ஆனால் தற்போது முதன் முறையாக தனியாக, ஸ்பெஷலாக நமது ப்லிம்பீட் சேனலுக்கு நிறைய சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொண்டார்.

  பாக்குறவங்க எல்லாம் கேள்வி கேக்குறாங்க?

  பாக்குறவங்க எல்லாம் கேள்வி கேக்குறாங்க?

  கேள்வி : "ரசிகர்கள் வரவேற்பு எப்படி இருக்கு எல்டர் கேர்ள்-க்கு"?
  பதில் : ரொம்பவே சந்தோஷமா இருக்கு. பாக்கறவங்கல்லாம் ஜனனிதான-ன்னு கேக்கறத விட, " நீங்க அந்த எல்டர் கேர்ள் தான" அப்படின்னு தான் கேக்குறாங்க. ஜான் பத்தி நிறையபேர் விசாரிப்பாங்க. "உண்மைய சொல்லுங்க.. நீங்க சந்த்ருவ தான லவ் பண்றீங்க? நீங்க நெஜமாவே கணவன் மனைவிதான? " இப்படில்லாம் கேட்பாங்க. ஆனா அல்ரெடி அவரு கமிடட். அதயும் சொல்லிக்கிறேன். இது வெறும் ஆக்டிங் தான். மக்கள் இன்னும் மறக்கவே இல்ல. நல்ல ரெஸ்பான்ஸ் இப்பவும் இருக்கு.

  காரணம் என்ன?

  காரணம் என்ன?

  கேள்வி : " எதுக்காக எல்டர் கேர்ள், சின்ன பையன கல்யாணம் பண்ணிக்கிறத பத்தி, இப்படி ஒரு டாபிக் எடுத்தீங்க?"
  பதில் : வழக்கமா எல்லாருக்கும் மனைவிக்கு வயசு அதிகம்ன்னா, ஒரு அதிகாரம்,திமிர்,ஆளுமை, மெச்சூர்ட்டி இருக்கும்னு நெனப்பாங்க. அதல்லாம் உடைக்கனும்ன்னு தான் இந்த டாபிக் தோனுச்சு. ஆனா இந்த எல்டர் கேர்ள் எபிசோட் ல்லாம் பார்த்துட்டு, பல பேர் " பாத்தியா.. இவங்கள மாதிரி அக்கறையா புரிதலா இருக்கனும்"-ன்னு சொல்லி நிறைய மாற்றங்கள், நிறைய பேர் கிட்ட வந்துருக்கு.

  அப்படி எதாச்சும் ஆசை உண்டா?

  அப்படி எதாச்சும் ஆசை உண்டா?

  கேள்வி: "நீங்க நடிச்ச மாதிரியே உங்கள விட வயசுல சின்னவர்தான் கணவரா வரனும்ன்னு எதாச்சும் ப்ளான் இருக்கா?
  பதில் : உண்மையா சொல்லனும்ன்னா.. எனக்கு கல்யாணத்துலயே இஷ்டம் இல்ல.. ஒரு வேள என்ன புரிஞ்சிக்கிட்டவர் கிடைச்சா ஓக்கே. வயசோ, கலரோ,மதமோ வேற எதுவும் பாக்க மாட்டேன். "ப்ரபோசல் ஏகப்பட்டது வந்துகிட்டு இருக்கு . சிலர் ரொம்ப சீரியஸால்லாம் கமெண்ட்ஸ் ல கேட்டுகிட்டு இருக்காங்க. ஒருத்தர் வெளி நாட்டுல இருந்து, எங்க அம்மா அப்பா கிட்ட சொல்லி பேச சொல்லவா.. ப்ளைட் டிக்கெட் போடவான்னு ல்லாம் கேட்டுகிட்டு இருக்காரு. இதெல்லாம் வரும் போகும். 5 வருஷமா சினிமாவுல நடிக்க ரொம்பவே போராடிகிட்டு இருக்கேன். வீட்ல ஒத்துக்கல. இந்த சீரிஸ்ல்லாம் பாத்துட்டு எங்க பாட்டி, நல்லா இருக்கே இந்த சீரியல்ன்னு ல்லாம் அம்மா கிட்ட சொல்லி, அப்பறம்தான் வீட்ல ஃபுல் சப்போர்ட்டே கிடைச்சது.

