கர்ப்பமாக இருக்கும் இசக்கிக்கு மருந்தில் விஷம்.. சௌந்தரபாண்டி சிக்கினாரா? அண்ணா சீரியல்!
சென்னை: கர்ப்பமாக இருக்கும் இசக்கிக்கு மருந்து கொடுக்க வந்த பாட்டி, சௌந்தரபாண்டியை தனியாக அழைத்துச் சென்று, உனக்கும் சண்முகத்துக்கும் ஆயிரம் பிரச்சனை இருக்கலாம். ஆனால், பரணி கல்யாணமாகி இத்தனை வருஷமாகியும் கர்ப்பமாகாமல் இருப்பது சரியில்லை. முதலில் உன் மகள் பரணி கர்ப்பமாகணும், நம்ம வீட்டுக்கு அடுத்த வாரிசு வரணும் என்று சொல்ல தூரத்திலிருந்து இதை பார்த்த சண்முகம் தவறாக புரிந்து கொள்கிறான்.
அதேபோல, வீரா, போலீசாக வேலையில் சேர அப்பா வைகுண்டத்தை அழைத்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு கிளம்புகிறாள். அப்போது, வைஜெயந்தி மாலா ரவுடிகளிடம் ஒரு நகையை கொடுத்து வீரா, வைகுண்டம் ஏறும் பஸ்ஸில் ஏறி வீராவின் பையில் நகையை வைத்து அவளை திருட்டு கேசில் உள்ளே தள்ள திட்டம் போடுகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடில்: இசக்கிக்கு மருந்து கொடுக்க போகும் சமயத்தில் சண்முகம் கொடுக்க வேண்டாம் அதில் விஷம் கலந்து இருக்கு என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர், இந்த சௌந்தரபாண்டி தான் ஏதோ கலந்து இருக்கார் என்று சொல்ல எல்லாரும் குழப்பம் அடைகின்றனர்.சௌந்தரபாண்டி என் பேரனுக்கு நானே விஷம் கொடுப்பேனா என்று கேட்க சண்முகம் அப்படினா இந்த மருந்தை நீ முதலில் குடி என்று சொல்ல சௌந்தரபாண்டி நான் எதுக்குலே குடிக்கணும் என்று ஒரு ட்ராமா போடுகிறான்.

சௌந்தரபாண்டியன் சிக்கினாரா: அதனை தொடர்ந்து பாண்டியம்மாவிடம் நீ குடி அக்கா என்று சொல்ல அவள் எனக்கு வேண்டாம் என்று சொல்கிறாள். அடுத்து சனியனை குடிக்க சொல்ல அவனும் முடியாது என்று மறுக்க சௌந்தரபாண்டி பாக்கியத்தை குடிக்க சொல்கிறார். பாக்கியம் இப்போ தான் எனக்கும் உங்க மேல சந்தேகமா இருக்கு என்று சொல்ல சௌந்தரபாண்டி அந்த மருந்தை குடித்து நெஞ்சை பிடித்து உட்காருவது போல் ட்ராமா போட்டு சிரிக்கிறான். பின் இசக்கிக்கு மருந்து கொடுக்க அவள், தலை சுற்றுவதாக சொல்ல, சண்முகம், சௌந்தரபாண்டியனை அடிக்க பாய்கிறான். அப்போது தான் அது சண்முகத்தின் கற்பனை என தெரிய வருகிறது. இதையடுத்து, இசக்கிக்கு மருந்து கொடுக்கப்படுகிறது.
பழி சுமந்த வீரா: மறுபக்கம் வைஜெயந்தி திட்டத்தின் படி ரவுடிகள் ஒரு பெண்ணின் நகையை பறித்து அதை வீராவின் பையில் போட்டு விடுகின்றனர். அடுத்து அந்த பெண் நகையை காணவில்லை என சத்தம் போடுகிறாள். இப்போது தான் இந்த நகையை கடையில் இருந்து வாங்கிக் கொண்டு வந்தேன் என்று அழுது கூப்பாடுபோட, வீரா அந்த பெண்ணை சமாதானப்படுத்தி வண்டியை போலீஸ் ஸ்டேஷனுக்கு விட சொல்கிறாள். ஸ்டேஷனுக்கு வந்ததும் ஒவ்வொருத்தரையாக பரிசோதனை செய்கிறார் வைஜெயந்தி. அப்போது யாரிடமும் நகை இல்ல, அப்போ நகை எங்கே போய் இருக்கும் என்று கேட்க, அந்த ரௌடி இந்த பெண்ணின் பையை மட்டும் சோதனை போடவில்லை என சொல்ல, வைஜெயந்தி வீராவின் பையை சோதனை போடுகிறாள். அதில் நகை இருக்கிறது. இதைப்பார்த்து, வீரா அதிர்ச்சி அடைந்து, இந்த நகை என் பையில் எப்படி வந்தது என்றே தெரியாது என சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











