ரத்னாவின் வாழ்க்கை என்னாகும்.. சண்முகம் எடுக்கப்போகும் முடிவு என்ன.. அண்ணா சீரியல்!

சென்னை: பஞ்சாயத்தில் பேசிய வெங்கடேசன், நானும் என் மனைவி ரத்னாவும் காதலிச்சு தான் திருமணம் செய்து கொண்டேம். ஆனால், கல்யாணம் ஆனதிலிருந்து எங்க ரெண்டு பேரையும் பிரித்து வைத்து இருக்கிறார் என்கிறான். புருஷன் பொண்டாட்டியை பிரிக்கணும்னு ஆசைப்பட மாட்டாங்க என பஞ்சாயத்தார் சொல்கின்றனர். அதை தொடர்ந்து, பரணி, ரத்னா ஆசைப்பட்டு அமைத்து கொண்ட வாழ்க்கை தான் இது.. ஆனால் கல்யாணத்துக்கு பிறகு ஒரு பொண்டாட்டியை எப்படி பார்த்துக்கணுமோ அப்படி பார்த்துக்கிற தகுதி இவன் கிட்ட இல்லை. ரத்னா வாழ்ந்த வாழ்க்கை போதும், அந்த தாலியை கழட்டி வெற்றிலை மேல் வை என்ற சொல்கிறாள்.

அப்போது, பஞ்சாயத்தார்கள் ரத்னாவின் முடிவை கேட்க, ரத்னா இவன் பொண்டாட்டியை மதிக்க தெரியாதவன். எந்த ஒரு புருசனும், செய்யக்கூடாத வேலையை இவன் செய்தான் இவன்கூட, வாழவே எனக்கு விருப்பம் இல்லை. இவனுக்கும் எனக்கும் உறவுனு சொல்ல இந்த தாலி தான் காரணமா இருக்குனா அந்த தாலி எனக்கு தேவை இல்லை என சொல்லி தாலியை கழட்டும் நேரத்தில், ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ், எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க, எனக்கும் ரத்னாவிற்கும் இதுவரைக்கும் முதல் இரவே நடக்கவே இல்லை. அதனால் தான் இப்படி பேசுகிறாள். அவளுக்கும் எனக்கும் முதல் இரவு நடக்கட்டும் அதுக்கு அப்புறம் அவ என்னை வேண்டாம் என்று சொல்லட்டும் என்று சொல்லிக்கொண்டே, ரத்னாவின் கையை பிடித்து இழுக்க வருகிறான்.

Zee tamil Anna

தாலியை கழட்டி வீசிய ரத்னா: அப்போது, சண்முகம் வெங்கடேஷினை மிதித்து கீழே தள்ளி, என்ன தைரியம் இருந்தால் என் கண் முன்னாடியே ரத்னா மேல கையே வைப்ப. இன்னைக்கு நீ செத்தடா என்று மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்துக்கொண்டு குத்த வருகிறான். அப்போது, அடி ஆட்கள் சண்முகத்தை தடுத்து நிறுத்தி அவனை அடி வெளுக்கிறார்கள். அப்போது சண்முகம் வைத்து இருந்த கத்தி கீழே விழுந்தவிட, அதை வெங்கடேஷ் எடுத்துக்கொண்டு சண்முகத்தை குத்த வருகிறான். இதைப்பார்த்த முத்துப்பாண்டி, ஓடிவந்து தடுத்துவிடுகிறான்.

Zee tamil Anna

நடந்தது என்ன: இதையடுத்து பஞ்சாயத்து மீண்டும் கூட, சண்முகம், ரத்னா அந்த தாலிய கழட்டி அவன் மூஞ்சிலேயே வீசிட்டு வா என்று சொல்ல, ரத்னா வெங்கடேஷன் அருகில் வந்து உன்னை நான் உருகி உருகி காதலித்தேன். நீ தான் வேண்டும் என்று உனக்கா கல்யாணமே செய்து கொள்ளாமல் காத்திருந்தேன். ஆனால், நீ என்னை ஏமாற்றி விட்ட, இனிமேல உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமே இல்ல. எந்த ஒரு புருஷனும் இன்னொருத்தன் கூட தன்னுடைய மனைவியை சேர்த்து வைத்து அசிங்கப்படுத்த நினைக்கக்க மாட்டான். ஆனா, அப்பேர்பட்ட காரியத்தையே நீ செஞ்சிட்ட, உன்னை என் புருஷன் என்று சொல்லவே எனக்கு அசிங்கமா இருக்கு, என்று வெங்கடேஷனின் கண்ணத்தில் பளார் பளார் என்று அடித்து. இனிமேல உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தாலியை தூக்கி வெங்கடேஷன் முகத்திலேயே வீசுகிறாள். சண்முகம் துணிச்சலாக தனது தங்கை எடுத்த முடிவை பாராட்டி அவளை, என் தங்கச்சிக்கு நான் இருக்கேக்டா என்று சொல்லிவிட்டு, ரத்னாவை வீட்டிற்கு அழைத்து செல்கிறான்.