  எல்டர் கேர்ள் டீம்

  எல்டர் கேர்ள் டீம்

  கேள்வி: "இத்தன பெரிய வெற்றிய தந்துருக்க உங்க டீம் ல எத்தன பேர் இருக்கீங்க"
  பதில் : "ரொம்ப பெரிய டீம் ல்லாம் இல்ல, நானு, சந்த்ரு,அவனோட தங்கச்சி. அவ்ளோதான். நாங்களே ஷூட், எடிட் எல்லாமே. அதுலயும் சந்த்ரு எனக்கு சொல்லிட்டு போயிடுவான், நான் உட்கார்ந்து எடிட் பண்ணிட்டு இருப்பேன். நான் நடிக்க, அவன் எடுப்பான். அவன் நடிக்கிறப்ப நான் எடுப்பேன். நாங்க ரெண்டு பேரும் நடிக்கறப்போ அவனோட சிஸ்டர் எடுப்பாங்க. கண்டண்ட் நல்லா இருந்தா கண்டிப்பா நல்லா போகும்.

  நடிகை ஓவியாவுடன் நட்பு

  நடிகை ஓவியாவுடன் நட்பு

  கேள்வி: "அடுத்து படமெல்லாம் நடிக்கிறீங்க போல"
  பதில் : "ஆமா.. ஓவியா கூட ஒரு வெப்சீரீஸ் பண்னிகிட்டு இருக்கேன். ரொம்ப துறுதுறுன்னு ஒரு கேரக்டர். ஓவியாவோட க்ளோஸ் ஃப்ரண்ட் கேரக்டர். என்ன கொஞ்சம் கஷ்டம்ன்னா,... ஓவியாவ நான் திட்ற மாதிரில்லாம் இருக்கு. சரி படத்துக்கு தான அப்படின்னு நெனச்சிக்கிறேன். இருந்தாலும் ஓவியா செம கேரக்டர் ஷூட்ல அவங்க வந்தாலே சீரிச்சிகிட்டு ஜாலியா இருக்கும். இன்னொரு படம் கமிட் ஆகிருக்கு. செகண்ட் ஹீரோயின் மாதிரி ஒரு ரோல். ப்ராஸஸ் ல இருக்கு. இப்ப அடுத்ததா நானே ஒரு சேனல் யூட்யூப் ஆரம்பிக்கப்போறேன். எல்டர் கேர்ள் வரப்போறா.."

  சந்த்ரு மீண்டும் வருவாரா

  கேள்வி: " புது யுடியூப் சேனல் , அதுலயும் சந்த்ரு வருவாரா?"
  பதில் : "வருவானான்னு தெரியல. வந்தா ஓக்கேதான். சின்ன மிஸ் அண்டர்ஸ்டேண்டிங் வந்ததால சந்த்ருவும் நானும் பிரிஞ்சிட்டோம். இந்த ப்ராஜெக்ட்ல எப்படின்னு தெரியல. எது நடந்தாலும் நல்லதுக்கே."
  என்று சொல்லி முடித்தார் ஜனனி. மாபெரும் வெற்றிப்படைப்புகளை தரப்போகும் திறமைசாலியான எல்டர் கேர்ள் ஜனனிக்கு ஃப்லிம்பீட் சார்பாக வாழ்த்துக்கள் என்று சொல்லி முடித்தோம் . மேலும் கலகலப்பான சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொண்ட அந்த வீடியோவைக்காண ஃப்லிம்பீட் தமிழ் யூட்யூப் லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  English summary
  Youtuber Janani's exclusive interview for Tamil filmibeat. Janani has shared her interesting experience with Tamil filmibeat.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X