இசக்கியை காப்பாற்ற முடியாமல் தவிக்கும் பரணி... நாடகமாடும் சௌந்தரபாண்டி.. அண்ணா சீரியல்!
சென்னை: போலீஸ் வேலைக்கு சென்ற வீரா, ஸ்டேஷனில் ஆர்டரை கொடுத்துவிட்டு, வெளியில் இன்ஸ்பெக்டருக்காக காத்துக்கொண்டு இருக்கிறாள். இதை தெரிந்து கொண்ட, வைஜெயந்தி, அந்த இன்ஸ்பெக்டருக்கு ஃபோன் போட்டு, அவ அங்கே வந்துட்டா, நீ, அவளை கண்டுக்காதே, அவ அப்படியே காத்துக்கிட்டு இருக்கட்டும் என சொல்ல, இன்ஸ்பெக்டரும் சரி மேடம் அப்படியே செய்கிறேன் என சொல்லிவிட்டு, வீராவை வேண்டும் என்றே காக்க வைத்துவிட்டு வெளியில் சென்று விடுகிறார்.
மறுபக்கம், இசக்கி கீழே விழுந்து வயிற்றில் அடிபடுவது போல கனவு கண்டு பயந்து எழுந்திருக்கிறாள். அந்த நேரம், பாக்கியவை காபி போட்டு கொடுக்க சொல்ல, பாக்கியம் காஃபி எல்லாம் ஒன்னும் கிடையாது நான் போய் இசக்கியை பாத்துட்டு வருகிறேன் என்று கிளம்ப, சௌந்தரபாண்டி இப்போ, எதுக்கு அங்கே போக வேண்டும் என்று கேட்கிறான். உடனே பாக்கியா, கெட்ட கனவு பற்றி சொல்கிறாள். இதைக்கேட்ட சௌந்தரபாண்டி, அவ அந்த வீட்டில் இருந்தா, எப்படி நல்லா இருப்பா என ஏற்றி விடுகிறான். பாக்கியத்தின் மூலமாக இசக்கியை வீட்டுக்கு வரவைத்து விட வேண்டும் என திட்டம் தீட்டுகிறான் சௌந்தரபாண்டி. பிறகு பாக்கியம் மற்றும் சிவபாலன் என இருவரும் காரில் வந்து கொண்டு இருக்க. பாக்கியம் கனவு கண்டது போல, இசக்கி கீழே விழுந்து வலியால் துடித்துக்கொண்டு இருக்கிறாள்.

அண்ணா சீரியல்: இதையடுத்து, பாக்கியத்தை மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். அப்போது, இசக்கியை பரிசோதனை செய்த டாக்டர்கள் தாய் அல்லது குழந்தை இரண்டில் ஒரு உயிரை தான் காப்பாற்ற முடியும் என அதிர்ச்சி கொடுக்கின்றனர். யாரை காப்பாற்ற வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதையடுத்து, மொத்த பேரும் ஹாஸ்பிடலில் கூடி விட பரணி உள்ளே சென்று மீண்டும் இசக்கியை பரிசோதனை செய்கிறாள். இரண்டு பேரையும் காப்பாற்ற ஒரு வழி இருப்பதை கண்டுபிடிக்கிறாள். அப்போது இசக்கியை எழுப்பிய பரணி, இசக்கி இப்போ உனக்கு ட்ரீட்மென்ட் செய்யப்போகிறேன். இதற்கு நீ தூங்காம இருக்க வேண்டும். அப்போது தான் உன் குழந்தை நல்லா இருக்கும். தயவு செய்து வலியை தாங்கிக்கோ என்று சொல்ல, இசக்கியும் சரி பரணி நான் வலியை தாங்கிக் கொள்கிறேன் என்கிறாள்.

நாடகமாடும் சௌந்தரபாண்டி: இசக்கிக்கு உள்ளே சிகிச்சை நடந்து கொண்டு இருக்க, மருத்துவமனைக்கு வரும் சௌந்தரபாண்டி, அய்யோ என் மருமகளுக்கு என்ன ஆச்சு, வயிற்றுல அடிபட்டுவிட்டதாமே... பாக்கியம் நீ கனவு கண்டது போல ஆகிவிட்டதே என புலம்பி அழுது நாடகமாடுகிறார். இதைப்பார்த்த அனைவரும் எரிச்சல் அடைகின்றனர். இதையடுத்து பரணி இசக்கியையும் குழந்தையையும் காப்பாற்றி விடுகிறாள். இன்னொரு பக்கம் போலீசில் வேலையில் வந்த வீரா ரொம்ப நேரமாக வெளியே காத்துக் கொண்டிருக்கிறாள். அடுத்து ஸ்டேஷனுக்கு வந்த வைஜெயந்தி இந்த பொண்ணை எதுக்கு வெளியே காக்க வச்சிட்டு இருக்கீங்க என்று விசாரிக்க இன்ஸ்பெக்டர் அந்த பொண்ணு வேலையில் சேர வந்திருப்பதாக சொல்கிறார். வைஜெயந்தி எனக்கு தெரிந்த பொண்ணு தான்.. நல்ல பொண்ணு என்று வேலையில் சேர சொல்லி விட்டு வாழ்த்து சொல்ல வீரா வைஜெயந்தி தனக்கு உதவியதாக தவறாக புரிந்து கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