Zee tamil Anna

சண்முகம் எடுத்த முடிவு: பின் அறிவழகனை பார்த்து, என்னுடைய தங்கச்சிக்காக பெரிய அவமானத்தை எல்லாம் தாங்கிக்கிட்ட உனக்கு ரொம்ப நன்றி. என்னுடைய தங்கைக்கு நீ தான் நல்ல வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்று கேட்கிறான். ஆனால், அதற்கு கொஞ்சம் நேரம் ஆகும். ரத்னா இப்போது இந்த மனநிலையில் இருந்து வெளியே வரவேண்டும் அதுவரைக்கும் நீங்கள் தான் காத்திருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான். இதைகேட்ட அறிவழகன், சிறுவயதில் நான் காதலித்த பெண்னே கல்யாணம் செய்து கொள்ள வாய்ப்பு வந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறான்.

மறுபக்கம் பரணி, சௌந்தரபாண்டியனை பார்த்து எல்லா பிரச்சனைக்கும் நீங்கதான் காரணம். நீங்க திருந்தவே மாட்டீங்களா, சண்முகத்துக்கு எவ்வளவு பிரச்சினை கொடுத்துகிட்டே இருப்பீங்க என்று கேட்டு சண்டை போடுகிறாள். அப்போது சௌந்தர பாண்டியன் இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான் பஞ்சாயத்துல என்ன நடக்குதுன்னு பார்க்கத்தான் வந்தேன் என்று சொல்ல. அதுதான் நாங்க பார்த்தோமே சண்முகத்தை வெங்கடேஷ், குத்த வரும் போது நீங்கதான் அவன் கையை புடிச்சிக்கிட்டு இருந்தீங்க உங்களை தூக்கி உள்ள வச்சாத்தான் நீங்க அடங்குவீங்க என்று பரணி சத்தம் போடுகிறாள்.

Zee tamil Anna

சிறையில் வெங்கடேஷ்: முத்துப்பாண்டி, வெங்கடேசனை கைது செய்து போலீஸ் ஸ்டேஷனில் வைத்து இருக்கிறாள். அப்போது, வெங்கடேசன், இப்ப யாரும் என்னை ஜாமீன்ல எடுப்பாங்கனு தெரியலையே. அந்த சௌந்தரபாண்டியன் எல்லாத்தையும் செய்ய சொன்னாரு கடைசியில் அவரே நம்மள மாட்டி விட்டுட்டாரு. இப்ப நம்ம என்ன செய்வோம் என்று யோசித்து கொண்டு இருக்க அந்த நேரம் பார்த்து வெங்கடேசனின் அப்பா, அம்மா இருவரும் ஸ்டேனுக்கு வந்து, ஏன்டா இப்படி எல்லாம் பண்ற, நாங்க எவ்ளோ சொல்லியும் நீ கேட்கவே இல்லையே என்று வெங்கடேஷனுக்கு அறிவுரை கூறுகின்றனர்.

அப்போது, வெங்கடேஷன், என்ன ஆனாலும் அந்த ரத்னாவையும் அறிவழகனையும் சும்மாவே விடமாட்டேன் வெளியில வந்ததுமே அவங்க ரெண்டு பேரையும் நான் பழி வாங்குவேன் என்று சொல்லிக் கொண்டிருக்க அப்போது வரும், முத்துப்பாண்டி, அதுக்கு முதலில் இங்க இருந்து வெளியில போனா தானே முடியும். என்னென்ன கேஸ் இருக்கோ அத்தனை கேசையும் போட்டு உன்னை உள்ள தள்ளி வெளியிலே வர முடியாத படி செய்கிறேன் என்று சொல்கிறான்.

வெளிநாட்டுக்கு போவேன்:அதன் பின் வீட்டிற்கு வரும் பரணி, சண்முகத்திடம் ரத்னாவிற்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்க வேண்டும் என்று சொல்கிறாள். அதை அமைத்து கொடுத்துவிட்டுத்தான் நான், படிக்க போக வேண்டும் என்று சொல்ல, அப்போது சண்முகம் இன்னும் என் மேல உனக்கு கோவம் போகவில்லையா என்று கேட்க, இதற்கும் அதற்கும் என்ன சம்மந்தம். நான் வெளிநாட்டுக்கு போய் கண்டிப்பா படிப்பேன். என்னை யாரும் தடுக்க முடியாது. அதற்குள் இந்த ரத்னாவிற்கு ஒரு நல்லது செய்துவிட்டால் மகிழ்ச்சியா போவேன் என்ற சொல்கிறாள். அதைக்கேட்டு சண்முகம் வருத்தப்படுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X